நான் எந்தக்கட்சிக்கும் எதிரானவன் இல்லை! - பா.ரஞ்சித்

 







பா.ரஞ்சித் 

திரைப்பட இயக்குநர்

சார்பட்டா உங்களுடைய சிறந்த படம் என நினைக்கிறீர்களா?

நான் இயக்கிய அனைத்து படங்களுமே எனக்கு பிடித்தமானவைதான். அதிக முயற்சி எடுத்து இயக்கி படம் என்றால் அது காலாதான். அது சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்கள் முக்கியமானவை. நான் மிகவும் நேசித்த படம் என்றால் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகியவற்றை சொல்லுவேன். எனது படங்களை நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவை அனைத்துமே எனக்கு பிடித்தவைதான். முந்தைய படங்களுக்கு வந்த விமர்சனங்கள்தான், சார்பட்டாவை வலிமையாக உருவாக்க உதவியது. 

உங்களுடைய படங்களுக்கு திரைக்கதை எப்படி அமைக்கிறீர்கள்?


நான் என்னுடன் எப்போதுமே குறிப்பேடு ஒன்றை வைத்திருப்பேன். அதில் அவ்வப்போது தோன்றும் ஐடியாக்களை எழுதி வைப்பேன். பின்னர் அவற்றை கணினிக்கு மாற்றிக்கொள்வேன். சார்பட்டா படத்திற்கு சென்னையிலுள்ள தலித் மக்களின் வாழ்க்கையை அறிந்த எழுத்தாளர் தமிழ் பிரபா உதவினார். எட்டு அல்லது ஒன்பது திரைக்கதைகளை எழுதினோம். அதில் ஏராளமான பாத்திரங்கள் உருவாகி வளர்ந்து அழிந்தன. அதில் எனக்கு பிடித்தமான பாத்திரம் ரதி. இவர் கறிக்கடை வைத்திருப்பவராக டான்சிங் ரோசின் அக்காவாக வருவதாக நினைத்திருந்தோம். 

படங்களில்  எந்தளவுக்கு கற்பனையை சேர்க்கலாம் என நினைக்கிறீர்கள்?

எனது திரைப்படங்களை வரலாற்று அறிஞர் அல்லது ஆவணப்படம் எடுப்பவர் போல நினைத்து எடுப்பதில்லை. கருத்தியல் சுதந்திரத்தை காப்பதோடு உண்மையை மாற்றி படம் எடுப்பவன் நான் அல்ல. உண்மைக்கும் புனைவுக்குமான உலகங்கள் தனித்தனியாவை. நான் இரண்டிலுமேயே பங்காற்ற நினைக்கிறேன். 

நீங்கள் எடுத்த படத்தில கருணாநிதி, எம்ஜிஆர் ஆகிய இரு தலைவர்களும் வருகிறார்கள். அவசரநிலை காலகட்டம் கூட பேசப்படுகிறதே?


நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக இல்லை. திமுக அவசரநிலையை எதிர்த்து போராடியது. அதற்கான பெரிய விலையை அக்கட்சி கொடுக்க நேரிட்டது உண்மை. அந்தக் காலத்தில் திமுகவின் அடையாளத்தை தங்களது உடைகளில் பொறித்துக்கொண்டு  குத்துச்சண்டை வீரர்கள் விளையாடுவது இயல்பானதாக இருந்தது. 1975-78 காலகட்டத்தை மட்டுமே நான் படத்தில் பயன்படுத்தினேன். 1980 என்ற காலகட்டத்தைப் பயன்படுத்தினால் அதிமுகவைப் பற்றிய பேசவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். 


இந்தியன் எக்ஸ்பிரஸ்

அருண் ஜனார்த்தனன்










கருத்துகள்