குடிநோயைக் கட்டுப்படுத்த எக்ஸ்டஸி உதவுமா?
ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது. மது அருந்துவது என்பது பெரும்பாலான மேற்கு நாடுகளில் கலாசாரமாகவே உள்ளது. ஆனால் தொடர்ச்சியாக குடித்து குடிநோய்க்கு உள்ளாவதை எப்படி தடுப்பது என்பது மருத்துவ்துறையில் முக்கியமான பிரச்னையாக உள்ளது. இதற்கு எம்டிஎம்ஏ வேதிப்பொருளைப் பயன்படுத்தி சைக்கோதெரபி கொடுக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் மட்டும் மது அருந்துவதால் ஆண்டிற்கு எட்டாயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர். நாட்டில் எழுபது சதவீத வன்முறையும் உருவாகிறது. இப்படி மது அருந்துபவர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 3.5 பில்லியன்களாக உள்ளது. மது அருந்துவதை அடிமைத்தனமாக மாறியது என்ற உண்மை தெரியாமல் இங்கிலாந்திலுள்ள ஆண்கள் 9 சதவீதமும், பெண்கள் 3 சதவீதமும் மதுவில் மிதக்கின்றனர். இவர்களது வாழ்க்கை மதுவைச் சார்ந்தே அமைந்துள்ளது. 3,4 மெத்திலின்டையாக்சி மெத்தாம்பீட்டமைன் அல்லது எக்ஸ்டசி என பொதுவாக அழைக்கப்படும் எம்டிஎம்ஏ வேதிப்பொருள் பயன்படுகிறது. இதனை மருத்துவத்துறையில் பிடிஎஸ்டி பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மதுவில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பழக்கத்தை கைவிடும் காலமான முதல் நான்கு ஆண்டுகளில் மன உறுதி தடுமாறினால் மீண்டும் மது அருந்த தொடங்கிவிடுவார்கள். பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தவிர்க்க எம்டிஎம்ஏவைப் பய்ன்படுத்த முடியுமா என சோதித்துள்ளனர். இப்படி கூறுவதன் அர்த்தம், குடிநோய்க்கு இது மருந்து என்பதல்ல என்பதை படிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உளவியலாளர் டாக்டர் லாரி ஹிக்பெட், எம்டிஎம்ஏ என்ற மருந்து உளவியல் தெரபிக்கு பயன்படுத்தினார். மதுவின் பயன்பாட்டிற்கு மனதில் உள்ள தூண்டல் முக்கியமான காரணம் என்பதால் அதனை உளவியல் தெரபி மூலம் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. நான் பத்து ஆண்டுகளாக குழந்தைகளுக்கும் வயது வந்தவர்களுக்கும் உளவியல் தெரபி சார்ந்து சிகிச்சை வழங்கிக்கொண்டிருக்கிறேன். இதன்மூலம் உளவியல் குறைபாடுகளை தீர்த்துள்ளேன். உளவியல் சார்ந்த பிரச்னைகளை எளிதாக தீர்க்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் கடந்த கால சிக்கலை தெரபி மூலம் தீர்க்க முயன்று வருகிறோம் என்றார் லாரி. எம்டிஎம்ஏ மருந்து பிரச்னையை நோயாளி வெளிப்படையாக கூறவேண்டும் என்பதற்காக பயன்படுத்துகின்றனர்.
1912ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த மெர்க் பார்மசூட்டிகல் என்ற நிறுவனம் எம்டிஎம்ஏ மருந்தைக் கண்டுபிடித்தது. செயற்கையான முறையில் ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தாக எம்டிஎம்ஏ பயன்பட்டது. 1927ஆம் ஆண்டுதான் அட்ரினலின் ஹார்மோனைப் போன்ற வேதி அமைப்பைக் கொண்டிருந்தது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. பின்னர் விலங்குகளுக்கு இந்த வேதிப்பொருள் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. 1950இல் அலெக்ஸாண்டர் சுல்கின், உறவு தொடர்பான தெரபிகளுக்கு எம்டிஎம்ஏவைப் பயன்படுத்தினார்.
இதன் விளைவுகள் வெளியே தெரியத்தொடங்கியது. 1985இல் அமெரிக்கா இதனை பயன்படுத்த தடை செய்த்து. இங்கிலாந்து இதனை கிளாஸ் ஏ வகை வேதிப்பொருளாக 1977இல் அறிவித்தது. ஆராய்ச்சி தவிர பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்எ்ஸ்டி, டிஎம்டி போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிற எம்டிஎம்ஏ, மூளையில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. அரசு தடை விதித்தாலும் கூட ஆராய்ச்சி நோக்கில் எம்டிஎம்ஏ வேதிப்பொருள் தடை செய்யப்பட்டதில் அதிக விருப்பம் இல்லை என்பதாகவே தெரிகிறது. இருபது, முப்பதாண்டுகளாக ஒருவர் மறைத்து வைத்திருந்த நினைவுகளை எம்டிஎம்ஏ மருந்து வெளிப்படையாக பேச வைக்கிறது. இதன் காரணமாக அவரின் வாழ்க்கை பயத்திலிருந்து வெளியே வரும் வாய்ப்பு கிடைக்கிறது. 2000 முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அறுபதாயிரம் பேர் எக்ஸ்டசியை போதைப்பொருளாக பயன்படுத்தியுள்ளனர். இதற்கு அடிமையாவது என்பது குறைவாக நடக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளிலிருந்து அவரை வீட்டு மறுவாழ்வு வழங்க இருக்கும் வாய்ப்பு எம்டிஎம்ஏ மருந்துதான். அதனை நாங்கள் வழங்குகிறோம். இதில் பாதுகாப்பு, ஆபத்து என பிரிக்க ஏதுமில்லை. முடிந்தளவு அவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறோம் என்பது மருத்துவர்களின் வாதமாக உள்ளது. 2011இல் மேற்சொன்ன கூற்றுக்கு மாறாக எம்டிஎம்ஏவைப் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனை சார்ந்து அடிமைப்பட்டு வாழ்பவர்கள் எண்ணிக்கை கூடுகிறது என்பதே இதன் பொருள்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக