இடுகைகள்

ரவிதேஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!

படம்
  ராவணாசுரா இயக்கம் சுதீர் வர்மா ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது.  இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவர

செம்மரக்கடத்தலில் கொல்லப்படும் நபர்களை தேடிப்போகும் உதவி கலெக்டர்!

படம்
  ராமாராவ் ஆன் டூட்டி 2022 தெலுங்கு ராமாராவ் ஆன் டூட்டி தெலுங்கு ரவிதேஜா, நாசர்,திவ்யான்சா கௌசிக்   படத்தின் தொடக்க காட்சியில் வயதான முதியவர் இறந்துபோன ஆளை யாருக்கும் தெரியாமல் மண்ணைத் தோண்டிப் போட்டு புதைக்கிறார். இதற்கடுத்து, உதவி கலெக்டரான ராமாராவின் அதிரிபுதிரி அறிமுக காட்சி. படம் முழுக்க குற்றச்சம்பவங்கள், அதை எப்படி செய்கிறார்கள், அதில் காவல்துறையின் ஈடுபாடு என ஆழமாக சென்று பேசுகிறது. படத்தில் ராமாராவின் மனைவி, அவரது முன்னாள் காதலி என இரண்டுபேர் இருந்தாலும் நடிப்பதற்கான வாய்ப்பு முன்னாள் காதலியான மாலினிக்கே உள்ளது. சற்று உள்ளடங்கிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்திய நடிப்பு என்றாலும் அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். ராமாராவ் பாத்திரம், மாலினியின் கட்டாய திருமணத்தை புரிந்துகொள்ளும் விதம் முதிர்ச்சியானது. பின்னணி இசை என்றாலே ஒருவர் கர்ண கடூரமாக அலறுவது என சாம் சிஎஸ் புரிந்துகொண்டிருக்கிறாரா என்ன? இசைக்கருவிகளை சிறப்பாக பயன்படுத்தினாலே போதுமானது என தோன்றுகிறது. காதில் அந்தளவு இரைச்சல் கேட்கிறது. சமகால இசைக்கலைஞர்கள் எல்லோருமே இசைக்கலைஞர் அனிருத்தைப் பின்பற்றுகிறார்கள் போல… ப

செய்யும் அனைத்து விஷயங்களிலும் கிக் தேடும் ஆள்- கல்யாண் - கிக் 1 - இயக்குநர் சுரேந்தர் ரெட்டி

படம்
  கல்யாண் -கிக் (தெலுங்கு) ரவிதேஜா இயக்குநர் – சுரேந்திர ரெட்டி வாழ்க்கையை சாதாரணமாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் சாதாரண வாழ்க்கைதான் என்று விடாமல்,   அதை சற்றேனும் சாகசமாக வாழ நினைக்கும் ஆட்கள் சிலர் உண்டு. தேடுவதற்கு சற்று அரிதானவர்கள்தான். ஆனால் கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட ஒருவர்தான் கல்யாண். கல்யாணைப் பொறுத்தவரை சுவாரசியமாக சவாலாக இருந்தால்தான் ஒன்றைச் செய்வது.. இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிட்டு ஜாலியாக அடுத்த வேலைக்குப் போய்விடுவதுதான் பிடிக்கும். பொதுவாக கிணற்றில் மூச்சை தம் கட்டி உள்ளே இருப்பது, சைக்கிளில் கைவிட்டு ஓட்டுவது என சில விஷயங்களை பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால் கல்யாண் வேறுபடுவது எங்கே? வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ச்சிலும் சாகசம் இருக்கவேண்டும் என நினைப்பதுதான் வேறுபாடு. பார்க்க மற்றவர்களுக்கு திகிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் கல்யாணுக்கு திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கிறது. உளவியலைப் பொறுத்தவரை இந்த வகையில் சாகச அனுபவங்களை நாடி குற்றங்களைச் செய்பவர்களை மனநலகுறைபாடு கொண்ட நோயாளிகளாகத்தான் பார்க்கிறார்கள். கிக் படத்தில் கல்யாணை சாகச அனுபவங்களை சமூ

முஸ்லீம்களின் தேசப்பற்றை நிரூபிக்க கட்டாயப்படுத்தும் படம்- கட்கம் - கிருஷ்ணவம்சி

படம்
  கட்கம் தெலுங்கு இயக்குநர் – கிருஷ்ண வம்சி இசை ராக்ஸ்டார் டிஎஸ்பி ஒளிப்பதிவு எஸ்கேஏ பூபதி எடிட்டிங் - ஶ்ரீகர் பிரசாத் ரவிதேஜா, ஶ்ரீகாந்த் மேகா, பிரகாஷ்ராஜ், தேஜ். சங்கீதா, சோனாலி பிந்த்ரே முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது. அப்படி தீவிரவாதிகளாக இருந்தால் அவர்களை ஜெய் பஜ்ரங்பலி என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றால் தீவிரவாதத்தை அழித்தே விடலாம் என்று சொல்லியிருக்கிற படம். படத்தில் தொடக்க காட்சியே தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். இதனால் படம் எந்த கோணத்தில் போகப்போகிறது என புரிந்துகொண்டுவிடலாம். தீவிரவாதி மசூத், அவரை விடுவிக்க தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை திட்டமிடுகிறார்கள். இதை தலைமை தாங்கி நடத்துபவர் அசார். அசார் யார் என்பது படத்தில் முக்கியமான திருப்புமுனை காட்சி. கோட்டி, சினிமா நாயகனாக முயல்பவர். அவரின் தொடக்க காட்சிகள் பல்வேறு சினிமா ஸ்டூடியோக்களிலிருந்து செக்யூரிட்டிகளால் வெளியே தள்ளப்படுவதிலிருந்து தொடங்குகிறது. கோட்டி நடிகர் என்றால் அவரது நண்பர் இயக்குநராக முயல்கிறார். இருவரும் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். வாடகை கூட கொடுக்க முடியா

நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

படம்
  சண்டி ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா   ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான். இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்… நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் ப

நம்பிக்கை தரும் மொபைல் நிறுவனத்தின் கதை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? சீன மொபைல் நிறுவனமான ஹூவெய் பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன். பீடிஎப் நூலை முழுக்க போனிலேயே படித்துவிட்டேன். நூலின் பக்கங்கள் 300. ஹூவெய் நிறுவனம் எப்படி உருவானது, அதன் நிறுவனர் என்ன நோக்கத்திற்காக நிறுவனத்தை உருவாக்கினர், அதற்கும் பிற நிறுவனங்களுக்குமான வேறுபாடு, சந்தையில் எப்படி தாக்குபிடித்தனர், அதன் கொள்கைகள் என ஏராளமான விஷயங்களை பற்றி பேசி இருக்கிறார்கள். நம்பிக்கை தரும் நூல் எனலாம்.  அடுத்து தொழில்நுட்பம் சார்ந்த நூலை படிக்க நினைக்கிறேன். நாகரிகங்களின் பண்பாடு ஏராளமான மேற்கொள்களுடன் எழுதப்பட்டு உள்ளது. வேகமாக படிப்பதில் சிரமம் உள்ளது. ஏராளமான சம்பவங்களை குறிப்பிட்டு நூலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.  டிஸ்கோ ராஜா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். அறிவியல் சமாச்சாரங்களைக் கொண்ட கேங்க்ஸ்டர் படமாக வந்திருக்கிறது. தமிழ் வசனங்களும் உண்டு. கதையில் வரும் பாத்திரங்களோடு கிளைமேக்ஸ் சுவாரசியமாக உள்ளது. தமனின் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம்.  எங்கள் பத்திரிகையில் வேலை பார்க்கும் பலரும் இதுவரை எழுதிய நூல்களை கிண்டிலில் பதிவு செய்யத்

கிடைத்த அன்பை பற்றிக்கொள்ள காதலன் எடுக்கும் முடிவு! - நீ கோசம் - ரவிதேஜா, மகேஸ்வரி

படம்
                நீ கோசம் ஓவியங்களை வரைந்துகொடுக்கும் கலைஞர் , கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெண்ணை காதலிக்கிறார் . அவரது அப்பா தீவிரமான சாதி வெறியர் . தனது தம்பி பெண்ணை அவரே கைப்பட கொன்றிருக்கிறார் . இந்த காதல் ஜோடியின் திருமணத்தை ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை . ரவிதேஜா முடிந்தவரை எளிமையான கதைக்கு நியாயம் சேர்க்க நடித்திருக்கிறார் . மகேஸ்வரியும் அப்படியே . ரவிதேஜாவின் மீது காதல் வந்துவிட்டபோதும் , அதை எப்படி சொல்வது , வீட்டில் ஏற்கமாட்டார்களே என தடுமாறுவது , இறுதியில் ரவியின் நிர்பந்தத்தால் அதனை ஏற்பது என கொடுக்கப்பட்ட பாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார் .    படம் வணிகப்படமாக இருக்கவேண்டுமா , உணர்ச்சிகளைக் கொட்டும் இயல்பான படமாக வரவேண்டுமா என்பதில் இயக்குநருக்கு பல்வேறு குழப்பங்கள் உள்ளன . குத்துப்பாட்டு இல்லாத குறையை இறுதிப் பாடலில் கவர்ச்சிகர ஆடையை நாயகிக்கு கொடுத்து பீச்சில் ஆடப்பாடச்சொல்லி நிவர்த்தி செய்திருக்கிறார்கள் .    மகேஸ்வரியின் அப்பாவை சமாதானம் செய்து கல்யாணம் செய்துகொள்ள ரவி முனைகிறார் . அதற்கு அவர் மறுப்பு தெ

அறிவியலால் மீண்டு வரும் டிஸ்கோ ராஜா - டிஸ்கோ ராஜா அதிரடி

படம்
டிஸ்கோ ராஜா - தெலுங்கு இயக்கம் - வி ஆனந்த் வசனம் - அப்பூரி ரவி இசை - கார்த்திக் கட்டமனேனி இசை - தமன் சாய் டைட்டில் கார்டு ஓடும்போதே ஒருவரை லடாக் பனியில் அடித்து உதைத்து இழுத்துக்கொண்டு வீட்டில் கொண்டுபோய் அடைக்கிறார்கள். உடனே சிறிது நேரத்தி அங்குள்ள பனிக்கட்டிகள் உடைந்து பனிப்புயல் ஏற்படுகிறது. உடல் மெல்ல பனியில் விறைத்து போக முகம் ரவிதேஜா என காண்பிக்க டைட்டில் நிறைவடைகிறது. அதுதான் கதை. அவரை மருத்துவ நிறுவனம் மீட்டு சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைக்கிறது. அவர் யார் என பல்வேறு நபர்கள் மூலம் கண்டறிகிறார். ஏறத்தாழ காமிக்ஸில் வெளியான பதிமூன்று என்ற நபரின் கதைதான். ரவிதேஜா உழைத்திருக்கிறார்தான். இரண்டு வேடங்கள் உண்டு. அதில் சில சுவாரசியங்கள் உண்டு. நாங்கள் அதை சொல்லப்போவதில்லை. ஆஹா ரவிதேஜா, சத்யா, வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சியாக நாபா நடேஷ், தன்யாஹோப், பாயல் ராஜ்புத் வருகிறார்கள். ராம்கிக்கு பெரிய வேடமில்லை. பாபி சிம்ஹா பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கதையில் வரும் சுவாரசிய வில்லன்தான் படத்தின் முக்கியமான பகுதி. அவர், டிஸ்கோ ரா