பாடச்சுமை குறைவு - ராஜஸ்தான் மாணவர்கள் கொண்டாட்டம்!






dog ate my homework GIF



ராஜஸ்தானில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாடநூல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நான்கு நூல்கள் தற்போது ஒரு நூலாக குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் சுமக்கும் பாடச்சுமை பெருமளவு குறைந்துள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலுள்ள 33 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பாடச்சுமைகளை அரசு குறைத்துள்ளது. 1.35 கிலோகிராமிலிருந்து அரை கிலோவாக பாடப்புத்தகங்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை பிகேபிகே என்கிறார்கள். பஸ்தே கா போச் காம் என்று இதனை விரிவாக சொல்லலாம்.

தற்போது இத்திட்டத்தை ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை அமல் செய்திருக்கிறோம். அடுத்த ஆண்டில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகச்சுமையை குறைக்கவிருக்கிறோம் என்கிறார் ராஜஸ்தான் கல்வி அதிகாரி பிரதீப் குமார் போரர். கல்வி அமைச்சர் குரு கோவிந்த் டோசந்த்ரா, இதனை கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தினார்.


சுமை குறைந்த பாடப்புத்தகங்கள் மற்றும் விளையாட்டு சார்ந்த புத்தகங்களின் பாடங்கள் உருவாக்கம் ஆகியவற்றை பிரதீப் குமார் கனவு கண்ட உருவாக்கியிருக்கிறார். இதில் சில குறைகள் இருந்தாலும் குழந்தைகளின் பாடம் கற்கும் திறனை இவை ஊக்குவிக்கும் என்கிறார். இது தொடர்பாக எடுத்த ஆய்வில் 91 சதவீத ஆசிரியர்கள் இத்திட்டத்தை மாநிலம் முழுக்க செயற்படுத்தலாம் என்று கூறினர்.

நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ்