சீரியல்கொலைகாரர்கள் புத்திசாலிகளா இல்லையா?

 

 

 

 Woman, Knife, Model, Dangerous, Kitchen, Danger, Sharp

 

 

சைக்கோ டைரி


சீரியல் கொலைகாரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா?


இப்படி ஒரு கேள்வியை கேட்டு தொடங்கிய விவாதத்திற்கு இன்றுவரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இயற்கையா அல்லது வளர்ப்பு முறையா என்று கூட கேள்வியை நாம் அமைத்துக்கொள்ளலாம். கொடூரமான கொலைகள் வல்லுறவு சித்திரவதை என ஒருவன் செய்யவேண்டுமானால் உறுதியாக அவன் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும். அதுவும் அவனது மரபணுரீதியான சிக்கல்தான் இப்படி ஒரு வன்முறையை உருவாக்குகிறது என பேசுகிறார்கள் இதற்கு மறுதரப்பு, அப்படி கூற முடியாது. ஒருவனது பிறப்பிலிருந்து அவன் பார்க்கும் மோசமான விஷயங்கள்தான் அவனை இப்படி தவறான வழிக்கு மடைமாற்றுகிறது. இன்னொரு குழு, மேற்சொன்ன இரண்டின் கலப்புதான் கொலைகார ர்களை உருவாக்குகிறது என நம்புகிறார்கள்.


அறிவியல் முறைப்படி யாரும் பிறக்கும்போது தீயசக்தி கொண்டு மரபணுக்களோடு பிறப்பதில்லை. சூழலையும் இதற்கு குறைசொல்லமுடியாது. ஆனால் வன்முறை, வறுமை, சித்திர்வதை நிறைந்த சூழல்கள் ஒருவரை கடுமையாக மனதளவில் பாதிக்கும் என்பது உண்மை. இவை இரண்டின் கலப்புதான் கொலைகாரர்கள் என்பது பொருந்தாத வாதம்.


ஏழுவயது சிறுவனின் அம்மாவை சந்தித்துப் பேசினேன். அவர், தனது மகனை பள்ளியில் இருந்து விலக்கிவிட்டார்கள் என வருந்தி பேசினார். பள்ளியில் அவரது மகன், சக மாணவனை பென்சிலால் குத்தியிருக்கிறான். குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை தீ வைத்து எரித்திருக்கிறான். பள்ளி மைதானத்தில் தன் நண்பர்களோடு விளையாடாமல் பெண் தோழிகளை சுற்றி சுற்றி வந்திருக்கிறான். இதனை நான் கவனிக்க வேண்டுமா என அவரது அம்மா கேட்டார். நான் உறுதியாக ஆமாம் என்றேன். இதன் விளைவாக, அவனுக்கு சில மருந்துகளை வழங்க அறிவுறுத்தினேன். சிறுவயதில் ஒருவருக்கு இப்படி சமூகம் தொடர்பான மன விலக்கம் வருவது ஆபத்தானது. அது பின்னாளில் அவனது வாழ்க்கையை மாற்றலாம். அதற்காக அறிகுறிகளை வைத்து சீரியல் கொலைகார னாக மாறுவான் என்று கூறமுடியாது.



மோசமாக குழந்தைகளை நடத்தும் வீடுகள்தான் அவர்களின் எதிர்காலத்தை சிதைக்கிறதா?


அமெரிக்காவின் எப்பிஐ ஆவணங்களின் படி நூறு சதவீதம் மேற்சொன்ன கேள்வியை நியாயப்படுத்துகிறது. பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் வீடுகளில் கடுமையான சித்திரவதையை அனுபவித்தவர்கள்தான். இந்த புள்ளிவிவரங்களைத் தாண்டி உள்ளே சென்றால் கிடைக்கும் விவரங்கள் இன்னும் அதிர்ச்சியூட்டும். அதேசமயம் மோசமான வீடுகளில் பிறக்காமல் நன்றாக படித்த பண்பாக நடந்துகொள்ளும் குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட சீரியல் கொலைகாரர்களாக மாறியிருக்கிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டை நீங்கள் அசுரகுலம் நூலைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


புத்திசாலியா முட்டாளா?


அமெரிக்க வெப் சீரிஸ், கொரியன் வெப் சீரிஸ், திரைப்படங்களில் சீரியல் கொலைகாரர் அரிதினும் அரிய ஐக்யூ அவதாரமாக நாயகனை குழப்புவார். கத்தியால் குத்துவார். இப்படியெல்லாம் படம் எடுப்பது எழுத்தாளரின் எழுத்து் மற்றும் இயக்குநரின் திறமை என்று சொல்லலாம். இயல்பாக இப்படி சம்பவங்கள் அரிதாகவே நடக்கும். இப்படி சீரியல் கொலைகார ர்களை வடிவமைத்தால் மக்கள் அதனை பார்ப்பார்கள். நெட்பிளிக்ஸ், அமேசான், தியேட்டர்கள் என பணம் கொழிக்க முடியும். உண்மையில் சீரியல் கொலைகார ர்களுக்கு அந்தளவு புத்திசாலித்தனமும் கிடையாது. பொறுமையும் இருக்காது. ஆனால் அவர்கள் தந்திரமாக இருந்துதான் கொலை செய்யப்படுவதற்கான இரையைப் பிடிக்கிறார்கள் சித்திரவதை செய்து கொல்கிறார்கள். சில ஐடியாக்களை அவர்கள் பிறரிடமிருந்து இரவல் பெற்று கொலைகளை குறிப்பிட்ட பாணியில் செய்கிறார்கள். இதற்காக அவர்களை முட்டாள் என்று சொல்லிவிட முடியாது. கிரியேட்டிவிட்டி என்பது கொலை செய்யும் அவசரத்தில் சட்டென வந்து தொலைப்பதில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.


டெட் பண்டி நீங்களும் நானும் நம்பும்படியான புத்திசாலி என்று நினைக்கும்படியானவர்தான். தங்க நிற போக்ஸ்வேகனை மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் நிறுத்தி இரைக்காக காத்திருப்பார். கிடைக்கும் பெண்களை நான்தான் டெட் என்று சொல்லி பெண்களை காரில் ஏற்றி பிறகு அவர்களை வல்லுறவு செய்து கொல்லுவதுதான் பிளான். இவரைப்பற்றி இவரது பெண்தோழியே போலீசுக்கு புகார் சொன்னார். ஆனால் போலீசார் மார்ல்போரோ சிகரெட்டை புகைத்தபடி லூசில் விடு என விட்டுவிட்டனர். அப்படியும் டெட் பண்டி மாட்டிக்கொண்டார். எப்படி? போக்குவரத்து விதிகளை மீறியதால். சினிமாவுக்கு போய்விட்டு வந்தேன் என்பவரின் காரை சோதனை செய்யும்போது பெண்களை கட்டிவைக்கும் கயிறு, கத்தி என இன்னும் சில வல்லுறவு சாதனங்கள் இருந்தது. அதனை போலீசார் பார்த்து டெட்டை பிடித்துவிட்டனர். இதனை டெட் பண்டியின் புத்திசாலித்தனம் என்பதா?


போலீசாரின் வேலைக்கு உதவாத விசாரணை முறையால்தான் பெரும்பாலான சீரியல் கொலைகாரர்கள் வெளியே இருக்கிறார்கள். அவர்களை உள்ளே கொண்டு வர கொஞ்சமே கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தினால் போதுமானது. பெண்களை வல்லுறவு செய்து கொன்ற கொலைகார ர்களின் உழைப்பு இந்த விவகாரத்தில் அதிகம். பெண்களை சரியானபடி பின்தொடர்ந்து சென்று அவர்களை சரியான இடத்தில் மடக்கினால் மட்டும்தான் காரியம் நடக்கும். மற்றபடி சீரியல் கொலைகார ர்களை புத்திசாலிகள் என்று யாரு்ம் கூறமுடியாது. அப்படி கூறினார்கள் என்றால் அவர்களைத் தேடுவதை கைவிட்டுவிட்டார்கள் அல்லது விரக்தி அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.


விக்டர் காமெஸி


கருத்துகள்