பூச்சி, தேனீக்களை வைத்தே கொலைவழக்கில் துப்புதுலக்கும் பூச்சி வல்லுநர்! - இன்செக்ட் டிடெக்டிவ் 1
இன்செக்ட் டிடெக்டிவ் சீன தொடர் யூட்யூப் ஓவியத்தை அடிப்படையாக கொலை வழக்குகளை பார்த்தோம் அல்லவா.. அதேபோல, இந்த தொடர் பூச்சிகளை, புழுக்களை, எறும்புகளை அடிப்படையாக கொண்டது. நாயகனுக்கு மோசமான இறந்தகாலம் உள்ளது. அப்பா கார் விபத்தில் இறந்துபோகிறார். அம்மா, வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து இறக்கிறார். பாட்டிதான் நாயகன் ஜின்டிங்கை வளர்க்கிறார். மாமா சூ, ஆதரவாக இருக்கிறார். உண்மையில் வங்கி நடத்திய அப்பாவின் விபத்துக்கு யார் காரணம், அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது எப்படி என்பதற்கான காரண காரியங்களை தொடர் தேடுகிறது. முதல் எபிசோடில், ராட்டினம் ஒன்றில் மாணவர் நாக்கை கடித்தபடி வாயில் ரத்தம் வழிய இறந்துகிடக்கிறார். அங்கு சென்ற காதலர்கள் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இறந்தவர் ஸ்மார்ட் வாட்ச் வழியாக நண்பர்கள் சிலருக்கு போன் செய்திருக்கிறார். அதில் ஒருவர்தான் பூச்சிகளை ஆராய்ச்சி செய்யும் நாயகன் ஜின். இன்ஸ்டிடியூட்டில் பிஹெச்டி படித்துக்கொண்டிருக்கும் மாணவர் ஜின் மீது காவல்துறை சந்தேகப்படுகிறது. விசாரிக்க போகும்போது அறையை மூடி தேனீக்களைப் பற்றிய ஆராய்ச்சியை செய்துகொண்டிருக்கிற...