இடுகைகள்

மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்று மாசைத் தீர்க்க ஹைட்ரஜன் உதவுமா?

படம்
  காற்று மாசைத் தீர்க்குமா ஹைட்ரஜன்? டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் குறைக்க, ஹைட்ரஜன் வாகனங்களை பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம், அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.  இன்று இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கும், ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கும், கரிம எரிபொருட்களே ஆதாரமாக உள்ளன. இதில் ஹைட்ரஜன் உருவாக்கத்திற்கு இயற்கை எரிவாயு பயன்படுகிறது. மின்சார உருவாக்கத்திற்கு நிலக்கரி, நீர், எரிவாயு ஆகிய இயற்கை வள ஆதாரங்கள் உதவுகின்றன. ஹைட்ரஜன் வாகனங்கள் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, கரிம எரிபொருட்களை விட குறைவு. இதனால் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட பேருந்துகளை இயக்கும் யோசனையை முன்னர் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உலக நாடுகள் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஜப்பானும், தென்கொரியாவும் ஹைட்ரஜன் வாகனங்களை ஆதரித்து, உருவாக்கி வருகின்றன. அமெரிக்காவும், சீனாவும் மின் வாகனங்களை உயர்த்திப்பிடிக்கின்றன. இந்தியாவிலும் மின் வாகனங்களாக மோட்டார் சைக்கிள் முதல் பேருந்துகள் வரை இயக்கப்படவும் தொடங்கிவிட்டன.  ஹைட்ரஜன் வாகனங்களுக்கும் (HV), மின் வாகனங்