இடுகைகள்

எச்சில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - மனித உடல்

படம்
  படம் - ஜாக்சன் டேவிட் தெரிஞ்சுக்கோ – மனித உடல் மனித உடலிலுள்ள எலும்புகள் அதிகமுள்ள இரண்டு பகுதி கைகளும், கால்களும் ஆகும். கால்களில் 26, கைகளில் 27 எலும்புகள் உள்ளன. உடலிலுள்ள ரத்த நாளங்களை   விரித்தால் ஒரு லட்சம் கி.மீ. தூரம் வரும். தாடையிலுள்ள தசையான மசெட்டர், உடலில் மிக வலிமையான தசையாகும். இதன் கடிக்கும் வேகம் 91 கி.கிக்கும் அதிகம். ஒருநாளைக்கு, 1.5 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கிறது. இரண்டு நுரையீரல்களிலும் 300 மில்லியன் காற்றுப் புரைகள் உள்ளன. இந்த காற்று புரைகளுக்கு அல்வெயோலி என்று பெயர்.   மனிதர்களின் மூக்கால் இருபதாயிரம் வாசனைகளை வேறுபடுத்தி அறியலாம். கண்களிலுள்ள ரெட்டினாவில் 130 ஒளி உணர்வு செல்கள் உள்ளன. இதனால்தான் மனிதர்களால் வண்ணங்களை எளிதாக காண முடிகிறது. மனிதர்கள் தங்களது வாழ்நாளில் கண்களை தோராயமாக 415 மில்லியன் முறை சிமிட்டுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாக்கிலுள்ள பழைய சுவைமொட்டுகள் நீக்கப்பட்டு, புதியவை வளருகின்றன. குழந்தைகளுக்கு நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின எண்ணிக்கை பத்தாயிரம், ஆனால் பெரியவர்களுக்கு ஆறாயிரம் மட்டுமே உள்ளது.

வாசனையையும் சுவையையும் அறியும் சுவாரசிய சோதனை!

படம்
  உணர்வுகளோடு விளையாடு! தேவையான பொருட்கள் வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை,மாதுளை, கண்களைக் கட்டும் துணி, நண்பர் ஒருவர் செய்யவேண்டியது 1. மேற்குறிப்பிட்ட பழங்களில் இரண்டை(வாழைப்பழம், ஆப்பிள்) எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றை முகர்ந்து பார்க்கவேண்டும். இன்னொரு உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இச்செயலை செய்யும்போது உங்கள்  கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். நண்பர் தான் உணவுப்பொருட்களை எடுத்துக் கொடுப்பார். தொடங்கலாமா? 2. உங்கள் நண்பரை அழைத்து கண்களை இறுக கட்டச்சொல்லிவிடுங்கள். அடுத்து அவர் ஒரு உணவுப்பொருளை (வாழைப்பழம்) உங்களுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அதேசமயம், இன்னொரு உணவுப்பொருளை (ஆப்பிள்) மூக்கில் அருகில் நீங்கள் அதனை வாசனையை அறியும்படி பிடிக்கவேண்டும். 3. மூக்கால் உணரும் வாசனை, உண்ணும்போது உங்களுக்கு தெரிய வரும் உணவுப்பொருளின் சுவை இரண்டையும் நீங்கள் கூறவேண்டும். இச்சோதனைகளை உணவுப்பொருட்களை மாற்றி செய்யலாம்.  கற்பது இதைத்தான்! பொதுவாக ஒருவருக்கு மூக்கால் முகரும் திறன் இல்லாதபோது பசி உணர்வு தூண்டப்படாது.  தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வாசனைகளை உணரும் திறனை இழப்பதற்கு அனோஸ்மியா (Anosmia)

உண்மையா? உடான்ஸா - எச்சில் இல்லாதபோது உணவின் சுவை அறிய முடியுமா?

படம்
  எச்சில் இல்லாதபோது மனிதர்களால் உணவின் சுவையை உணர முடியாது! உண்மை. உணவில் உள்ள பொருட்கள் முதலில் எச்சிலில் கரைந்தால்தான் நாவின் சுவை மொட்டுகளை அணுக முடியும். இதற்குப் பிறகுதான், அறுசுவை உணவாக இருந்தாலும் சாப்பிடலாம் என்ற உணர்வு தோன்றும். எச்சில்,  செரிமானத்திற்கு மட்டுமல்ல சுவை உணரவும் உதவுகிறது என்பதே முக்கியமான அறிவியல் உண்மை.  விண்வெளிக்கு செல்பவர்களின் உயரம் அதிகரிக்கும்! வினோதமாக இருந்தாலும் உண்மை. அங்குள்ள குறைந்த ஈர்ப்புவிசை மனிதர்களின் முதுகெலும்பில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆறு அடி உள்ளவர், விண்வெளிக்கு சென்று சில மாதங்கள் கழித்தால் 2 அங்குலம் உயரம் கூடியிருப்பார். இது நிரந்தரமானது அல்ல. பூமிக்கு திரும்பி சில மாதங்களுக்குப் பிறகு, உடல் முன்பிருந்த உயரத்தை அடையும் என சயின்டிஃபிக் அமெரிக்கன் வலைத்தளம் தகவல் கூறுகிறது.   மூளையின் அளவைப் பொறுத்து கொட்டாவியின் அளவு மாறும்!  உண்மையல்ல. சில ஆராய்ச்சிகள் மூளை, அதன் நியூரான்களின் எண்ணிக்கை பொறுத்து மாறும் என கூறுகின்றனர். ஆனால் உண்மையில் மூளையைக் குளிர்விக்கவே கொட்டாவி வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் 2016ஆம் ஆண்டு கண்டறிந்தனர்.

வாக்கிங் செல்லும்போது வாயில் எச்சில் சுரப்பது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனி ஓடும்போது அதிக எச்சில் சுரப்பது ஏன்? குளிர்ந்த சூழலில் ரீபோக் ஷூ மாட்டிக்கொண்டு ஓடினால் உங்களுக்கு வாயில் எச்சில் அதிகம் சுரக்கும். ஆனால் அதுவே வெயில் நேரத்தில் மாராத்தான் ஓடினால் எச்சில் சுரக்காது. மூக்கு வழியாக மூச்சு விடாமல் வாய் வழியாக மூச்சு விட்டால் எச்சில் சுரப்பு அதிகரிக்கும். உடல் தன் தேவைக்கான நீரை பெற தாமதம் ஆனால் எச்சில் சுரப்புக்கு நீரை செலவழிப்பதை நிறுத்திவிடும், ஏனெனில் உடலின் பிற உறுப்புகளுக்கு நீர் வேண்டுமே? உடற்பயிற்சிகள் தீவிரமாகச்செய்யும்போது எம்யுசி5பி (MUC5B ) புரதம் சுரக்கிறது. இது இயல்பாகவே உடலின் எச்சில் சுரப்பை அதிகரிக்கிறது. மேலும் எச்சிலின் அடர்த்தியை அதிகரிக்கப்பதும் இதுதான். நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

தலைமுடியால் நமக்கு அலர்ஜி ஏற்படுமா?

படம்
மிஸ்டர் ரோனி நமது தலைமுடி நமக்கு அலர்ஜி ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா? அலர்ஜி என்பது விலங்குகளின் அல்லது நமது தலைமுடியால் ஏற்படும் வாய்ப்பு இல்லை. காரணம், அவற்றில் கெராட்டின் என்ற புரதம் மட்டுமே இருக்கிறது. ஆய்வுப்படி இதில் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தப் பொருட்களும் கிடையாது. ஆனால், விலங்குகளின் எச்சில், தோல் செல்கள் நமக்கு அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு ள்ளது. விலங்குகளின் முடி நமது உடலுக்குள் சென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம். அதுவும் பெரியளவு பாதிப்பு இருக்காது. நன்றி - சயின்ஸ் ஃபோகஸ்

தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தண்ணீரின் சுவை எப்படியிருக்கும்? தூய நீர் என்பது உங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை மலரவைக்காது. அதற்காக அதில் எந்த சுவையும் இல்லை என நினைத்து விடாதீர்கள். உங்கள் எச்சிலிலுள்ள வேதிப்பொருட்கள் நீருடன் வினைபுரிந்தால் டாடா குளுக்கோ ப்ளஸ் லெவலுக்கு இல்லையென்றால் சற்றே இனிப்பது போல தோன்றும். நன்றி: பிபிசி

ரோபோக்களின் தயாரிப்பில் சிலந்தி!

படம்
பிபிசி சிலந்தியின் வலை உண்மையில் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. காரணம், அதன் பிரமாண்ட வடிவம். இதோடு ஆஸ்திரேலியாவில் பல கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்படும் வலை கூட சிலந்தியின் கைவண்ணம்தான்.  தற்போது சிலந்தி வலைகளை ரோபோக்களின் உடலில் தசைகளாக பயன்படுத்த முடியுமா என யோசித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் சிறந்த பயனை அளிக்கலாம். பேராசிரியர் மார்க்கஸ் ப்யூலெர் இதுகுறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளார். இவர் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி. சிலந்தி தன் எச்சிலை காற்றின் மூலம் நூலாக்கி பிரமாண்ட வலையை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சியில் இவர் ஈடுபட்டிருந்தார்.  காற்றில் 70 சதவீத ஈரப்பதம் இருக்கும்போது சிலந்தி மிக எளிதாக வலை பின்னுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். இச்சூழலில் 300 டிகிரி கோணத்தில் வலையை சிலந்தி எச்சிலை இழைத்து முறுக்கி பின்னுகிறது. இதற்கு காரணம், வலையை மிகவும் வலிமையாக்குவதுதான்.  இதனால் வலை மிக மெல்லிய அதிர்வையும் மையத்திலுள்ள சிலந்திக்கு எளிதாக கடத்துகிறது. இதனால் வலையில் சிக்கும் எறும்புகள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. வலைய