நகைச்சுவையை செய்ய நாட்டில் ஜனநாயகத்தன்மை அவசியம்! - சைரஸ் புரோச்சா

 

 

https://media1.mensxp.com/media/content/2016/Aug/cyrus-broacha-comedian-interview-980x457-1470031005_1100x513.jpg

சைரஸ் புரோச்சா

 

 

 

 

சைரஸ் புரோச்சா


எழுத்தாளர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்



உங்களை ஹஸே தோ பாஸே நிகழ்ச்சியில் பங்கேற்றத் தூண்டியது எது?


என்னை நானே எவ்வளவு சிறந்தவன் என்று கண்டுபிடிக்கத் தோன்றியது. அந்த முயற்சியின் விளைவாகவே நான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன். நிகழ்ச்சியின் கான்செப்ட் வேடிக்கையும், சுவாரசியமும் கொண்டது. நீங்கள் ரிகானா போன்ற புகழ்பெற்ற ஒருவராக இருக்கலாம். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது கடினமான ஒன்று. நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்று நீங்களே தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு.


பொதுமுடக்க காலத்தில் உங்களை எப்படி பரபரப்பாக வைத்துக்கொள்கிறீர்கள்?


தினசரி எனது நாயுடன் ஐந்துமுறை வெளியே செல்கிறேன். அதிகாலை ஆறுமணிக்கு உடற்பயிற்சி செய்கிறேன்.


இந்தியாவில் நகைச்சுவை என்பது எப்படி இருக்கிறது?


நீங்கள் நகைச்சுவை செய்வதற்கு நாட்டில் ஜனநாயகத்தன்மை தேவையாக உள்ளது. கூடவே பிரச்னைகளை சமாளிக்க நல்ல வழக்கறிஞரும் தேவை. இதில் நிறைய பிரச்னைகளும் உள்ளதுதான். அதிலும் நீங்கள் மக்கள் நினைப்பதுபோல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியும். ஜனநாயகத்தன்மையோடு நகைச்சுவை செய்வதற்கு அச்சுறுத்தல் இல்லாத தன்மையும் முக்கியம். கலைஞர்கள் கிரியேட்டிவாகவும், சுதந்திரமாகவும் தங்களது கலையை வெளிப்படுத்தவேண்டும்.


உங்களது பாட்காஸ்டில் உங்களது கருத்துகள் பெஸ்ட் என்று கூறப்படுகிறதே?


நான் தொடங்கிய பாட்காஸ்டில் உங்கள் மனதில் தோன்றிய விஷயங்களை பேசலாம். இதனை இலவசமாக கேட்க முடியும். பொதுமுடக்கத்தால் தினசரி தொழிலாளர்கள் பலருக்கும் எங்களுக்கும் வேலைகள் கிடைக்கவில்லை. தடுப்பூசி, மருந்துகள், சிகிச்சை ஆகியவற்றால் பொதுமுடக்கத்தை எளிதாக சமாளிக்க முடியும்.


இந்தியா டுடே


அனு பிரபாகர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்