இடுகைகள்

டோக்ஸோபிளாஸ்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குணத்தை மாற்றும் மூளை ஒட்டுண்ணி!

படம்
பூனைகளிடமிருந்து பரவும் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி எலிகள், பிற விலங்குகளிடமிருந்து பரவி மனிதர்களையும் தாக்கியுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி பாதிப்பு கொண்டவர்கள் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஒட்டுண்ணி பாதிப்பால்  சிசோபெரெனியா, குணமாறுபாடு, தற்கொலை எண்ணம் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது நேரடியான பாதிப்பை ஒருவருக்கு உடலில் ஏற்படுத்துவதில்லை. டோக்ஸோபிளாஸ்மா ஒட்டுண்ணி ஒரு செல்லைக் கொண்டது. பறவைகள் முதல் பெலுகா திமிங்கலங்கள் வரை பாதிக்கிறது. பெரும்பாலும் பூனைகளிடமிருந்து பிற விலங்குகளுக்கு பரவுகிறது. முக்கியமாக பரவும் வழி, பாலுறவு. பூனைகளின் மலம் மூலமாக பிற விலங்களுக்கு பரவுகிறது. காற்று ஊடகமும் இதற்கு ஒத்துழைக்கிறது. மூளை, இதயம், கபாலத் தசை ஆகியவற்றை இந்த ஒட்டுண்ணி பாதிக்கிறது. டோக்ஸோபிளாஸ்மா, பாதித்த எலி பூனையைக்கண்டு பயப்படாமலிருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அதிர்ந்தனர். இந்த ஒட்டுண்ணியின் பாதிப்பு மறைமுகமாக ஏடிஹெச்டி பாதிப்பு ஏற்படவும் காரணம் என மற்றொரு வகையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. நன்றி : தி கன்ச