விண்வெளியில் இந்தியாவின் யுரேகா சாதனைகள் ! இந்தியா 75

 







இந்தியாவின் யுரேகா தருணங்கள்!

இந்தியா 75



சிறந்த அண்டைநாடு

இதற்கு இந்தியாவைத்தான் அடையாளமாக சொல்லவேண்டும். அண்மையில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசை உருவாக்க பல்வேறு பிரயத்தனங்கள் செய்து முதலீடு செய்து கோட்டை விட்டாலும் அங்குள்ள மக்களின் வாழ்வாதார நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. இருக்கும். 1971ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெறுவதற்கு இந்தியா உதவி செய்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வெற்றி பெற்றார். அகதிகள் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் செல்வதற்கும் உதவினார். பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறல்கள் குறித்த உலக நாடுகளின் கருத்துகளையும் கவனப்படுத்தினார். சோவியத்துடன் ஒப்பந்தங்களை செய்தார். மதம் சார்ந்த நாடு என்பதை இந்தியா, தனது செயல்பாடுகளால் மாற்றியது என மேற்சொன்ன சம்பவங்களை வைத்து உறுதி செய்யலாம். 

இறுதியாக ஜெயம்!


1961ஆம் ஆண்டு கோவாவை போர்ச்சுகீசியர்களிடமிருந்து இந்திய அரசு மீட்டது. இதற்கு ஆபரேஷன் விஜய் என்று பெயரிட்டனர். இப்போராட்டத்தில் ஏழு ராணுவ வீர ர்கள் பலியானார்கள். இந்த வெற்றியின் மூலம் 450 கால ஐரோப்பியர்களின் காலனி ஆட்சி முழுமையாக முடிவுக்கு வந்தது. 36 மணிநேரங்கள் நிலம், நீர், ஆகாயம் என போர் நடைபெற்றது. 

 செயற்கைக்கோள் வழியாக போர்!

போர் என்றதும் பயந்து விடாதீர்கள். இதன் களம் விண்வெளி. இஸ்ரோ, தனது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. இந்த வகையில் சீனா இதற்கு பின்னாடிதான் உள்ளது. 2017ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய சாதனை இந்தியாவிடம்தான் உள்ளது. 

விண்வெளிக்கனவு

1960ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த இந்தியாவில் எங்கு பார்த்தாலும் சிக்கல்கள்தான் நிரம்பியிருந்தன. காலனி கால ஆட்சி மண்ணை மட்டுமல்ல மக்களையும் சுரண்டியிருந்தது. இதனால் பொருளாதாரம் வீழ்ந்துகிடந்தது. கல்வியறிவு இல்லை. குழந்தைகளின் இறப்பும் அதிகரித்து வந்தது. ஆனால் அப்போது இந்தியர்களின் கனவு விண்வெளியில் இருந்தது. இந்திய ரசு விண்வெளி ஆராய்ச்சிகளை செய்ய இஸ்ரோ அமைப்பை நிறுவியது. விக்ரம் சாராபாய்தான் அதன் தலைவராக விண்வெளித்திட்டங்களை உருவாக்கினார். செயல்படுத்தினார். 

விண்வெளியில் இந்தியா! 

சந்திரயான் 2 விண்வெளியில் ஏவப்பட்டு நிலா, சூரியன் பற்றிய தகவல்களை கொடுத்து வருகிறது. 2012- 14 காலகட்டத்தில் செவ்வாய்க்கு செல்வதற்கான குறைந்த செலவிலான விண்கலம் உருவானது. முதல் முயற்சியிலேயே இது வெற்றியும் பெற்றது. அடுத்து 2023ஆம் ஆண்டு விண்வெளி வீர ர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் செயல்பாடாக ககன்யான் விண்கலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ரஷ்யாவின் விண்கலத்தில் இந்திய வீர ர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்று வந்திருக்கிறார். அவரிடம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, விண்வெளியிலிருந்து பார்க்க இந்தியா எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு அவர், சாரே ஜகான்சே அச்சா என்று பதிலளித்தார். 

அணுக்கடிகாரம்

விண்வெளியில் உள்ள பொருட்களைப் பற்றிய தகவல்களை சரிபார்க்க அளக்க தொலைவைக் கணிக்க அணுக்கடிகாரம் தேவை. இஸ்ரோ, முதலில் அணுக்கடிகாரங்களை ஐரோப்பாவிலிருந்து வாங்கிக்கொண்டிருந்தது. 2018இல்  தானாகவே அணுக்கடிகாரத்தை தயாரித்து பயன்படுத்தி வருகிறது. 

அணு உலைகள் 

இந்தியாவில் ஏழு அணு உலைகளில் 22 நியூக்ளியர் ரியாக்டர்கள் பயன்பாட்டில் உள்ளது. மொத்த மின்சாரப்பயன்பாட்டில் இதன் அளவு 3 சதவீதம் ஆகும். அடுத்து ஒரு அணு உலையை மகாராஷ்டிராவில் உள்ள ஜெய்தாபூரில் அமைக்க உள்ளனர். அப்படி அமைந்தால் இந்தியா உலகிலேயே அதிக அணுஉலைகள் கொண்ட நாடாக மாறிவிடும். 

சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா

பரம், மிஹிர், பிரத்யுஷ் ஆகிய மூன்றுமே இந்தியா தயாரித்துள்ள சூப்பர் கம்ப்யூட்டர்கள். இவை உலகின் ஐநூறு சக்தி வாய்ந்த கணினிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பரம் என்ற கணினி மூன்றிலுமே ஆற்றல் வாய்ந்தது. இக்கணினி பட்டியலில் 63வது இடம் பிடித்துள்ளது. மற்ற இரண்டும் டாப் 100 பட்டியலுக்குள் வந்துவிட்டன. மிஹிர் , பேரிடர் மேலாண்மை சார்ந்த பணிகளுக்கும் கல்வி ஆராய்ச்சிக்கும் பயன்படுகிறது. பிரத்யுஷ் கணினி, தட்பவெப்பநிலை சார்ந்த ஆய்வுகளை செய்துவருகிறது. 

அன்டார்டிகா ஆய்வு

அன்டார்டிகாவில் இந்தியா, பார்தி, மைத்ரி என்ற இரு ஆராய்ச்சி மையங்களை நிறுவி செயல்பட்டு வருகிறது.  மைத்ரி, 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பார்தி 2012இல் நிறுவப்பட்டது. பரிணாம வளர்ச்சி, தட்பவெப்பநிலை மாற்றங்கள் என பல்வேறு ஆராய்ச்சிகளை இங்குதான் இந்திய ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். 

கடல் சாதனை

இந்தியா, ஐ.நாவின் பாதுகாப்பு கௌன்சிலில் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளில் இடம்பெறவில்லை. 2016 இல் ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கியது. இதிலிருந்து கண்டம் விட்டு கண்டம் ஏவும் ஏவுகணைகளை பொருத்தி ஏவ முடியும். இப்போது அரிஹட் என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி சோதனை செய்து வருகின்றனர்.இதுபோல ஆறு கப்பல்களை உருவாக்கி வருகின்றனர். இவற்றில் இடம்பெற்ற 95 சதவீத பாகங்கள் உள்நாட்டு சரக்குதான்.

ஏவுகணை சொல்லும் சேதி

இந்தியாவில் பிருத்வி, அக்னி ஏவுகணைகள் உண்டு. ஆனாலும் கூட பிரம்மோஸ் ஏவுகணையைத்தான் அனைவரும் கவனித்தனர். சூப்பர்சோனிக் ஏவுகணையான இதனை, ஆகாயம், நிலம், நீர் என எதிலிருந்தும் பிற நாடுகளின் மீது ஏவ முடியும். இந்தியாவின் பிரம்ம புத்திரா, ரஷ்யாவிலுள்ள மாஸ்க்வா எனும் இரு ஆறுகளை நினைவுகூரும் வகையில் ஏவுகணையின் பெயர் அமைந்துள்ளது. அதிவேகமாக பாயும் இந்த வகை ஏவுகணை 2024இல் தயாரிக்கப்பட உள்ளது. 


HT

rachel

 








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்