இடுகைகள்

பூமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூமியின் உள்ளே... அறிவியல் கட்டுரை நூல் வெளியீடு - அமேசான் தளம்

படம்
           பூமியின் உள்ளே... என்ற அறிவியல் கட்டுரை நூல், அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் அத்தளத்தில் வாசிக்கலாம்.    

அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி - காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன?

படம்
       காரிங்க்டன் நிகழ்ச்சி என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ரிச்சர்ட் காரிங்க்டன் என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியலாளர். சூரியனை கண்காணித்து அதன் மாற்றங்களை பதிவு செய்தவர். அதன் மேற்புறத்தில் நடைபெறும் சுழற்சி, சீரற்றதாக உள்ளது என கண்டுபிடித்துக் கூறினார். சூரியனில் நடைபெறும் வேதி வினைகள் காரணமாக மின்காந்த அலைகள் அதிகளவில் வெளியேறுகிற நிகழ்வை காரிங்க்டன் நிகழ்ச்சி என்று கூறுகிறார்கள். 1859ஆம் ஆண்டு வானியலாளர் காரிங்க்டன் இப்படியான நிகழ்ச்சி ஒன்றை பதிவு செய்தார். அன்று, மின்காந்த அலைகளின் பாதிப்பு உலகிற்கு பெரிதாக இல்லை. மின்னணு பொருட்கள் குறைவாக பயன்பாட்டில் இருந்தன. மின்சார வசதிகளும் பேரளவில் பரவலாகவில்லை. ஆனால் தந்தி முறை பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அலுவலகங்களில் நெருப்பு பற்றிக்கொண்டது. முழு எந்திரங்களையும் பாதித்தது. சூரிய மின்காந்த தாக்குதல், சீரான இடைவெளியில் நடப்பவை என கணிக்க முடிவதில்லை. இந்தமுறை அதுபோல தாக்குதல் நடந்தால், செயற்கைக்கோள்கள் நிரந்தரமாக பழுதாகும். பூமியில் உள்ள தகவல் தொடர்புகள் முற்றாக துண்டிக்கப்படும். அமெரிக்க அறிவியல் அகாடமி இதுபற்றிய ஆய்வை ...

கருந்துளையால் ஈர்க்கப்படும் மனிதன், பூமியின் அடுத்தபக்கம் - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி காற்று இல்லாத சூழலில் மனிதரொருவர் பூமியின் குழி ஒன்றில் விழுகிறார். அவர் மறுமுனையை அடைய எவ்வளவு நேரமாகும்? 43 நிமிடங்கள். முதலில் சில பிட்ஸ்களைப் பார்ப்போம். பூமியின் விட்டம் தோராயமாக 12, 470 கிலோமீட்டர்கள். குழியில் விழுபவர் நொடிக்கு 7,900 மீட்டர் வேகத்தில் விழுவார். வேகமாக மறுபக்கம் வந்து விழுந்தால் நல்லது. இல்லையெனில் மீண்டும் கீழே விழுமாறு சூழல் ஏற்படக்கூடும். பூமியின் நடுப்பகுதியில் குழியைத் தோண்டி அதில் குதிப்பது சாதாரண காரியம் கிடையாது. முதல் பிரச்னை குழியின் நூறு மடங்கு பெரிதாக இருக்கவேண்டும். அடுத்து அதில் உள்ள அதீத வெப்பத்தை எதிர்கொள்ள பயணிக்கு உதவ வேண்டும். இல்லையெனில் குழியில் இறங்கி பயணிக்கும் பாதி வழியில் பொசுங்கிப் போய்விடுவார். இதுவெல்லாம் இல்லாமல் நிலநடுக்கம், எரிமலை ஆபத்துகளை கடந்து சென்றால் மட்டுமே மறுமுனைக்கு செல்ல முடியும். பூமியின் நடுப்பகுதி என்றில்லை. பூமியின் அடுத்த பக்கத்திற்கு எளிதாக செல்ல ஒருபுறமிருந்து குழி தோண்டுவது என்பது குறுக்குவழி போன்று அமையவேண்டும். அதிலும், ஈர்ப்புவிசை, உரா...

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - மிஸ்டர் ரோனி

படம்
            பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன? இதற்கான பதிலை பலரும் அறிந்திருப்பார்கள். பதில் சொல்வதும் எளிதுதான். ஆனால் அதன் பின்னணிதான் இங்கு முக்கியம். சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளுக்கு 67 நிலவுகள் உள்ளன. இதில் பெரிய நிலவின் பெயர், கனிமெட். 2600 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதுவே பிற கோள்களுக்கும் நிலவு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ள தகவல். இதுபற்றிய டிவி வினாடி வினா நிகழ்ச்சியில் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. ஜீரோ தொடங்கி பதினெட்டாயிரம் நிலவுகள் வரை பதில் தரலாம் என கூறப்பட்டது. ஆனால் பொருத்தமான உண்மைக்கு அருகில் உள்ள பதில் ஒன்று. பூமிக்கு ஒரு நிலவு உள்ளது. பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஏராளமான பாறைக்கோள்கள் வட்டப்பாதைக்கு வருகின்றன. பல்லாண்டுகளாக சுற்றி வருகின்றன. அவற்றை நாம் நிலவு என்று கூறுவதில்லை. இதற்கு காரணம் இரண்டே விஷயங்கள்தான். துல்லியமாக சொன்னால் அறிவியலாளர்கள் வகுத்த இரண்டு விதிகள். அவை ஆயிரம் ஆண்டுகளாக வட்டப்பாதையில் சுற்றிவர வேண்டும். அதன் அளவு ஐந்து கி.மீ. என்ற அளவு அல்லது அதற்கு மேல் இருக்கவேண்...

எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ

படம்
 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே?  உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான ச...

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை...

விலங்குகளின் புத்திசாலித்தனம் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதா?

படம்
  பகுதி 2 விலங்குகளின் மனம் எப்படி இயங்குகிறது? மனிதர்கள் ஐம்புலன்கள் வழியாக ஒன்றை அறிந்து அதன் படி செயல்படுவது குறைந்துவிட்டது. காரணம், அவர்கள் ஐம்புலன்களை விட மூளையை பயன்படுத்துகிறார்கள். இதன் வழியாக கருவிகளை உருவாக்க முடிந்தது. தேனீ, தான் பறக்கும் இடத்தில் உள்ள காந்தப்புலத்தை உணர்கிறது. தனது கூட்டை எளிதாக கண்டறிந்து திரும்பச்செல்கிறது. இதை மனிதர்கள் ஜிபிஎஸ் கருவி இல்லாமல் செய்ய முடியாது. கைதிகளை சிறையில் பல்வேறு அறைகளில் அடைத்து வைத்திருப்பார்கள். அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள் ஆகிய இரண்டு இனத்தின் மூளையின் செயல்பாடும் உள்ளது. செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டும் பெரிதும் வேறுபட்டது. 1974ஆம் ஆண்டு தத்துவவாதி தாமஸ் நாகல்,வௌவாலாக இருப்பது எப்படி என புகழ்பெற்ற கட்டுரையை எழுதினார். இவர், அமெரிக்க தத்துவ வல்லுநர்.வௌவால் குகையில், மரத்தில் தொங்கும்போது அதன் மனதில் என்னவிதமாக கற்பனைகள் தோன்றும் என விளக்கி எழுதியிருந்தார். அது மனிதர்களை எப்படி பார்க்கிறது என விளக்கப்பட்டிருந்தது. அறிவியல் ரீதியாக வௌவாலைப் பார்ப்பது வேறு, அதன் வாழ்க்கையை அப்படியே புரிந்துகொண்டு உணர்வது வேறு. இ...

காலநிலை மாற்றத்தை எளிமையாக புரிந்துகொள்ளலாம்! - காலநிலை மாற்றமும், தட்பவெப்பநிலையும்

படம்
    காலநிலை மாற்றம் பூமி தன்னுடைய 4.54 பில்லியன் ஆண்டு வரலாற்றில் அதனுடைய காலநிலையை மாற்றிக்கொண்டே உள்ளது. இதற்கு முக்கியக் காரணங்கள் என சூரியனின் கதிர்வீச்சு, பூமியின் வட்டப்பாதை மாற்றங்கள், விண்கல் மோதுவது என கூறலாம். இதனால் ஏற்படும் காலநிலை மாற்ற விளைவுகளுக்கு அதிக காலம் தேவை. அதாவது, அதன் பாதிப்புகளை உணர்வதற்கு நமக்கு அதிக காலம் பிடிக்கும். இப்போது அறிவியல் ஆராய்ச்சியில் நமக்கு கிடைத்திருக்கும் தகவல்கள்படி மனிதர்களின் செயல்பாட்டால், காலநிலை மாற்றம் வேகமாக நடந்து வருகிறது. மேலும இயற்கையாக நேரும் வேகத்தை விட இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இருநூறு ஆண்டுகளில் தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், மாசுபாடு, மக்கள்தொகை, காடுகள் அழிப்பு காரணமாக நிலம், கடல், காற்று என பலவும் பாதிக்கப்பட்டுவிட்டது. பூமியின் பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் கடுமையாக பாதித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அதிகளவு வெளியிடப்ப்படுவதால், பசுமை இல்ல விளைவின் தாக்கம் நினைத்துப் பார்க்க முடியாதபடி அதிகரித்து வருகிறது. பூமியிலுள்ள அடிப்படை கனிம வளங்களை பயன்படுத்தி வளர்ச்சி பெறுவதோடு அதனால் ஏற்படும் மாசுபா...

பூமியின் அடித்தட்டு மர்மம்! - பூமியின் அடித்தட்டில் இருப்பது உலோகமா, வேறு பொருட்களா?

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை...

தெரியுமா? புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்!

படம்
  தெரியுமா? ஆக்சலரோகிராஃப் (Accelerograph) நிலநடுக்கத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி. இதிலுள்ள மூன்று ஆக்சலரோமீட்டர் தலைப்பகுதி, நிலநடுக்கத்தை அளவிடுகிறது. இதனை இணையத்தில் நேரடியாகவும் இணைத்து பயன்படுத்தலாம்.  ஆக்சலரோமீட்டர் இக்கருவியை ஹெலிகாப்டர், கப்பல், விமானம் ஆகியவற்றில் ஈர்ப்புவிசை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சீஸ்மோமீட்டரையும் ஆக்சலரோமீட்டராக பயன்படுத்தலாம்.   ஆசிட் ராக்  பாறையில் 60 சதவீத அளவுக்கு சிலிகா  இருந்தால் அல்லது சிலிகா கனிமங்களாக இருந்தால் அதற்கு ஆசிட் ராக் என்று பெயர். இதில் பத்து சதவீதம் அளவுக்கு குவார்ட்ஸ் இருக்கும். 

பூமிக்கு நுண்ணுயிரிகள் அவசியம்! - ராபர்ட்டோ கோல்ட்டர்

படம்
  நேர்காணல் ராபர்ட்டோ கோல்ட்டர் அமெரிக்காவிலுள்ள நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மனிதர்களின் வாழ்க்கை, சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நுண்ணுயிரிகள் எதற்கு அத்தியாவசியம் என்று கூறுகிறீர்கள்? நமது பூமி இயங்கும் செயல்பாட்டிற்கு, நுண்ணுயிரிகள் பங்களிப்பு முக்கியம். நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும் வாழ்கைகயும் பூமியில் சாத்தியமாகி இருக்காது. கடலில் ஆக்சிஜன் உற்பத்தியாக நுண்ணுயிரிகள் உதவுகின்றன. உயிரினங்களின் வாழ்வுக்கு முக்கியமான சல்பர், நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை நுண்ணுயிரிகள்தான் தயாரிக்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, பயிர்கள் மண்ணில் விளைய என அனைத்து முக்கிய நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளது.  மனிதர்களுக்கு நுண்ணுயிரிகளின் உதவி தேவையா? பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தும் , தொடர்புகொண்டும் தான் இயங்குகின்றன. இந்த வகையில் நம் உடலிலுள்ள தோல், நுண்ணுயிரிகளோடு தொடர்புகொண்டுதான் உள்ளது. அதேபோல,...

பூமியின் அடித்தட்டு மர்மம்!

படம்
  பூமியின் அடித்தட்டு மர்மம்! பூமியின் கீழ்ப்புறபகுதியில் நிறைய மர்மங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும் நாம் அறிந்தது, குறைவான தகவல்களைத்தான். புவியோடு பகுதி, மூடகப் பகுதியைக் (Mantle) கடந்து கண்டத்தட்டுகள், வெளிப்புற, உட்புற கருவப் பகுதிகளில் (Outer, inner core ) அழுத்தமும் வெப்பமும் அதிகம். பூமியின் கீழே 5 ஆயிரம் கி.மீ. ஆழத்திற்கு செல்லும்போது, அங்குள்ள உட்கருவத்தில்  இரும்பு, நிக்கல் உருண்டையான வடிவத்தில் உள்ளது என்பதே ஆய்வாளர்களின் எண்ணமாக இருந்தது.  நேச்சர் இதழில் வெளியாகியுள்ள அறிவியல் அறிக்கையில், உட்கருவத்தில் திட, திரவம் என இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையில் (Super ionic state) பொருட்கள் உள்ளன என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றிய ஆய்வுக்காக, நிலநடுக்க அலைகளைப் (Seismic waves) பயன்படுத்தியுள்ளனர்.  புவி அடுக்குகளுக்கு இடையில் நிலநடுக்க அலைகள் வெவ்வேறு அலைநீளத்தில் செலுத்தப்பட்டு, அதில் உள்ள வேதியியல் பொருட்களை அறிய முயன்றனர். இதற்கு முன்னர் செய்த ஆய்வில், ஷியர் அலைகளை (Shear waves)  பயன்படுத்தினர். இதில் கிடைத்த  தகவல்களை...

வெப்ப அலைகளைக் கட்டுப்படுத்த பசுமை தொழில்நுட்பங்கள் தேவை!

படம்
  பெஞ்சமின் ஜெய்ட்சிக் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்.  அதிகரித்து வரும் வெப்பம் மனிதர்களின் ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது? 2015ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட வெப்ப அலை பாதிப்பு நிறைய மரணங்களை ஏற்படுத்தியது. மக்களின் மரணம் உண்மையில் வேதனையானது. ஆனால் வெப்ப அலை பற்றி குறைத்து மதிப்பிட்டதுதான் இப்பட்டிப்பட்ட சிக்கலுக்கு காரணம். இதயம் தொடர்பான பாதிப்பு கொண்டவர்கள், ஆஸ்துமா, நுரையீல் சார்ந்த நோய்கள், குறைபாடு கொண்டவர்களுக்கு வெப்ப அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி பாதிப்பை நாம் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. அப்படி செய்யும்போதுதான் பாதிப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.  வெப்ப அலைகளால் ஏதும் பின்விளைவுகள் ஏற்படுகிறதா? கண்டிப்பாக. வெப்பநிலை அதிகரிக்கும்போது, ஆவியாதலின் அளவும் கூடும். இதனால் நகரங்களில் வாழும் மக்கள் புழுக்கத்தால் தவிப்பார்கள். வெப்ப அலையால் வியர்வை பெருகும். தாவரங்கள், மண் ஆகியவையும் ஈரப்பதத்தை இழக்கும். வறண்ட நிலப்பரப்பு அதிக வெப்பத்தை வெளியேற்றும். வெப்ப பாதிப்பை வெப்ப அலை மேலும் அதிகரிக்கும்.  இப்போதுள்ள வெப்ப அலைக பாதிப்ப...

பிட்ஸ் - புவியியல்

படம்
  பிட்ஸ்  அமெரிக்காவில் இயங்கும் நிலையில் 18 எரிமலைகள் உள்ளன. இவை அலாஸ்கா, ஹவாய் மற்றும் மேற்கு கடற்புர பகுதிகளில் அமைந்துள்ளன.  மாணிக்கம், நீல மாணிக்கம் ஆகிய இரண்டுமே ஒரே கனிமத்தால் உருவானவை. இதன் பெயர் கொருண்டம் (corundum). வைரத்தை விட அரிதானவை மாணிக்கம், நீலமாணிக்கம், மரகம் ஆகிய கற்கள்.  வைரங்கள் அனைத்துமே ஒளி ஊடுருவும் தன்மை கொண்டவை அல்ல. இவை மஞ்சள், பச்சை, நீலம், ஆரஞ்சு, பழுப்பு, கருநீலம், சாம்பல், கருப்பு என பல்வேறு நிறங்களில் உள்ளன. இப்படி பல்வேறு நிறங்களில் வைரம் இருப்பதை ஃபேன்சிஸ் (fancies) என்று அழைக்கின்றனர். அமெரிக்காவின் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அலாஸ்கா கண்டறியப்பட்டுள்ளது.   தகவல் https://www.geologyin.com/2016/03/18-geological-facts-that-might-surprise.html

புவியியல் தகவல்கள்!

படம்
  தெரியுமா? ”பூமியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது” என்றார்  புவி வேதியியலாளரான பால் அசிமோவ். இதன் தோராய வெப்பநிலை 5,537 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது.  பூமியில் மொத்தமாக 40 டெராவாட்ஸ் (terrawatts) வெப்பம் உருவாகிறது. இதன் மையப்பகுதியில் இருந்து கதிரியக்கத் தன்மை காரணமாக வெப்பம் உருவாகிறது என 2011இல் வெளியான ஆய்வு கூறுகிறது. மையப்பகுதியில் ஆன்டிநியூட்ரினோ (antineutrinos)என்ற துகள் காணப்படுகிறது. இதிலிருந்து வெளியாகும் கதிரியக்கமே வெப்பத்திற்கு காரணம் என புவியியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  "பூமியின் உட்புறத்திலிருந்து வரும் வெப்ப ஆற்றலே அதனை உயிரோட்டமாக வைத்துள்ளது என்றார் அமெரிக்க புவியியல் ஆய்வு ஒருங்கிணைப்பாளர் டாம் கிராஃபோர்டு.  தோரியம், யுரேனியம், பொட்டாசியம் " ஆகிய தனிமங்களின் கதிரியக்க தன்மையால் பூமியில் வெப்பம் உருவாகிறது.  உலகமெங்கும் உள்ள பாலைவன தரைகளில் பாசிகள் (mosses) வாழ்கின்றன. இவை தன்னுடைய தனித்துவமாக மூலக்கூறு அமைப்பு காரணமாக காற்றிலிருந்து நீரைப் பெற்று உயிர்வாழ்கின்றன. தனித்துவமான இலைக...

ரத்தினங்கள் - அறிவோம்

படம்
  ரத்தினங்கள் ரத்தினங்களை, சுரங்கங்களிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். துளையிடுவது, வெடிவைப்பது ஆகிய முறையில் பாறைகளை உடைத்து ரத்தினக்கற்களை வெளியே எடுக்கிறார்கள். அரியவகை, குறைந்த தேய்மானம், அழகு ஆகியவற்றைப் பொறுத்து கற்களை பட்டைதீட்டி விலை வைத்து விற்கிறார்கள். சுரங்கத்திலிருந்து எடுத்து சுத்தம் செய்து அதன் வடிவமைப்பை மாற்றுகிறார்கள். பிறகு அதனை பாலீஸ் செய்து தனியாக அல்லது நகையில் பொருத்தி விற்கிறார்கள். வைர சந்தையில் வைரங்களை அகழ்ந்தெடுத்து விற்பதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது.  கி.மு.25 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையிலான காலகட்டம் தொடங்கி ரத்தினங்களை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எகிப்தில் மார்பில் அணியும் தொன்மை ஆபரணம் ஒன்று கண்டறியப்பட்டது. இதில் லாசுலி, கமேலியன், லாபிஸ் போன்ற அரிய கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். இதேபோல மாசடோமியாவில் (தற்போதைய ஈராக்) நெக்லஸ் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதிலும் மேற்சொன்ன அரியவகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதன் காலம் கி.மு.2500 ஆகும்.  தகவல் nature guide rocks and minerals book

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்க...

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இ...

செவ்வாயில் புத்தம் புதிய நகரம்!

படம்
  செவ்வாயில் புத்தம் புதிய நகரம்! செவ்வாயில் மக்களை குடியமர்த்துவதற்கான நகரத்தை அமைக்க சீனா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் முயன்று வருகின்றன.  அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹோம் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2117ஆம் ஆண்டில் அங்கு நகரம் அமைப்பதற்கான திட்டத்தை அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்குப்பிறகு சீனாவின் தியான்வென் 1 என்ற விண்கலம் செவ்வாய்க்கு அங்குள்ள சூழல்களை ஆராய அனுப்பி வைக்கப்பட்டது. மூன்றாவதாக, அமெரிக்க நாசாவின் பெர்சீவரென்ஸ் ரோவர், செவ்வாயிலுள்ள வேதியியல் பொருட்களைப் பற்றி ஆராய அனுப்பி வைக்கப்பட்டது.  உலக நாடுகளிடையே செவ்வாயை ஆராய்ச்சி செய்வதற்கான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் செவ்வாய் சங்கம் என்ற அமைப்பு, செவ்வாயில் நகரத்தை அமைப்பதற்கான திட்டங்களை அனுப்பி வைக்க கோரியது. இதற்காக, உலக நாடுகளிலிருந்து 175 குழுக்கள் நகர வடிவமைப்பு திட்டங்களை அனுப்பி வைத்துள்ளன. இதில் பங்கேற்ற சோனெட் எனும் குழுவின் திட்டத்தைப் பார்ப்போம். .நுவா நகரம் எனும் இத்திட்டப்படி செவ்வாயில் நிலத்திற்...

வயிற்றில் சுடப்பட்டால் வாயில் எப்படி ரத்தம் வரும்? - லாஜிக் மேஜிக் - பதில் சொல்லுங்க ப்ரோ? @ ரோனி

படம்
    பதில் சொல்லுங்க ப்ரோ ? @ ரோனி ஹாலிவுட் படத்தில் நாயகனை எங்கு சுட்டாலும் வாயில் வாந்தி எடுக்கிறாரே எப்படி நடக்கிறது அந்த மேஜிக் ? ஒருவரை வயிற்றில் சுட்டால் நிச்சயம் வாயில் ரத்த வாந்தி எடுக்கமாட்டார் . வயிற்றின் உள்ளே ரத்தக்கசிவு இருக்கும் . அப்படியும் வாயில் குடம் குடமாக ரத்தம் கொட்டுகிறது என்றால் அவரது நுரையீரல் காயம்பட்டிருக்கிறது என்று பொருள் . அங்கு ரத்தம் கசிவதால் மூச்சு , வாய் என அனைத்திலும் பொங்கல் பானையில் நுரை பொங்கி வருவது போல ரத்தம் பொங்குகிறது . அதிலும் மனவலிமை குறையாத நாயகன் , நாலைந்து பக்கங்களுக்கு வசனம் வேறு பேசிவிட்டு சாவார் . வயிற்றில் துப்பாக்கி குண்டு பட்டு வாயில் ரத்தம் வந்தால் அதனை ஹீமாடெமெசிஸ் என்கிறார்கள் . அதுவே நுரையீரல் காயம்பட்டு இருமலோடு ரத்தம் வந்தால் அதற்கு ஹீமோடைசிஸ் என்று பெயர் . நாயகன் மீது இரக்கம் வருவதற்காக , அல்லது வில்லன் மீது உனக்கு இது சரியான தண்டனைடா என நாம் சொல்லும்படி ரத்தத்தை பம்பு செட்டு தண்ணீர் போல மோட்டார் வைத்து இறைக்கிறார்கள் . அதைப்பார்த்து ரசிகர்களுக்கும் புயல்கால...