வேலை இழப்பால தவிக்கும் காஷ்மீர்!





விடுதி மேலாளர் குலாம் ஜிலானி



ஆகஸ்ட், 5, 2019 அன்று இந்திய அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. சட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த 135 நாட்கள் இணையம் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தம் பயணத்தை ரத்து செய்தனர்.

மாநிலம் முழுவதம் ராணுவம் சூழ்ந்து நிற்க, திறந்தவெளி சிறைச்சாலை போன்ற சூழலை அரசு வலிந்து உருவாக்கியது. இதன் விளைவாக அங்கு 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் இழக்கப்பட உள்ளன. தற்போது நீதிமன்ற தலையீட்டால 2ஜி இணைப்புகள் மட்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இணையதளங்கள் முழுக்க செயல்படத்தொடங்கவில்லை. குறிப்பிட்ட அரசு ஏற்ற பட்டியலில் உள்ள வலைத்தளங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

தால் ஏரி அருகில் உள்ள விடுதியில் குலாம் ஜீலானி என்பவர் மேலாளராக உள்ளார். இங்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட தினத்தில் இருந்து அங்கு புக் செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தம் இடங்களை ரத்து செய்துவிட்டனர். தற்போது மூன்று பேர் மட்டுமே அறை எடுத்து உள்ளனர். அதற்கு முன்பு 88 பேர் இங்கு தங்கியிருந்தனர்.


2018ஆம் ஆண்டு காஷ்மீருக்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகம். 2019இல் இந்த எண்ணிக்கையில் 43ஆயிரம் பேர் என சரிவு ஏற்பட்டது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசு நடவடிக்கைகளால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்றாலும் சுற்றுலாத்துறை முழுக்க இணையம் சார்ந்து இயங்குபவை  என்பதை அவர் மறந்துவிட்டார். போராட்டம், ராணுவத்தின் முற்றுகை என்ற சூழலில் சுற்றுலா பயணிகள் எப்படி இங்கு வருவார்கள்?

சுற்றுலாத்துறை காஷ்மீரில் 7 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கு உதவி வந்தது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில்தான் சுற்றுலா பயணிகள் வரும் சீசன். அதிலும் ஊரைச்சுற்றி ராணுவம் நிற்கிற சூழலில் சுற்றுலா சீசனிலும் ஆட்களைக் காணோம். இதனால் தால் ஏரி படகு சவாரிக்காரர் முதல் தங்கும் விடுதிக்கார ர்கள் வரை பதறுகிறார்கள். அரசு தன்னுடைய மாநிலமாக நினைத்து காஷ்மீரை நடத்தாதவரை அங்கு நிலைமை மாறப்போவதில்லை.

நன்றி - இந்தியா ஸ்பெண்ட்