இடுகைகள்

தடகளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு - டொம்னிக் லோபாலு

படம்
  டொம்னிக் லோபாலு டொம்னிக் லோபாலு தடகள வீ ரர் தெற்கு சூடானில் வாழ்ந்த டொம்னிக், அங்கு நடந்த போரால் வடக்கு கென்யாவில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார். பிறகு அங்கிருந்து தப்பியவர், நைரோபிக்கு தெருவுக்கு வந்தார். அகதிகளின் விளையாட்டுக்குழுவை   அடையாளம் கண்டார். 2017ஆம் ஆண்டு டொம்னிக், ஒலிம்பியன் என்ற அகதி விளையாட்டுக்குழுவில் சேர்ந்தார். பிறகு, அந்த குழுவினர் ஜெனீவாவிற்கு சென்றபோது, அங்கே இருந்து விலகித் தப்பியவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என முயன்றார். 24 வயதாகும் டொம்னிக் தனது நாட்டுக்காக விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க முயல்கிறார். அவரிடம் பேசினோம். ஏமாற்றம் அடையும்போதும எப்படி நேர்மறையான எண்ணங்களை மனநிலையை தக்க வைத்துக்கொள்கிறீர்கள்? பின்னடைவுகள் ஏற்படுவது சகஜம்தான். ஆனால் அதுமட்டுமே முடிவு கிடையாது. நான் எனது கனவுகளைப் பின்தொடர்ந்து வருகிறேன். விளையாட்டு வீரராக உங்கள் கனவு என்ன? ஒலிம்பிக் அல்லது உலக போட்டிகள் ஏதாவது ஒன்றில் கலந்துகொண்டு பதக்கம் வெல்வதுதான். விரைவில் ஏதாவது போட்டிகளில் பங்கேற்பேன் என நினைக்கிறேன். பதக்கம் வெல்வதை எனது கன

பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

படம்
                வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம் !     இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை . பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் , நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835 ஆம் ஆண்டு பயன்படுத்தினார் . இதன்பொருள் , சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள் , உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான் . இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது . ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை . ஆனால் அவருக்கு மத்திய அரசு , பல்வேறு மாநில அரசுகள் , தனியார் அமைப்புகள் , விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும் , ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன . இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும் . மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது . இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது . இதில் நாம் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்க

உசைன் போல்டின் வேகத்தை எப்படி கணக்கிடுவது?

படம்
  கணிதம்  உசைன் போல்ட் தடகளத்தில் மின்னலாக பாய்வது எப்படி? கலை என்பது பொய். அதுவே நம்மை உண்மையை உணர வைக்கிறது என்று சொன்னவர் ஓவியர் பாப்லோ பிகாசோ. நுண்கணிதம்(calculus) கூட அப்படித்தான். 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பீஜிங்கில் உசேன் போல்ட், நூறுமீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள ட்ராக்கில் நின்றுகொண்டிருந்தார். உண்மையில் 200 மீட்டரில் ஓடிக்கொண்டிருந்தவர் போல்ட். ஆனால் திடீரென பயிற்சியாளரிடம் நான் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறேன் என பிடிவாதம் பிடித்து பெற்றதுதான் இந்த வாய்ப்பு.  அவரின் கூடவே நின்ற எட்டு தடகள வீரர்களும் நூறு மீட்டரில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. போல்ட் யாரையும் ஏறிட்டுக் கூட பார்க்கவில்லை. என்ன காரணம், தன்மீதுள்ள நம்பிக்கைதான். கிரிக்கெட் மற்றும் கால்பந்தில் ஆர்வம் காட்டிய போல்டை, அவரது முன்னாள் பயிற்சியாளர் தடகளத்தில்  முயற்சிக்கலாமே என்ற வழிகாட்டினார். அன்றையை ஓட்டத்தில்  எட்டு வீரர்களில் ஏழாவதாக ஓடிக் கொண்டிருந்தவர், 30 மீட்டர் தூரத்தில் வித்தியாசத்தைக் காட்டினார். புல்லட் ரயிலாக பாய்ந்தவர் 9.69 நிமிடங்களில் நூறு மீட்டரைக் கடந்தார்.  இவர் நூறுமீட்ட

வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்? குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான். நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்