பதக்கம் வென்றவர் மட்டும்தான் முக்கியமா? - பணப்பரிசுகளை வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள்?

 

 

 

 

Indian javelin thrower Neeraj Chopra qualifies for the Olympics ...

 

 

 

 

வெற்றி பெற்றவருக்கே அனைத்தும் சொந்தம்!

 

 

ஆசியா போட்டியில் கலக்கிய மற்றொரு தமிழக வீரர்.. வெள்ளியை வென்றார் ...

இந்தியாவில் விருது வென்றவர்களுக்கு கொடுக்கும் அங்கீகாரமும் பணப்பரிசுகளும் விளையாட்டுத்துறைத்துறையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை.


பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக், நோபல்லெஸ் ஆப்லிஜ் என்ற வார்த்தையை 1835ஆம் ஆண்டு பயன்படுத்தினார். இதன்பொருள், சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள பணக்காரர்கள், உழைக்கும் மக்கள் மீது கருணை காட்டுவதில்லை என்பதுதான். இந்த வார்த்தை அப்படியே இந்திய அரசுக்கும் விளையாட்டுத்துறைக்கும் பொருந்துவது நகை முரணாக உள்ளது.


ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா கடினமாக உழைத்து வென்றார் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவருக்கு மத்திய அரசு, பல்வேறு மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், விளையாட்டு அமைப்புகள் என பறந்து வந்து ஏராளமான பரிசுகளையும், ரொக்கப்பரிசுகளையும் வழங்கிவருகின்றன. இந்த வகையில் நீரஜூக்கு 4.85 கோடியும். மீராபாய் சானுவுக்கு 2.50 கோடியும் நிதியுதவியாக கிடைத்துள்ளது.


இந்திய மக்கள்தொகை 1.4 பில்லியனாக உள்ளது. இதில் நாம் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7. ஆனால் சான் மெரினோவின் மக்கள்தொகை 34 ஆயிரம்தான். அ்வர்கள் 7 பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். இந்தியாவின் விளையாட்டுத்துறை பலவீனமாக உள்ளது. ஆனால் அதைக் கவனிக்காமல் தங்கப் பதக்கம் வென்ற ஒரே ஒருவரை மட்டுமே அரசு பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கென மட்டுமே அரசு 36 கோடி ரூபாயை 150 வீரர்களுக்காக செலவிட்டுள்ளது. இப்போது நீரஜ் சோப்ராவுக்கு ரொக்கமாக 15 கோடியை அரசு வழங்கியுள்ளது. ஈட்டி எறிதலில் அவர் வரலாற்று சாதனை செய்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இவரைப் போல இன்னும் நிறையப் பேர் இத்துறையில் வருவதற்காக முயன்றுகொண்டிருக்கிறார்கள். அரசு அவர்களை ஊக்கப்படுத்த பரிசு நிதியை செலவழிப்பது எதிர்காலத்திற்கான தொலைநோக்காக இருக்கும்.,


அதிக பதக்கங்களை வெல்லும் அமெரிக்கா நாட்டிலேயே தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு அரசு 28 லட்ச ரூபாய்தான் வழங்குகிறது.. நார்வே, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் வீர ர்களுக்கு எந்த பரிசுத்தொகையையும் வழங்குவதில்லை. அதிக செல்வச்செழிப்பு கொண்ட சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகள் பரிசு வென்ற வீர ர்களுக்கு 7 லட்சம் டாலர்களை வழங்குகின்றன. வளர்ந்த நாடுகள் அனைத்திலும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளன. ஆனால் ஏராளமான பரிசுத்தொகையை விசிறி

அடிக்கும் இந்தியாவில் அப்படி எந்த திட்டங்களும் கிடையாது. பெரும்பாலும் பயிற்சியாளர்கள்தான் சொந்தக் காசைப் போட்டு வீர ர்களுக்கு உதவுகின்றனர். அல்லது வீர ர்களே தங்கள் கனவை நிறைவேற்ற பாடுபட்டு உழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் 30 லட்சம் மக்கள் உள்ளனர். அந்த மாநிலம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்துள்ளது. இத்தொகையை வைத்து அவர்கள், அவர்களது மாநில வீரர்கள் சிறப்பாக பயிற்சி பெற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கலாம்.


நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற செய்தியை ஊடகங்கள் எப்போதும் வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேநேரம் தடகளத்தில் ரிலே ஓட்டத்தில் ஆசிய ரெக்கார்டை முறியடித்து ஒனபதாவது இடம் பிடித்த ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ், அமோ்ஜ் ஜேக்கப், நோவா நிர்மல் டாம் ஆகியோரைப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விளையாட்டில் பதக்கங்கள் வெல்வதற்காக செலவழிக்கும் தொகை அதிகரித்துள்ளது. அதேநேரம், கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, ஜமைக்கா, வெனிசுலா ஆகிய நாடுகளும் அதிக பதக்கங்களை வென்று வருகின்றன. இந்த நாடுகள் ஏழை நாடுகள்தான். எப்படி சாதித்தன என்பதை நாம் யோசிக்கவேண்டும். ரியோ ஒலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக் ஆகிய இரு போட்டிகளுக்கும் துப்பாக்கி சுடுதல் பிரிவுக்கு அதிக கவனம் வழங்கப்பட்டது. ஆனால் நிதியை செலவழித்தாலும் கூட அதில் பதக்கங்கள் கிடைக்கவில்லை பள்ளிகளிலிருந்தே விளையாட்டு வீர ர்களை ஊக்கவித்தால் மட்டுமே ஒலிம்பிக் போன்ற் போட்டிகளில் வெல்லமுடியும். வெற்றி பெற்றாலும் தோற்றாலும் விளையாட்டு வீர ர்களை அரசு ஆதரிக்கவேண்டும். அப்போதுதான் விளையாட்டும் கலாசாரமாக நாட்டில் வளரும். இந்திய ஹாக்கி பெண்கள் அணியினர், பதக்கம் வெல்லாதபோதும் அவர்களின் முயற்சியும் உழைப்பும் சாதாரணமானதல்ல. வெற்றிபெற்றவர்களை நாயகர்களை மட்டுமே நாம் பின்தொடர்ந்தால், பாராட்டினால் விளையாட்டுத்துறையில் இந்தியா வெல்வது கடினம்.



தி இந்து ஆங்கிலம்

நிசிம் மன்னாதுக்கரன்



கருத்துகள்