அரசின் இயந்திரத்தில் தேசியவாத இஞ்சின் மட்டுமே இயங்குகிறது!
நேர்காணல்
வளர்ச்சி இல்லாத தேசியவாதம் கேலிக்கூத்தானது
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், மாநிலங்கள்அவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் தன் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக முன் வைக்க கூடியவர். அவரிடம் பேசினோம்.
தற்போதைய பொருளாதார மந்தநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
பாஜக அரசு, தன் பட்ஜெட்டின்போதே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது கார்ப்பரேட் நிறுவன வரிவிதிப்பைக் குறைத்தபின்னும் மக்களின் எதிர்ப்பு குறையவில்லை. இந்த வரி குறைப்பு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்தால்தான் பலன் கொடுக்கும். இதுவும் கூட யூகம்தான். மக்களின் தேவை என்பது இன்று குறைந்துவிட்டது. முதலீடு, ஏற்றுமதி ஆகியவை ஏறத்தாழ தேக்கமடைந்துவிட்டன. அரசின் வாகனத்திலுள்ள ஒரே இயக்கம் கொண்ட இஞ்சின் தேசியவாதம் மட்டுமே. அதுவும் கூட பொருளாதார வளர்ச்சியைக் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் இதற்கு மாற்றான தீர்வாக என்ன வைத்திருக்கிறது?
காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்களுக்கு ஆதரவான பொருளாதார முடிவுகளை எடுத்து வந்தது. அரசிடம் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்து நெறிப்படுத்தினாலே பொருளாதார பிரச்னைகளை தீர்க்க முடியும். இன்றைய பொருளாதார பிரச்னைகளை தீர்க்கவேண்டுமானால், குர்கான் சென்று ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களைப் பாருங்கள். இந்த சீரழிவுக்கு காரணம் இயற்கையோ, கடவுளோ கிடையாது. அரசின் பொருளாதாரக் காரணங்கள்தான்.
காங்கிரஸ் தனியார்மயத்தை ஆதரித்துதானே வந்தது? இப்போது எதற்கு எதிர்க்கிறீர்கள்?
நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தது திட்டமிட்ட செயல் அல்ல. கான்கர் என்ற நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்ட நிறுவனம்தான். வாஜ்பாய் காலத்தில் தனியார் நிறுவனமாக்கப்பட்ட நிறுவனங்களைப் பாருங்கள். ஐபிசிஎல் என்ற பொதுத்துறை நிறுவனத்தை ரிலையன்சிடம் விற்றார்கள். இன்று அந்த நிறுவனம் துறை சார்ந்து போட்டியின்றி முன்னோடியாக வளர்ந்து நிற்கிறது.
தற்போதைய பாஜக அரசு பெட்ரோலியம், ரயில்வேதுறை ஆகியவற்றை விற்க முனைகிறது. இவை நாட்டின் ஆதாரமான அடிப்படை கட்டமைப்புக்குள் இருக்கின்றன. இந்த அரசு விற்பது நிறுவனங்களை அல்ல; இந்தியாவை தனியார் நிறுவனங்களிடம் விற்கிறது. வரி வருவாய் குறைவுக்காக காங்கிரஸ் தனியார்மயத்தை நாடவில்லை. போட்டியும் இல்லை. உற்பத்தியும் தேக்கமாக இருக்கும்போது, அரசின் சொத்தான பொதுச்சொத்துக்களை விற்பது தவறான
முடிவு.
நன்றி - டைம்ஸ்