உள்ளாடைகளைத் திருடும் சீரியல் கொலைகாரர்கள்!
சைக்கோ டைரி
சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை
சீரியல் கொலைகார ர்களைப் பற்றி பொதுவாக கூறப்படுவதில் முக்கியானது, அவர்கள் தங்களின் அம்மாவுடன் வாழ்கிறார்கள் என்பது. ஆங்கில திரைப்படங்களில் நார்மன் பேட்ஸ் இதற்கு
முக்கியமான உதாரணமாக காட்டப்பட்டது. பிறகு இந்த பாணியை அடுத்து வந்த ஹன்னிபால் லெக்சர் உடைத்தார்.
பெண்கள் எப்படி சீரியல் கொலைகார ர்களை ஆதரிக்கிறார்கள்? அவர்கள் இரக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்குகிறார்கள். இப்படி ஈர இதயம் கொண்டவர்களாக இருப்பதால்தான் சீரியல் கொலைகார ர்களைக் கூட தன்னை அறியாமல் காப்பாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். அம்மா என்ற இடத்தில் பையன் தவறு செய்தால் அதை மறைத்து அவனைக் காப்பாற்றுகிறவளாகவே இருக்கிறாள். இது உலகம் முழுக்க மாறாத விஷயம். இதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
இந்த பெண்கள்தான் சீரியல் கொலைகார ர்களுக்கான அலிபியை உருவாக்குகிறார்கள். இவர்க்களின் மதநம்பிக்கை, குற்றவுணர்ச்சியை கொலைகா ர்கள் பயன்படுத்திக்கொண்டு பணம், வாகனம், தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் பெண்களோடு இணைந்து இருப்பதை விரும்பாதபோதும் கிடைக்கின்ற உதவிகளை எங்கே பெறுவது என தயக்கமாகி இப்படி செய்கிறார்கள்.
சீரியல் கொலைகாரர்களும் மேன்சன், ரூம்களை எடுத்து நண்பர்களுடன் தங்கியிருப்பது வழக்கம்தான். ஆனால் இவர்களது வேலைக்கு செல்லாத முறை, பணமில்லாமல் ஹிப்பி போல திரிவது, வன்முறையான குணங்கள் விரைவிலேயே அவர்களை அங்கிருந்து அகற்றிவிடும்.
வேலை
சீரியல் கொலைகாரர்களுக்கு, சமூகத்தோடு இணைந்து பழகுவது கடினமான ஒன்று. இதனால் அவர்கள் பல்வேறு வேலைகளில் சேரமுடியாது. பொதுவாக வணிக மால்களில் செக்யூரிட்டி போன்ற வேலைகளுக்கு எளிதாக சேரலாம். இதிலும் நீடித்திருப்பது அவர்களின் குணங்களைப் பொறுத்ததுதான். எதற்காக இந்த வேலையில் சேருகிறார்கள்? சீரியல் கொலைகார ர்களின் பின்னணியை அதிகம் விசாரிக்காமல் வேலையில் சேர்த்துக்கொள்வார்கள் என்பதே முக்கியமான காரணம்.
சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை அடுத்தவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் என்பது முக்கியமானது. அதை நோக்கித்தான் அவர்கள் செல்வார்கள். செக்யூரிட்டி வேலையும் அதை சார்ந்ததுதான் என்பதால் எளிதாக அவர்களால் பொருந்திப்போக முடியும். சரக்கு வண்டிகளை ஓட்டுவதும் இவர்களுக்கு பிடித்தமானது. இதில் அடுத்தவர்களுடன் அதிகம் பேசவேண்டியதில்லை. எளிதாக இரைகளை பிடிக்கலாம். கூலி வேலைகள் என்பதிலும் சீரியல் கொலைகார ர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். வீட்டில் குறிப்பிட்ட வேலை செய்யவேண்டியிருக்கிறது என உடனடி வேலைக்கு கூப்பிடுபவர்களின் ஆபர்களை ஏற்று வேலைகளை செய்துகொடுப்பார்கள். சில மணி நேர வேலைதான். உடனே காசும் கிடைத்துவிடும் என்பதால் பெரும்பாலும் பகுதி நேர வேலைகளை இவர்கள் ஏற்கிறார்கள்.
குற்ற ஆவணங்கள்
சீரியல் கொலைகாரர்களுக்கு குற்ற ஆவணங்கள் இல்லையென்றால் அவர்கள் குற்றமே செய்யவில்லை என்று அர்த்தம் ஆகாது. அவர்கள் இதுவரை காவல்துறையில் மாட்டவில்லை என்று கூறலாம். அதிகாலையில் படுக்கையிலிருந்து எழும் யாரும் இனி நான் சீரியல் கொலைகாரன் என்று சொல்லிவிட்டு கொலைகளை செய்வதில்லை. அவர்கள் கொலைகளை செய்வதும், தன்னைத்தானே தனி உலகில் அழித்துக்கொள்வதும் இயற்கையாகவே நடக்கிறது.அவர்களின் செயல்களில் இதன் எதிரொலிப்பைப் பார்க்கலாம்.
வீடு, ஆபாசப்படங்கள் என்பது முதலில் இவர்களது உலகமாக இருக்கும். இவற்றைக் கடந்து வந்தபிறகு, உண்மையாக உலகில் இவர்களது செயல்கள் தொடங்கும். அதில்தான், பிறரை உள்நோக்கத்துடன் தொடுவது, உள்ளாடைகளை திருடுவது, பிறரின் வீட்டுக்குள் சென்று தனது அடையாளமாக பபுள்கம், ரோஜா என சில பொருட்களை விட்டு வருவது ஆகியவற்றை செய்வார்கள்.
சிறு பொருட்கள் திருடு போவது, உள்ளாடைகளை திருடுவது ஆகியவற்றை பெரியளவு குற்றசெயல்களாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. இவற்றை முன்னமே காவல்துறையில் தெரிவித்திருந்தால் பல்வேறு குற்றசெயல்பாடுகளை தடுக்க முடியும் என்பது உண்மை. ஆனால் இதனைக் கண்டுகொள்ளாமல் விடுவதால், சீரியல் கொலைகார ர்கள் மன தைரியம் பெற்று துணிச்சலான காரியங்களில் இறங்குகிறார்கள். பிறகுதான் காவல்துறையினருக்கு தலைவலியான சமாச்சாரங்கள் தொடங்குகின்றன.
Pat brown
கருத்துகள்
கருத்துரையிடுக