இடுகைகள்

ஆயுஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாநில அரசுகள்தான் ஆயுர்வேத மருத்துவத்தின் புனித தன்மையை கெடுத்துவிட்டன! - தியோபுஜாரி, இந்திய மருத்துவத்துறை

படம்
            மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைசிகிச்சை செய்யலாம் என்று கூறியுள்ளது . இதனை அலோபதி மருத்துவர்கள் எதிர்க்கி்ன்றனர் . கூடுதலாக ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யமுடியுமா என மக்களும் குழப்பத்தில் உள்ளனர் . இதுபற்றி மத்திய அரசின் இந்திய மருத்துவமுறைகள் கௌன்சில் தலைவர் வைத் ஜெயந்த் தியோபுஜாரி கூறுகிறார் . அறுவை சிகிச்சை பற்றிய மத்தி அரசின் புதிய அறிவிப்பு எதற்கு ? 1979 ஆம் ஆண்டு ஆயுர்வேத படிப்பின் முதுகலைதொடர்பாக விதிமுறைகள் உருவாக்கப்பட்டன . 2016 ஆம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான தெளிவிற்காக கூறப்பட்டது . விதிமுறைகள் முன்னமே அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருபவைதான் . நாடெங்கும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடைமுறைப்படுபப்பட்டால் அதனை எப்படி கண்காணிப்பீர்கள் ? நாங்கள் கடுமையாக விதிகளை வகுத்துள்ளோம் . கல்லூரியில் குறிப்பிட்ட தர அளவுகோல் கடைப்பிடிக்கப்படாதபோது நாங்கள் அவர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை . கடந்த ஆண்டு நாங்கள் இம்முறையில் 106 கல்லூரிகளுக்கு இளநிலைப்படிப்பிற்கான அனுமதியை வழங்கவில்லை . அறுவைசிகிச்சையாள