நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம்!
குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது. ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது. இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது, கோபம் கொள்வது, வருத்தப்படுவது, பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள். இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான். ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை?
காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம். குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும், கேட்கும், பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள். அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள். குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள். ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது, கவனம், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும். நினைவுகளை கையாள்வதும் பின்னாளில் கைவசப்படும்.
கவனம் என்பது தான் பேச நினைக்கும் கருத்து, எழுத்து, சிந்தனை ஆகியவற்றில் திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். அடுத்து, உடனே கோபம் கொண்டு அழமாட்டார்கள். பிற உணர்வுகளையும் மெல்ல புரிந்துகொண்டு வெளிப்படுத்துவார்கள். இதுபற்றி ஆய்வொன்று செய்யப்பட்டது. அதில் குழந்தைகள் தங்களை பிறர் கண்காணிக்கிறார்கள் என்று தெரிந்தால் தங்களது கெட்ட பழக்கங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக குழந்தைகள் பெற்றோர்கள் கூறுவதை கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதை பார்த்து திரும்ப செய்கிறார்கள். அப்பா மாதிரி போனை பார்க்கிறான். கம்ப்யூட்டரை நோண்டுகிறான் என்று வீடுகளில் பேசி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படி கூறுவது எல்லாமே குழந்தைகள் பிறரைப் பார்த்து அவர்களைப் போலவே இமிடேட் செய்யத்தொடங்கிவிட்டார்கள் என்று கூறலாம். இதுவும் அவர்களின் மூளை வளர்ச்சிபெறத் தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறிதான்.
குழந்தைகள் மூளை வளர்ச்சி பெறும்போதுதான் அவர்கள் தவழ்ந்து தடுமாறி மெல்ல நிற்கத் தொடங்குவார்கள். அதோடு வாழ்க்கையின் முக்கிய அம்சமான உடல், மனம் ஒத்திசைவாகி பழக்கங்களை கடைபிடிக்கத் தொடங்குவார்கள். இப்படி தொடங்கும் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை பின்பற்றுபவர்களுக்கு பரிசும், தவறாக செய்தால் கண்டிப்பும் தேவை. ஆரா்ய்ச்சியாளர்கள் 2016 இல் எட்டாயிரம் குழந்தைகளிடம் செய்த ஆய்வில் நல்ல பழக்கங்களை கடைபிடித்தவர்களுக்கு 25 சென்டுகள் வழங்கப்பட்டன. இந்த எண்ணிக்கை கூடியது உண்மை. ஆனால் நாளடைவில் இப்படி சிறியளவு பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. காரணம் அது மூளைக்கு பழக்கப்பட்டுவிட்டது. அதற்குப்பிறகு அவர்களுக்கு பரிசு கொடுப்பது அவசியம் இல்லை என்று ஆகிவிட்டது.
உணவுகளின் விவகாரமும் இப்படிப்பட்டதுதான். அவர்களுக்கு அனைத்து வித சுவைகளும் அறிமுகமாவது அவசியம். குழந்தைகளுக்கு பதினெட்டு முதல் இருபத்திநான்கு மாதங்களுக்குள் பல்வேறு வித உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது முக்கியம். அப்படியில்லாதபோது அவர்கள் புதிய உணவுகளை பரிசோதித்து பார்ப்பது கடினமாகிவிடும். சில குறிப்பிட்ட காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவது அவர்களுக்கு அனைத்து சக்திகளையும் வழங்காது. உணவுப்பழக்கத்தில் சுற்றியுள்ள நண்பர்கள், விளம்பரங்கள், இணையம் ஆகியவற்றையும் கூறலாம். இதன் செல்வாக்கால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பெப்பா எபெக்ட் என்று கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை குழந்தைகள் அறியும்போது அவர்களுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதாகிவிடும்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக