இடுகைகள்

கபீர்சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிப்பதும் உதைப்பதும் காதல்தான்! - பெண்கள் என்ன சொல்கிறார்கள்?

படம்
அர்ஜூன் ரெட்டி, இளைஞர்களுக்கான படம். அதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆனால் தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காக நாயகன் செய்யும் செயல்கள் கடும் மூர்க்கம் நிரம்பியவையாக இருக்கும். செக்ஸ், முத்தம் என தீப்பற்றும் ஆண் மேலாதிக்கம் அதில் இருக்கும். இந்திக்கு சென்ற அதே படம் கபீர் சிங்காக அதில் நடித்த சாகித் கபூருக்கு மறு வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. ஆனால் அதேசமயம் பெண்களை இப்படி காட்டலாமா என்ற கேள்வியையும் படம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான விமர்சனத்திற்கு பதிலாக இயக்குநர் சந்தீப் வாங்கா, தான் காதலிப்பவளை ஒருவன் அறைவதற்கு கூட வாய்ப்பில்லாத சூழல் காதல் கிடையாது கூறினார். அதோடு, இப்படத்தின் மீது விமர்சனம் வைப்பவர்களுக்கு காதல் குறித்த எந்த அனுபவமும் இல்லை என்று காட்டமாக கூறினார். அப்படியா என்று சிலரைக் கேட்டோம். ஸாரியா பட்னி (33) ஸாரியா பதினெட்டு வயதில் இருந்தார். அப்போது பள்ளியில் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீராங்கனை. அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பையன் ஒருவர் ஸாரியாவை நோட்டமிடத் தொடங்கினார். எனக்கும் அந்த வயதில் பெரிதாக யோசிக்கத் தோன்றவில்லை. அவன் அழகாக இருந்தான். ஒரு கட்டத்தில் பெற்றோர