தகவல் பாதுகாப்பு அம்ச மசோதா அம்சங்கள்!







Image result for data protection bill 2019

தகவல் பாதுகாப்பு மசோதா அண்மையில் அமலானது. அதில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் இதோ....

இந்தியாவில் சேமியுங்கள்

இந்தியர்களைப் பற்றி சேகரிக்கப்படும் நிதி, ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் வைக்கப்பட வேண்டும். பிற விஷயங்களை நிறுவனங்கள் த த்தமது நாடுகளிலுள்ள சர்வர்களில் பராமரிக்க தடையேதும் இல்லை.


கட்டற்ற அரசு அதிகாரம்

அரசு எந்த விதிவிலக்கின்றி அனைத்து குடிமக்களின் தகவல்களை பெற அதிகாரம் கொண்டது. அதனால், ஏறத்தாழ சீனா போல கண்காணிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும். மேலும் தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவற்றை அரசு கேட்டால் நிறுவனங்கள் அதனை தரவேண்டியது கட்டாயமாகிறது.


அனுமதி அவசியம்.

மக்களின் தகவல்களை தங்களிடம் வைத்திருக்க நிறுவனங்களுக்கு காலக்கெடு உண்டு. பிற நிறுவனங்களுக்கு பகிர உரிமையானவர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது.

அழிக்கும் உரிமை

மக்களின் தகவல்களை பயன்படுத்திவிட்டு அதனை சேமிக்க அவசியமில்லை. அதனை அழித்துவிட மக்கள் கோரலாம். இந்த உரிமை இச்சட்டத்தின் மூலம் அமலுக்கு வருகிறது.


சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுமதி

பயனர்களின் தகவல்களை சோதிக்கும் அதிகாரம் ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களுக்கு உண்டு. இதனை அரசுடன் இணைந்து இந்த நிறுவனங்கள் செய்யக்கூடும்.


கண்டுபிடிப்பு

அரசு இச்சட்டம் மூலம் சான்ட்பாக்ஸ் எனும் கண்டுபிடிப்பு உருவாகிறது. இம்முறையில் பல்வேறு செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் உருவாக்கப்பட வாய்ப்பு உள்ளது.

நன்றி - எகனாமிக் டைம்ஸ்