பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!



Image result for nrc cartoon
reddit



என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள்.

ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்பு சான்றிதழ்களைக் கேட்கிறார்கள். எப்படி சாத்தியமோ?

மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இதற்காக காசு கொடுத்து எப்படியேனும் தயாரித்து கொள்வதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போதுதான் முனிசிபாலிடி அலுவலகத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழை பதிவு செய்து அளிக்குமாறு கேட்டு வருகிறார்கள்.

பதினெட்டு வயதாகாதவர்களுக்கு எங்கு பிறந்தோம் என்று இருக்கும் ஆதாரம் மட்டுமே குடியுரிமைக்கு உதவும். இதில் கூடுதலாக பள்ளியில் படித்த ஆவணங்களைக் கூட பயன்படுத்தலாம். அதிலும் பள்ளி செல்லவில்லையென்றால் இன்னும் கஷ்டம். பிறப்புச்சான்றிதழ் மட்டுமே அதுவும் போகிக்கு எரிக்காமல் வைத்திருந்தால் கிடைக்கும்.


இந்தியாவில் பல்வேறு குழந்தைகள் ஐந்து வயதைக் கடக்கும் முன்னரே இறந்துவிடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் பெற்றோர் இறந்துவிட்டார்கள் என பதிவு செய்வதில்லை. ஆனால் என்ஆர்சியில் இவை எல்லாமே குழப்பமாக இருக்கும். குழந்தையின் பிறப்பையும், இறப்பையும் 21 நாட்களுக்குள் பதிவு செய்வதை 1969ஆம் ஆண்டு சட்டம் கட்டாயமாக்குகிறது. ஆனால் மக்கள் அதனை முறையே 84, 79 சதவீதம் மட்டுமே செய்கிறார்கள். இங்கு நாங்கள் சொல்லியிருப்பது 2017ஆம் ஆண்டு தகவல் அறிக்கை.

குழந்தைகளை முறையாக பதிவு செய்யாத நாடுகளின் பட்டியலில் இந்தியா, காங்கோ,நைஜீரியா, எத்தியோப்பியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. இங்குதான் 16.6 கோடி குழந்தைகளின் பிறப்பு முறைப்படி பதிவு செய்யப்படுவதில்லை என்று யுனிசெஃப் கூறுகிறது.

பெரும்பாலான குழந்தைகள் ஐந்து வயதைத் தாண்டினால்தானே அதன் பெயரை பதிவேட்டில் பதிவு செய்யமுடியும். ஊட்டச்சத்து பற்றாக்குறை, நோயால் அவர்கள் இறந்துவிடுவதால் மக்கள் அவற்றை பதிவு செய்வதில்லை. மேலும் மக்கள்தொகை பதிவேட்டில் குழந்தைகள் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் குடியுரிமைக்கு தகுதியானவர்கள். இல்லையெனில் கடினம்தான் என்கிறார் ஐஎஸ்ஐ மையத்தைச் சேர்ந்த கபூர்.

இந்தியாவில் வறுமைக்குட்பட்ட சூழலில் 23 சதவீத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு முறையான பிறப்பு சான்றிதழ்கள் கிடையாது. இதில் ஐந்தில் இரண்டு தாய்களுக்கு மட்டுமே குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம் என்று தெரிகிறது என்ற அவலத்தையும் கண்டறிந்துள்ளனர்.

பெரும்பாலும் உள்ளூர் என்பதால், 21 நாட்களில் யாரும் குழந்தை  பிறப்பை பதிவு செய்வதில்லை. தேவைப்பட்டால் பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் மக்கள்தொகை அறிவியல் மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரசேகர் .


நன்றி - இந்தியாஸ்பென்ட்








பிரபலமான இடுகைகள்