சிவப்பு இறைச்சியில் கசியும் திரவம், கிராமபோன் கண்டுபிடிப்பாளர், ராட்சஷ சிலந்தி - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு
மாட்டிறைச்சியில் இருந்து வெளியாகும் சிவப்பு நிற திரவத்தின் பெயர் என்ன? மாட்டிறைச்சியை வெட்டி வைத்த பிறகு அதிலிருந்து மெல்லிய சிவப்பு நிறத்தில் திரவம் ஒன்று கசியும். அது ரத்தமோ என பலரும் பதற்றமடைகிறார்கள். அது ரத்தமல்ல. அதன் பெயர் மையோகுளோபின். இது நீரில் கரையக்கூடியது. இந்த வேதி திரவம், உடலில் உள்ள ஆக்சிஜனை தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை செய்கிறது. ஒரு ஹீமோகுளோபின் மூலக்கூறு, நான்கு ஆக்சிஜன் மூலக்கூறுகளை கவர்ந்திழுத்து சேமித்துக்கொள்கிறது. ஆனால் மையோகுளோபின் மூலக்கூறு, ஒற்றை ஆக்சிஜன் மூலக்கூறை மட்டுமே சேமிக்கிறது. இரண்டின் பணிகளைப் பார்ப்போம். ஹீமோகுளோபின், உடல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. ஆனால், மையோகுளோபின் தற்காலிகமாக ஆக்சிஜனை சேகரித்து வைத்துக்கொள்கிறது. கடலில் உள்ள உயிரினங்களான திமிங்கலம், சீல் ஆகியவற்றின் உடலில் மையோகுளோபின் அதிகளவில் காணப்படுகிறது. இவை. மூச்சு விடுவதற்காக சிலமுறை மட்டுமே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மற்ற நேரங்களில் மையோகுளோபின் சேகரிப்பு உதவுகிறது. பிட்ஸ் சிவப்பு இறைச்சியை ஒருவர் சமைக்கும்போது, அதன் சிவப்பு நிறம் ...