இருண்டு போன இந்தியா - இணையத்தை முடக்கும் சர்வாதிகாரம்!
உலகம் முழுக்கவே இணையம் சார்ந்த தாக தொழில்கள் மாறி வருகின்றன. இந்த நேரத்தில் மின்சாரமும், இணையமும் தடைபட்டால் மொத்த நாடுமே ஸ்தம்பித்து விடும். இந்த கவனம் யாருக்கு இருக்க வேண்டும்? அரசுக்குத்தானே, ஆனால் அரசு தன் பொருளாதார, நிர்வாக முடிவுகளில் உள்ள சிக்கல்களை மக்களிடம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, இந்திய அரசு இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இணைய சேவையை தடை செய்துள்ளது. காஷ்மீரில் செயல்படுத்தி வெற்றி கண்ட முறையை உள்துறை அமைச்சகம், தற்போது எந்த பிரச்னை ஏற்பட்டாலும் அமல் செய்து வருகிறது.
இதன்விளைவாக இணையம் சார்ந்த அனைத்து தொழில்களும் பலத்த அடி வாங்கி வருகின்றன. குறிப்பாக ஊபர், ஓலா ஆகிய ஆப் சார்ந்த தொழில்கள் நிலைமை என்னாகும்? காஷ்மீரில் உலக நாடுகளிலேயே 137 நாட்கள் இணையத்தை இந்திய அரசு முடக்கியுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக டில்லி, மேற்கு வங்கம், அசாம் போன்ற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத்தடுக்க இந்த மாநிலங்களில் இணையத்தை முடக்கும் முடிவை உள்துறை அமைச்சகம் செயல்படுத்தியுள்ளது. இதனால் எல்லாம் போராட்டம் நிற்பதாக இல்லை.
குஜ்ஜார் போராட்டம் தொடங்கி இந்திய அரசு இணையத்தை முடக்கி உலகளவில் கருப்பு புள்ளியை தன்மேல் சுமந்து வருகிறது. பின்லாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இணையத்தை மக்கள் பயன்படுத்துவதை சட்டப்பூர்வ அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கின்றனர். ஆனால் இந்திய அரசு சர்வாதிகாரமாக பொருளாதார எஞ்சினாக உள்ள இணையத்தை தடை செய்து வருகிறது.
உலகம் முழுக்க இணையத்தில் வழியாக 8 டிரில்லியன் டாலர்கள் வணிகம் நடைபெற்று வருகிறது. மூன்றில் இருபங்கு தொழில்கள் இணையத்தை ஆதாரமாக கொண்டிருக்கின்றன. காஷ்மீரில் பாஜக அரசு இணையத்தை முடக்கியதால், 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை இழந்த பல நூறு இளைஞர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தற்போது நாஜி கட்சியினர் போல பாஜக அரசு இந்துத்துவ த த்துவத்தை நிறைவேற்ற கொண்டு வந்துள்ள சட்டங்களால் 22 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டை பிளவுபடுத்தும் லட்சியம், மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ் - குர்பிர் சிங்