பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை இருக்கிறது? - கடிதங்கள்
பெண்களைப் பற்றிய பார்வையில் என்ன பிழை?
19.10.2020
அன்புள்ள சபா,
நன்றாக இருக்கிறீர்களா? இக்கடிதம் உங்களை வந்து சேரும்போது கொரோனா பாதிப்பு குறைந்து அறைக்கு மீண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் காதலித்த பெண்களைப் பற்றி பேசும்போது மனதில் ஒரு கேள்வி தோன்றியது. ஒரு பெண்ணுடன் கூடவா மனது ஒட்டவில்லையென. குறிப்பிட்ட தேவையைக் கருதித்தான் உறவை வளர்கிறார்களா என்றும் புரியவில்லை.
நீங்கள் உங்கள் பார்வையில் பெண்களைப் பற்றி சொன்னீர்கள். அவர்கள் பார்வையில் உங்களைப் பற்றி என்ன நினைத்தார்களோ? மனிதர்களின் இருட்டான உளவியல் பக்கம் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது. அதனால், அசுரகுலம் நூலை எழுதியபோது, கொலை செய்த மனிதர்களின் மனநிலை என்னை பெரிதும் பார்த்தேன். எனோலா ஹோல்ம்ஸ் என்ற படம் ஆங்கிலப்படத்தை பார்த்தேன். துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் தங்கை பற்றிய படம் இது. எனோலா, தனது வாழ்க்கையை சுதந்திரமாக எப்படி வாழத் தொடங்குகிறாள் என்பதை படம் நகைச்சுவையாக விவரிக்கிறது. படத்தில் எனோலாவாக நடித்த நடிகைதான் இதன் தயாரிப்பாளரும். கூட.
போனில் கர பரா ஆஸ்க் என்ற டிவி தொடரை பார்த்தேன். கொஞ்சம் இருளான தன்மை கொண்ட தொடர். நிழல் காரியங்களை செய்யும் தொழிலதிபரை எப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிடிக்கிறார் என்பதுதான் கதை. துருக்கி நடிகர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சந்திப்போம்.
ச.அன்பரசு
2
கொரானா நாயகர்களைப் பற்றிய நூல்!
29.10.2020
அன்பு நண்பர் சபா, எப்படி இருக்கிறீர்கள்?
நான் நலமாக இருக்கிறேன். ஒவ்வாமைக்கான சித்த ஆயுர்வேத சிகிச்சையை செய்து வருகிறேன். நீங்கள் எனக்கு சொன்னபடி அலோபதி யோசனைகள் சரியாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு சித்த ஆயுர்வேத மருந்துகள் மேம்பட்ட பயனை தந்துள்ளது. எனவே, அதனை பின்பற்றி வருகிறேன். தி ஓல்டு கார்டு என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். சார்லீஸ் தெரோன் நடித்துள்ளார். உலகை காக்கும் திறன் கொண்ட காயங்கள் வேகமாக ஆறும் திறன் கொண்ட காவல் குழுவைப் பற்றிய படம். நன்றாக எடுத்திருக்கிறார்கள். தி டிராப் என்ற படம், குற்றக் குழுக்களைப் பற்றியது. நிதானமாக நகரும் படம். உங்களுக்கு பிடிக்க வாய்ப்பு குறைவு.
ஃபுட் பாலிடிக்ஸ் என்ற நூலைப் படித்து வருகிறேன். நூல் நீளமாக 568 பக்கங்களைக் கொண்டது. அமெரிக்க ஆங்கிலம் என்பதால், இன்னும் நூறு பக்கங்களைத் தாண்ட முடியவில்லை. கொரோனா காலத்தில் நம்பிக்கையூட்டும் விதமாக செயல்பட்ட மனிதர்களைப் பற்றி படித்து வருகிறேன். பல்வேறு தேசிய இதழ்கள் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளனர். இவற்றை ஆதாரமாக வைத்துத்தான் நூலை எழுதவேண்டும் என நினைத்துள்ளேன். அறிவியல் சார்ந்த நேர்காணல்களை தொகுத்து எழுத ஆசையுள்ளது. அடுத்த ஆண்டு ்எனக்கு என்ன பரிசு இருக்கிறது என தெரியவில்லை. பார்ப்போம்.. சந்திப்போம்.
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக