உலகை மிரட்டிய சீன விளையாட்டுகள் 2019!







மேற்குலகினரின் விளையாட்டுகள் பெரும்பாலும் தனிக்கருவிகள் சார்ந்தவை. அதாவது அவற்றை விளையாட குறைந்த பட்சம் கணினிகள், தனிக்கருவிகள் தேவை. ஆனால் மொபைல் விளையாட்டுகளை சீனா ஊக்குவிக்கிறது. இந்த துறையில் சீன நிறுவனங்களே வெற்றியாளர்களாக உள்ளன. அங்கு 459 மில்லியன் பயனர்களை விளையாட்டுகளை வெறித்தனமாக விளையாண்டு வருகின்றனர்.

CALL OF DUTY MOBILE


பல்வேறு சூழல்கள், அதிநவீன துப்பாக்கிகள், ட்ரோன் விமானங்கள் என படு நவீனமாக விளையாட்டு உள்ளது. மொபைலில் விளையாடுவதற்கு பெரிய மாறுதல்களின்றி உள்ளது. அசத்தலான விளையாட்டை டென்சென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 PUBG MOBILE
பாராசூட்டில் தனித்தீவு போன்ற இடத்திற்கு சென்று இறங்கியவுடன் கொலைத்தாண்டவத்தை தொடங்க வேண்டும். உங்களின் குழுவினருடன் பேசியபடி, எதிரிகளை நெற்றிப்பொட்டில் பட்டென போட்டு நிமிரலாம். மகத்தான வெற்றி பெற்ற விளையாட்டு டென்சென்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. 
ONMYOJI

நெட் ஈசி நிறுவனத்தின் தயாரிப்பு. ஜப்பானி புராணக்கதைகளின்படி விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான பின்புலங்கள், குரல்கள் ஆகியவை பயனர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. அதனால் அதிக பயனர்கள் உலகம் முழுவதும் இதனை விளையாடி வருகின்றனர். கெட்ட பேய்களை நீங்கள் அழித்து சக்திமானாகவேண்டும். அதுதான் டாஸ்க். 

 MOBILE LEGENDS: BANG BANG
பயமே தெரியாத ஐந்துபேர்களாக களமிறங்கி எதிரிகளின் கோட்டையை அடித்து நொறுக்கி பொலபொலவென உப்புமாவாக உதிர்க்க வேண்டும். எதிரணி மட்டும் சொம்பையா? அவர்களும் தாக்குவார்கள். மல்டி பிளேயர் என்பதால், நண்பர்களோடு இணைந்து விளையாடி கலக்குங்கள். இந்த விளையாட்டும் உலகளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. 
ARENA OF VALOR

மேலே சொன்ன விளையாட்டின் டிட்டோதான். ஆனாலும் சுவாரசியமாக உள்ளது. இதனால்தான் இதனை தினசரி விளையாடும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

நன்றி - அபாகஸ்