அம்மா மீதான வெறுப்பு கொலைகளுக்கு முக்கிய காரணமா இல்லையா? - சைக்கோ டைரி

 

 

 

Mysterious, Man, Gun, Thriller, Revenge, Spy, Criminal

சைக்கோ டைரி


சீரியல் கொலைகாரர்களை படங்களில் யாரும் உள்ளது உள்ளபடியே காட்டமாட்டார்கள். அப்படி காட்டினால் தியேட்டரில், ஓடிடியில் படம் எப்படி ஓடும். அப்படியானால் எந்த படமும் சீரியல் கொலைகாரர்களை நிஜமாக ரத்தமும் சதையுமாக காட்டவில்லையா என்று கேள்வி எழும். An eye for an eye என்ற படம் ஓரளவுக்கு சீரியல் கொலைகா ர்களை திரையில் சரியாக காட்டியது என்று கூறலாம். படத்தை விமர்சகர்களை கழுவி ஊற்றினர். ஆனாலும் நடித்தவர்கள் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருந்தனர்.


வேறுபடங்களைக் கூட இந்த வகையில் கூறலாம். தி பேட் சீட், சிட்டிஷன் எக்ஸ், எ ஸ்ட்ரேஞ்சர் அமாங் அஸ், டு கேட்ச் எ கில்லர் ஆகிய படங்களை எப்படி நிதானமாக பாருங்கள். ஸ்டான்லி குப்ரிக் தனது மனவோட்டத்தின்படி எடுத்த எ கிளாக்வொர்க் ஆரஞ்ச் என்ற படமும் முக்கியமானது. இப்படியொரு குற்றவாளியை அதுவரை யாரும் யோசித்தே பார்த்ததில்லை என்று கூறலாம்.


வில்லன் யார்


சீரியல் கொலைகாரர்கள் நூறு சதவீதம் வில்லன்கள் என்று கூறிவிட முடியாது. அவர்களிடம் சில நல்ல அம்சங்கள் இருக்கலாம். ஆனால் வன்முறையும், கொலை மீதான ஆர்வமும் பிற விஷயங்களை அமுக்கிவிடுகிறது. பிறர் அனைவரும் நல்லவர் என்று கூறிவிட முடியாது. நாம் அனைவரும சட்டத்திற்குட்பட்ட குறைந்த வன்முறை கொண்ட செயல்களை செய்து வருகிறோம் என்று கூறலாம்.


பாரில் ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். அந்தப்பெண்ணை பேசி மடக்கி அப்பார்ட்மெண்ட்டிற்கு கொண்டு செல்கிறீர்கள். அங்கு சென்றும் ஒயினை குடிக்கிறீர்கள். அந்த பெண்ணிடம் நீங்களே நம்பாத பொய்களை உளறுகிறார்கள். பாதுகாப்பு இல்லாத உடலுறவு நடக்கிறது. இதனா்ல் நோய் பரவலாம். அந்த பெண் கருவுறலாம். இந்த செயலுக்கு வயது வந்தவர்களான நீங்கள் முழுப் பொறுப்பு ஏற்க முடியுமா? ஏதாவது காரணங்கள் சொல்லி சமாளிக்கவே பார்ப்பார்கள்.


நம் அனைவரது வாழ்க்கையிலும் நல்ல, கெட்ட தருணங்கள் உண்டு. இதில் சீரியல் கொலைகாரர்களுக்கும் கூட விதிவிலக்கு கிடையாது.


சாத்தான்


அனைத்து சீரியல் கொலைகாரர்களும் சாத்தனை வழிபடுகிறவர்கள் கிடையாது. கிறிஸ்துவம் அல்லது பிற மதத்தை நம்புகிறவர்கள் சாத்தானை தங்களது கடவுளாக நினைத்து கொலை செய்துவிட்டு சுவற்றில் ரத்தக்களறி செய்துவிட்டு செல்வார்கள். சர்ச்சுக்கு செல்வார்கள், பைபிளை எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் நல்லது, கெட்டது எது என பைபிள் வாசகம் மூலமே பார்த்து அதன்மூலம் கொலை செய்து சமூக நீதியை ரத்தக்கவுச்சியுடன் காப்பாற்றுவார்கள். ஃபார் லவ் ஆப் ஈவில் என்ற நாவலில் கடவுள், சாத்தான் இர்ண்டுக்குமான முரண்பாடும். அவற்றின் காரணமாக உலகம் சமநிலையாக இருப்பதும் கூறப்படுகிறது. பெரும்பாலான சீரியல் கொலைகார்ர்கள் தாங்கள் நினைப்பதை சரி என்று தட்டிக்கொடுத்துக்கொள்ள இதுபோன்ற ப்ல்வேறு நூல்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


சீரியல் கொலைகார ர்களைப் பற்றிய படங்கள், நாவல்கள் மெல்ல வன்முறையையும் கொலையையும் இயல்பானதாக மாற்றுக்கும்படி மாற்றுகின்றன. இதற்கு காரணம், படங்களிலும் நாவல்களிலும் அவர்கள் காட்டப்படும் விதம்தான்.


சைக்காட்டிக்குகளும் சைக்கோபாத்களும்


சைக்கோபாத்கள் சமூகத்திலிருந்து நிறைய விலகி இருப்பார்கள். காவல்துறைக்கு கடும் சவாலாக இருந்து குற்றங்களை செய்துவருவார்கள். சைக்காட்டிக் குணங்களைக் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும். இவர்கள் தாங்கள் செய்யும் குற்றங்களை பிறர் பார்க்கிறார்கள், பார்க்கவில்லை என்பதைக் கூட கவனிக்க மாட்டார்கள்.


கெவின் தேவன் மர்பி என்பவர் எட்டுவயது கெவின் ஷிப்லெட் என்ற சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த குற்றத்திற்கு சாட்சி, குத்து வாங்கிய சிறுவனின் பாட்டிதான். தப்பி டாக்சி பிடித்து ஓடிய கெவின், ஹோட்டல் அறையை தீவைத்து எரித்தான். அவனைக் காப்பாற்ற வந்த தீயணைப்பு வீரர்களைக் கூட உள்ளே விடவில்லை.


சைகோபாத்களைப் பொறுத்தவரை தாங்கள் செய்யும் செயல்களைப் பற்றி நன்றாக அறிந்திருந்தாலும் தங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் அதனை தொடர்ந்து செய்வார்கள். அவர்களுக்கு தாங்கள் செய்யும் செயல்களைப் பற்றி சமூகம் என்ன நினைக்கிறது என்பது தெரியும். இவர்கள் பட்டப்பகலில் ஒரு கொலையை செய்யத் தயங்குவார்கள். காவல்துறையில் பிடிபடாத வகையில் திட்டமிட்டு கொலைசெய்து தங்களை திருப்தி செய்துகொள்வார்கள். இவர்களை பிடிப்பதும் கடினமானது.


படுக்கையை நனைப்பது, நெருப்பை ரசிப்பது, விலங்குகளை துன்புறுத்துவது என்பது சீரியல் கொலைகார ர்களுக்கான முக்கியமான அறிகுறி என கொள்ளலாமா?


பொதுவாக குற்றங்களை ஆவணப்படுத்துதலில் ஒருவரின் சிறுவயது வாழ்க்கை அனுபவங்களை பொறுத்து இப்படி கூறுகிறார்கள். சிறுவயதில் ஒருவரால் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. சூழல் என்பது அவரின் கட்டுப்பாட்டிலும் இருக்காது. இதனால் அவர்கள் தவிப்பில் இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு விலங்குகளை துன்புறுத்துவது மனதில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சம்பவமாக மாறினால் அவர்களை கண்காணிப்பது அவசியம்.


அம்மா மீதான வெறுப்பு


அடிப்படையில் இதனை குறியீடாக கொண்டு உள்ளே பார்த்தால் அதிகாரத்தின் மீதான ஆசை என்று கூறலாம். சீரியல் கொலைகாரர்களின் அம்மாக்களுக்கும் நமக்கும் நமது அம்மாக்களுக்கும் உள்ள உறவு வேறுபட்டது அல்ல. அன்பு, வெறுப்பு என்பது நமது உறவிலும் உள்ளது. அப்பா இல்லாமல் அம்மா மட்டுமே உள்ள குடும்பத்தில் அம்மாக்களே அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள். இது பிள்ளைகளுக்கு வெறுப்பை மனதில் ஏற்படுத்துகிறது. பையன்களை அம்மா எப்போதும் பாதுகாத்துக்கொண்டே இருப்பார்கள். சில சமயம் தவறுகளுக்கு கடுமையான தண்டனை கூட கொடுப்பது உண்டு. வயது வந்தால் கூட அம்மாக்கள் பிள்ளைகளை பாதுகாக்கவே நினைப்பார்கள்.


இதற்கு நீங்கள் எட் கெம்பரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். இவர் மீது அம்மா அதிக அதிகாரத்தை கொண்டிருந்தார். இதனால் கெம்பர், அம்மாவின் பெற்றோரை சுட்டுக்கொன்றார். பிறகு மனநல மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அ்ஙகு ஆறுபேரை பரலோகத்திற்கு அனுப்பினார். வெளியே வந்தபிறகு அம்மாவையும் அவரது நண்பர்களையும் கொன்றார். பெண்களை மட்டுமே தேர்ந்தெடுத்து கொல்ல அம்மா வெறுப்பு என்ற தியரியை மட்டுமே அடிப்படையாக கொள்ள முடியாது. தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள், அவர்களை சார்ந்தவர்களை ம்ட்டுமே தேர்ந்தெடுத்து கொன்றார்கள். ஆனால் இக்கொலைகளுக்கு காரணம் அம்மா வெறுப்பு கிடையாது. பெண்களை மட்டுமே இரையாக தேர்ந்தெடுத்து கொல்ல முக்கியமான காரணம், அவர்களை எளிதாக பிடித்துவிட முடியும், அடுத்து, அவர்களை சித்திரவதை செய்யும்போது இடதுகையால் வாயை பொத்தி வலியால் அழகாக அலறுவார்கள் என்பதும் முக்கியமான காரணம். உண்மையை அனைத்து இடங்களிலும் கூற முடியுமா? இதற்காகத்தான் அம்மா வந்து சிக்கிக்கொள்கிறார்.


அம்மா அல்லது அக்கா அல்லது பெண்தோழியின் சாயல்



சாயல் என்பது இல்லாமல் வாழ்க்கை இல்லை. சீரியல் கொலைகாரர் தனது வாழ்க்கையில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று நினைத்த நபர் நிகழ்காலத்தில் உயிரோடு இல்லை. இப்போது என்ன செய்வது? அதுபோன்ற சாயலைக் கொண்ட மனிதர்களைத் தேர்ந்தெடுத்து கொல்ல வேண்டியதுதான். இதனால்தான் தாய், அக்கா, பெண்தோழி சாயல் என்ற தியரி தோன்றியது. இதனை முழுக்க உண்மை என்று கூட சொல்லிவிட முடியாது. வெள்ளையர் கருப்பின மக்களை மட்டுமே ஸ்பெஷலாக தேர்ந்தெடுத்து கொல்கிறார். கருப்பர் வெள்ளை இன பெண்களை மட்டுமே கொன்று வருகிறார் என்றால் மேற்சொன்ன சாயல் தியரி நீர்த்து்ப்போய்விடுகிறது அல்லவா?

victor kamezi











கருத்துகள்