இடுகைகள்

திரைப்பட விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழ