ட்ரோன்களுக்கு அனுமதி! - மத்திய அரசின் புதிய முடிவு!
மத்திய அரசு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான சான்றிதழை எளிமையாக அளிக்கும்படி விதிமுறைகளை மாற்றியுள்ளது. இந்தியா 2030ஆம் ஆண்டு உலகளவிலான ட்ரோன் மையமாக மாறும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொழில்துறைகளிலும் பொருளாதாரம் வளரும் என நம்புவதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. விரைவில் நாம் வானில் பறந்து வரும் ட்ரோன் டாக்சிகளை பார்க்க முடியும் என ஜோதிராவ் சிந்தியா கூறியுள்ளார். இவர்தான் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
500 கி.கி அதிகமுள்ள ட்ரோன்களை பயன்படுத்தலாம் என அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 300 கி.கி எடையுள்ள ட்ரோன்கள்தான் அனுமதிக்கப்பட்டது.
சரக்குகளை கொண்டு செல்வதற்கு இனி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட வாய்ப்பு அதிகம்.
இதில் ஏற்படும் தவறுகளுக்கு அபராதம் ஒரு லட்சம் என்று விதிக்கப்பட்டுள்ளது. பிற விதிகள் மீறும்போது அபராதம் கூடுதலாக இருக்கலாம்.
ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான விதிகள் மஞ்சள், பச்சை, சிவப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் பகுதியில் 12 முதல் 45 கி.மீ வரையில் பயன்படுத்தக்கூடாது என்றும், பச்சை பகுதியில் 8 முதல் 12 கி.மீ தொலைவு வரை பயன்படுத்தக்கூடாது எனவும் விதிகள் கூறப்பட்டுள்ளன. இவை விமானநிலையம் உள்ள பகுதியாகும்.
மைக்ரோ ட்ரோன், நானோ ட்ரோன், ஆராய்ச்சி அமைப்புகள் பயன்படுத்தும் ட்ரோன்கள் ஆகியவற்றுக்கு விமான உரிமம் கிடையாது.
வெளிநாட்டு நிறுவனத்தினர் தயாரிக்கும் ட்ரோன்களுக்கு எந்தவித தடைகளும் கிடையாது.
பாதுகாப்பு மற்றும் உரிமம் ஆகியவற்றை பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனை செய்வது கிடையாது.
மாற்றங்கள் என்ன?
25 விண்ணப்பங்கள் இருந்தது மாறி இப்போது 5 விண்ணப்பங்களாக சுருங்கியுள்ளது.
ட்ரோனின் மாதிரி எண், தனித்துவ எண், ஆராய்ச்சி மாணவர்களின் உரிம எண் ஆகியவை தேவையில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.
72 வகையான கட்டணங்கள் குறைந்து 4 ஆக மாறியுள்ளது.
பாதுகாப்பு விஷயங்கள்
ஜம்முவில் விமானத்துறையின் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதன் காரணமாக சில பாதுகாப்பு விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பயன்படுத்துபவரின் ஆதார் மற்றும் பாஸ்போர் விவரங்கள் பதிவு அவசியம்.
ட்ரோன்கள் பயன்படுத்தக்கூடாத பகுதிகள் சிவப்பு ஏரியா என அரசு வகுத்துள்ளது. இதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அறிவிக்க முடியும்.
ட்ரோன் பள்ளிகளில் அதனை இயக்குவதற்கான பயிற்சி எடுத்து, உரிம ம் பெறுவது அவசியம். இறக்குமதி வர்த்தகத் துறையின் அனுமதி பெற்றுத்தான் ட்ரோன்களை வாங்க முடியும். ட்ரோன்களின் தரத்திற்கான சான்றிதழை க்வாலிட்டி கன்ட்ரோல் இந்தியா அமைப்பு வழங்குகிறது.
ஹெச்டி
கருத்துகள்
கருத்துரையிடுக