இடுகைகள்

சர்ச் எஞ்சின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்நுட்ப உலகில் இருபத்தைந்து