டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்
நேர்காணல்
ஜி போவ்மன்
உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது. பிரெக்ஸிட், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது. இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா?
நான் அப்படி நம்புகிறேன். இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது. இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம், மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன்.
2017ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார். ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே, அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா?
நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம். அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது. ஆனால் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை, நோலன் மட்டும் எப்படி பேசுவார்? இப்போது நமக்கு இருக்கும் சவால், இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்குநர் படம் எடுக்க முடியுமா என்பதுதான்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற இந்தியர்கள் பற்றி ஏன் இங்கிலாந்து மக்களின் நினைவில் எந்த பதிவும் இல்லை?
தெற்காசியாவில் இப்படி உலகப்போரில் பங்கேற்ற இந்தியர்களைப் பற்றி ஆவணப்படுத்தி வைக்கவேண்டுமென நினைக்கவில்லை. இங்கிலாந்திலும் போர் வெற்றி, தெருக்களில் நடைபெற்ற பேரணி, மலைகளில் நடைபெற்ற ராணுவப்பயிற்சி என பல்வேறு விஷயங்களில் கவனத்தை திருப்பிவிட்டனர். போரும் முதலில் அரசரின் மீது குவித்திருந்த கவனம் மெல்ல மாறிவிட்டது. இப்படி இந்திய வீர ர்களை மறக்க நிறைய காரணங்கள் அன்று இருந்தன.
இந்திய வீரர்கள் எப்படி ஐரோப்பியர்களோடு தகவல்தொடர்பு கொண்டனர்?
புன்னகை, சிரிப்பு போன்றவற்றால்தான். இந்திய வீரர்கள், குழந்தைகளை நண்பர்களாக்கி கொண்டு பலவிஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். சப்பாத்திகளை சுட்டும் உலர் திராட்சைகளை பகிர்ந்து உண்டனர். இப்படிதான் அனைவருக்கும் அவர்கள் நண்பர்களானார்கள். பிறரோடு இணைவது அவர்களுக்கு பெரிய பிரச்னையாக இல்லை.
டன்கிர்க்கிலிருந்த ஒரே இந்திய அதிகாரி மேஜர் முகமது அக்பர் கான்தானே? அவரைப் பற்றி சொல்லுங்கள்.
இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஆச்சரியமான மனிதர் அவர். மெசபடோமியாவில் போரிட்டவர் துருக்கிப்படையினரால் சிறை பிடிக்கப்ட்டார். அவர்களிடமிருந்து தப்பினார். 1919ஆம்ஆண்டு இந்தூரில் பயிற்சி அளிக்கப்பட்டபோது முகமது அங்கிருந்தார். அவருடன் பீல்டு மார்ஷல் கரியப்பாவும் அங்கு பயிற்சி அளித்தார். பிறகு இங்கிலாந்து சென்று ஒராண்டு இருந்தவர், இங்கிலாந்து அரசர், அரசியுடன் புகைப்படம் கூட எடுத்துக்கொண்டார். அதனை போர் அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றனர். இன்றும் கூட பார்க்கலாம். பல்வேறு போர்களில் பங்கேற்றவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு திரும்பியவர், பின்னாளில் பாகிஸ்தானில் மூத்த அதிகாரியாக பதவி வகித்தார். கராச்சியில் உள்ள தனது பெரிய குடும்பத்தோடு வாழ்ந்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஷர்மிளா கணேசன் ராம்
கருத்துகள்
கருத்துரையிடுக