இந்தியாவில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள்! இந்தியா 75
சிறந்த வாழ்க்கை
நகரங்களின் அதிகரிப்பு தந்த வாய்ப்பு
இந்திய நகரங்கள் ஏராளமான மாற்றங்களைப் பெற்றன. கடந்த காலத்தில் இருந்த சாதி, குடும்ப பெருமை குறைந்தது வேலை வாய்ப்புகள் அதிகரித்தன. பிற மாநிலங்களிலிருந்தும் கூட தென்னிந்தியாவிற்கு ஏராளமான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாது, பிற இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும் வளர்ச்சி கிடைக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் வருகையால் அரசும் பல்வேறு அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அனைவருக்குமே அன்பு
பாலின ரீதியாக சிறுபான்மையினருக்கு மதிப்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. 2001ஆம் ஆண்டு நாஷ் பவுண்டேஷன் இதற்கான வழக்கைத் தொடுத்தது. இதில் மாற்றுப்பாலினத்தவர்களை குற்றவாளிகளாக கருதும் காலனிய சட்டமான பிரிவு 377 ஐ நீக்க கோரினர். ஆமை வேகத்தில் நடந்த வழக்கு 2009இல் நடைபெற்றபோது உயர்நீதிமன்றம் இந்தபிரிவு வயது வந்தோருக்கு பொருந்தாது என கூறிவிட்டது. ஆனாலும் மீண்டும் சிலர் வழக்குப் போட இப்போது வழக்கு பத்தாண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
மாற்றுப்பாலினத்தவருக்கு உரிமை
சமத்துவம் அனைத்து பாலினத்தவருக்கும் உண்டு என உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு தீர்ப்பில் கூறியது. இதன்மூலம் மாற்றுப்பாலினத்தவரை பாதுகாக்கும் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகள் சட்டம் மூலம் அங்கீக்கரிக்கப்பட்டுள்ளது.
இணைந்த இந்திய ஒன்றியம்
இந்தியாவில் இப்போது மாநிலங்களில் 45 சதவீத இணைய இணைப்பு உள்ளது. முதலில் இந்த சதவீதம் 7 சதவீதமாக (2007) இருந்தது. 2025இல் இந்த இணைய பயனாளர்களின் எண்ணிக்கை 900 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராட்பேண்ட் இணையத்தை விட போனில் பயன்படுத்தும் இணையமே இந்தியாவில் அதிகமாக உள்ளது. பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இணையம் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவிற்கு இப்போது போட்டி, அதன் அருகிலேயே உள்ள சீனா மட்டுமே.
2019ஆம் ஆண்டு ஒரு ஜிபி டேட்டா மிக குறைவான விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது . இது அமெரிக்காவை விட 45 சதவீதம் குறைவான விலையாம். இப்போதைக்கு நாட்டில் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பலவும் தடுமாறிக்கொண்டுதான் தொலைபேசி சேவையை அளித்து வருகின்றன. ஜியோ, ஏர்டெல் மட்டுமே களத்தில் வலுவாக நிற்கின்றன. மற்ற நிறுவனங்களான வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை நஷ்டத்தில் வீழ்ந்துவிட்டன.
வெள்ளையர்களின் டெக்ஸ்மதி
இந்தியர்களின் பாஸ்மதி அரசியை 1997ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் தன்னுடையது என காப்பிரைட் பதிவு செய்துவிட்டது. எப்போதும் போலவே தாமதமாக விழித்த அரசு, தன்னுடைய நாட்டில் விளைந்த அனைத்து பொருட்களையும் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியது. வாரணாசி கண்ணாடி, டார்ஜிலிங் தேயிலை, நீலாம்பூர் தேக்கு என 370 பொருட்களை காப்பிரைட் பதிவு செய்துவிட்டது. இதன் காரணமாக பாஸ்மதி அரிசி இந்தியாவுக்கு சொந்தமாகிவிட்டது. இதனால் அமெரிக்கர்கள் தங்களது அரிசிக்கு சிம்பிளாக, டெக்ஸ்மதி, ஜாஸ்மதி, காஷ்மதி என பெயர் மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். சாதித்துவிட்டோம் அல்லவா?
மெட்ரோ சலோ
1984ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கியது. 2002ஆம் ஆண்டு டெல்லியில் மெட்ரோ தனது பயணத்தைத் தொடங்கியது. சுத்தமான ரயில், பாதுகாப்பு, விலை குறைவு என பல்வேறு அம்சங்களால் மெட்ரோ ரயில் அங்கு முக்கியமான இடத்தைப் பிடித்துவிட்டது. இங்கு ரயில்கள் ஓடவில்லையென்றால் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையே தடுமாறிப் போய்விடும். மேலும் நாட்டிலுள்ள பத்து நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
சாதாரண ரயில் சேவையும் சும்மா இல்லை. கொஞ்சம் கழிவறை நெடி அதிகம் அடித்தாலும் 1 பில்லியன் டன்கள் சரக்கையும், தினசரி 22 மில்லியன் மக்களை கொண்டு சென்று சாதித்துள்ளது. கன்னியாகுமரியிலிருந்து அசாமில் உள்ள தில்புருகார் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் 82 மணி நேரங்கள் பயணிக்கிறது. இதன் வழித்தடத்தில் மொத்தம் 56 நிறுத்தங்கள் உள்ளன.
கார் கனவு
2009ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸின் உரிமையாளர் ரத்தன் டாடா, ஒரு லட்ச ரூபாய்க்கு நானோ என்ற காரை உருவாக்கி விற்றார். பைக்குகளின் விலையே ஒரு லட்சம் வந்துவிட்ட நிலையில் ஒரு லட்சத்திற்கு ஷோரூம் விலை என்றால் அது எவ்வளவு குறைவு... ரத்தன் டாடவின் கனவு பலருக்கும் விருப்பமாக இருந்தது. இது காரா, ஆட்டோவா என பலரும் கிண்டல் செய்தாலும், இன்று விற்பனையில் நானோ இல்லாவிட்டாலும் டாடாவின் மகத்தான முயற்சி என்பதில் எந்த ஐயமில்லை.
ஆயுளே கூடுதே
இன்று நவீன மருத்துவம் கையில் உள்ளது. வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. ஆன்டிபயாடிக்குகள் ஏராளம் உள்ளன. உலகளவில் மனிதர்களின் ஆயுள் 72. 7 வயதாக உள்ளது. இந்தியாவில் மதக்கலரம், வெறுப்புவாதம், நோய்த்தொற்று ஆகியவற்றால் ஒருவர் பாதிக்கப்படாமல் இருந்தால் 69.7 ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாங்க அகதிகளே வாங்க
இந்தியாவில் நிர்பந்தம் உருவானால்தான் சட்டமே ஏற்படுத்தப்படும். இதேநிலைதான் அகதிகளின் பிரச்னைக்கும் கூட . மியான்மர், வங்கதேசம், திபெத், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளிலிருந்து பிழைக்க வழியில்லாமல் உயிர் பிழைக்க வருபவர்களுக்கு வரவேற்பு கொடுப்பது இந்தியா மட்டுமே. இப்போது குடியுரிமை சட்டம், இந்தியர்கள், இந்திய மண் என்று தேசியவாதம் பேசினாலும் கூட அகதிகள் இந்தியாவில் ஏராளமானோர் உள்ளனர்.
படம் காட்டுவோம்!
1947ஆம் ஆண்டு இந்தியாவில் 150 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டு 1,986 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் 364 படங்கள் இந்திப் படங்களாகும். தென்னிந்தியாவிலும் ஏராளமான படங்களை தயாரிக்கப்பட்டன. இப்படங்களே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வசப்படுத்தின. படங்களில் அழகும், கதை சொல்லும் முறையும் மேம்பட்டுள்ளது. இதன் விளைவாக படங்களை உலக நாடுகளிலுள்ள பார்வையாளர்களை மனதில் வைத்து தயாரிப்பதும் தொடங்கியுள்ளது.
ஹெச்டி
ரேச்சல்
கருத்துகள்
கருத்துரையிடுக