மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை
3 விஷம் = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் முன்னர், நோயாளிகளிடம் நிறைய பேசவேண்டும். சிலர் தங்களின் செயல்பாடுகளைக் கூறுவார்கள். சிலர் கூற மாட்டார்கள்.ஒருவரின் செயல்பாடுகள், குணங்கள் தெரிந்தால் ஓமியோபதியில் மருந்துகளைக் கொடுப்பது எளிது. தொடக்கத்தில் மருத்துவ அட்டவணை உதவியது. இன்று கணினியில் மென்பொருட்களை பயன்படுத்தி மருந்துகளை வழங்குகிறார்கள். நவீன காலத்தில் மருந்துகள் கூடிவிட்டன. ஓமியோபதியை பயிலும் மாணவர்களும், அதை பயிற்சி செய்பவர்களும் கூட தொடர்ச்சியாக பயின்றுகொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுதான் நோயாளிகளுக்கு நல்லதும் கூட. அரசு மருத்துவமனைகளுக்கு வட இந்தியா, தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளத்தில் அரசு கூட்டுறவு ஓமியோபதி நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை தமிழ்நாடு அரசின் டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வருகிறது. ஓமியோபதி மருந்துகள் எந்தளவு தூய்மையாக உள்ளனவோ, அந்தளவு வீரியம் அதிகமாக இருக்கும். தனியார் மருந்துகடைகளில் ஓமியோபதி ...