தனியார்மயமாகும் பொதுத்துறை நிறுவனங்கள்!
தற்போது, இந்திய அரசின் நிர்வாகத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிடம் விற்கப்படலாம் அல்லது மூடப்படலாம் எனும் நிலையிலுள்ளன. மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பின் அறிக்கைப்படி பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கையை 12 ஆக குறைக்கவிருக்கிறது. மொத்தமாக மூன்று அல்லது நான்கு பொது நிறுவனங்களை மட்டுமே அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகிக்கவிருக்கிறது. அரசிடமுள்ள பொது ஆதார நிறுவனங்களாக எரிபொருள் (பெட்ரோல், நிலக்கரி), மின்சாரம், விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, காப்பீடு, வங்கி, கனிமம் ஆகியவற்றைக் கூறலாம். இத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசு தன்னுடைய முதலீட்டை விலக்கிக் கொள்ளவிருக்கிறது. மேலும் இந்நிறுவனங்களை தனியாருக்கு விற்க திட்டமிட்டுள்ளது. இப்படி விற்பதன் மூலம் தனியார் துறையினரின் வழியாக அந்நிய முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கும். பொது நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பதன் மூலம் அரசுக்கு அதிகளவு வருமானம்...