அலுமினிய பாயில் இனிப்பு மூலம் வயிற்றுக்குள் போனால்?


Boy, Eating, Chocolate, Muffin, Smiling, Dirty, Brown

மிஸ்டர் ரோனி

நான் சாக்லெட்டை ஆர்வமாக சாப்பிடும்போது, அதிலுள்ள அலுமினிய பாயிலையையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டேன். இது நச்சாக மாறி ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

வெறித்தனத்தை குறைத்து நிதானம் வளர்ப்பது நல்லது. விளம்பரங்களைப் பார்த்து அதே வேகத்தில் சாப்பிட்டால் எப்படி? அலுமினிய பாயில் உள்ள நச்சு வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்தோடு வினைபுரியும். இதில் இரு சதவீத அலுமினிய குளோரைடு நச்சு, வயிற்றில் பாதிப்பு ஏற்படுத்தும். அதை தவிர்க்க முடியாது. ஆனால் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதும் கிடையாது. பயப்படாதீர்கள். உடலில் செரிக்காத சாக்லெட்டின் பகுதிகள் மலம் வழியாக வெளியேறிவிடும்.

நன்றி: பிபிசி