இடுகைகள்

கட்டடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலாவதியான சோலார் செல்களைப் பயன்படுத்தி உருவான கட்டடம்!

படம்
  சோலார் பேனல் கட்டடம்!  சோலார் பேனல்களைப் பயன்படுத்திய பிறகு என்ன செய்வதென பலருக்கும் குழப்பம் ஏற்படலாம். அதற்காகவே பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் செயல்படும் சூழல் தொழில்நுட்ப மையம், தீர்வொன்றை கண்டுபிடித்துள்ளது. அறிவியல் கழகத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் நெலமங்கலா எனும் இடத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அறிவியல் கழகத்தின் சூழல் மையத்தினர், கட்டடத்தைக் கட்ட பயன்பாடற்ற சோலார் பேனல்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.  ”நாங்கள் இக்கட்டடத்தை உருவாக்க 60 சதவீதம் போட்டோவால்டைக் செல்களைப் (PV) பயன்படுத்தியுள்ளோம்” என்றார்  சூழல் மையத்தின் உதவி பேராசிரியரான மான்டோ மணி.  2018ஆம் ஆண்டு, வெப்பம் சார்ந்த சில சோதனைகளைச் செய்ய சூழல் மையக் குழுவினர் விரும்பினர். இதற்கென தனி கட்டடம் தேவைப்பட்டது. ஆனால், அறிவியல் கழகத்திடம் நிதியில்லா சூழல். இந்நிலையில், பயன்பாடற்ற சோலார் பேனல்களையும், சிமெண்டையும்  பயன்படுத்தி கட்டடம் கட்ட திட்டமிட்டார் உதவி பேராசிரியர் மணி. இப்படி கட்டப்படும் கட்டடம் சோலார் பேனல்கள் பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்ய உதவுகிறது. பயன்பாடற்ற நிலையிலும்  பேனல்கள்  10-20 வாட் வர

தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ் மர்மம்!

படம்
தனியாக நிற்கும் அவுட்ஹவுஸ்! மிச்சிகனிலுள்ள செடார் ஏரி அருகே, அவுட் ஹவுஸ் ஒன்று உள்ளது. இது எதற்கு கட்டப்பட்டுள்ளது என்றால் பலரும்  பல கதைகளைப் பேசுவார்கள். இதனைக் கட்டியவர் பெயர் வில்லியம் நெல்சன். இவர் தன்னுடைய மனைவி மற்றும் ஏழு மகள்களிடமிருந்து சிறிது தனிமை விரும்பி இதனை அமைத்தார். இரண்டு அடுக்குகளைக் கொண்ட இந்த ஓய்வறையில் கழிவறை வசதிகள் உண்டு. பெரும்பாலும் ஏரியைச் சுற்றிப்பார்க்க வரும் பயணிகளே இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். 1875 ஆம் ஆண்டு உருவான இந்த அவுட்ஹவுஸ் சிலமுறை தீ விபத்துகளைச் சந்தித்து மீண்டிருக்கிறது. நன்றி: அட்லஸ் அப்ஸ்குரா