இடுகைகள்

சுத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காது! - அன்புள்ள அப்பாவுக்கு...!

படம்
pexals 2 அன்புள்ள அப்பாவுக்கு, அன்பரசு எழுதுவது.  நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு தொண்டைவலி என்று அம்மா பேசும்போது சொன்னார். சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துங்கள். சரியாகிவிடும். இங்கு அலுவலக சூழல் பரவாயில்லை. உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்பதுதான் இறைவனிடம் என் வேண்டுதல். கொரியர் அனுப்புவதில் நான் செய்த பிசகு, நீங்கள் இருமுறை அலைவது போல ஆகிவிட்டது. சான்றிதழ்களை வங்கிக்கு கொடுத்தால்தான் சம்பளக் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் எனக்கு ஏற்பட்ட பதற்றம்தான் இப்பிரச்னைக்கு காரணம்.  சென்னையில் சமாளித்து வாழ்வதற்கான சம்பளத்தை இந்நிறுவனத்தில் நான் பெறவில்லை. தடுமாற்றம்தான். அதிலும் ஒரு மகிழ்ச்சி, நீங்கள் அனுப்பி தந்த 5 ஆயிரம் ரூபாய்தான். எனக்கு பெரும் உதவியாக இருந்தது. மதியம் தேடிப்பிடித்து வெரைட்டி ரைஸ் சாப்பிடுகிறேன். சுத்தம் என்பதை மறந்துவிட்டால் மட்டுமே இங்கு சாப்பிட முடியும். இரவு வீடு திரும்ப 8.30க்கு மேல் ஆகிறது. எதையும் கவனமாக படிக்க முடியவில்லை. சனியன்றும் அலுவலகம் உண்டு. அன்று அரைநாள் வேலை. தலித் முரசு பத்திரிகையில் எனக்கு வரவேண்டிய

மலம் கழிப்பவர்களைக் கொன்றால் மாற்றம் வந்துவிடாது! - பெசவாடா வில்சன்!

படம்
நேர்காணல் பெசவாடா வில்சன் பிரதமர் சுத்தம் தொடர்பான கோல்கீப்பர் ஆப் குளோபல் கோல்ஸ் விருது வென்றிருக்கிறார். அதைப்பற்றிச் சொல்லுங்கள்.  விருது பற்றி சொல்ல ஏதுமில்லை. திறந்தவெளியில் மலம் கழிப்பது மிகப்பெரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அது தவறு என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.  2011 சென்சஸ் படி  1.8 மில்லியன் பேர் வீடற்று தெருக்களில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு அரசு வாழ்வதற்கான என்ன வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. திறந்தவெளி கழிவறை என்று நாட்டு மக்களை அடித்துக்கொல்லலாம். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? தண்ணீர் மற்றும் சுகாதாரத்துறைக்கான செயலர் பரமேஸ்வரன் ஐயர், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கழிவறை மூலம் நூறு சதவீத சுத்தம் என்கிறாரே? அவர் கூறும் கழிவறைகளை அத்திட்டத்தின்படி அமைப்பதில்லை. மேலும் அவர் டெல்லியிலுள்ள பாதாள சாக்கடையில் இறங்கிப் பார்க்கட்டும். அந்த இடம் எப்படி இருக்கிறது என்று அப்போதுதான் தெரியும். வெளிப்புறத்தில் மலம் கழிப்பவர்களை எச்சரித்தார்கள், விசிலடித்து பயம் கொள்ளச் செய்தார்கள் என்ற வேகத்தில் இன்று கொலையும் செய்கிறார்கள். இத்திட்டத்தின்

நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு

படம்
நம்பிக்கை மனிதர்கள் டாக்டர் வினோத் டாரே கழிவறை சுத்தம் ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர்  கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து  கான்பூர்  ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ” என்கிறார் டாக்டர் வினோத் டாரே. 2 தண்ணீர் காந்தி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி. கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்

கடலை சுத்தமாக்கி டைவர்கள்!

படம்
அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் கடலில் அறுநூறுக்கும் மேற்பட்ட டைவர்கள் குதித்து அதனை சுத்தமாக்கி கின்னஸ் சாதனை செய்துள்ளனர். இதற்கு முன்பு 614 பேர் கடலில் இதுபோல சுத்தம் செய்து சாதனை செய்துள்ளனர். தற்போது 633 பேர் செய்ததால் கின்னஸ் சாதனையாக இடம்பெற்றுள்ளது. சுத்தம் செய்யும் இப்பணி ஆண்டுதோறும் டிக்சி டைவர்ஸ் எனும் அமைப்பினரால் நடத்தப்படுகிறது. இவர்களுடன் டீர்ஃபீல்டு பீச் உமன் கிளப் ஆகியோரும் இணைந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து டைவர்களை அழைத்து இந்த விழாவை நடத்துகின்றனர். இவர்களின் உழைப்பால் 1,626 பௌண்டுகள் குப்பை நீக்கப்பட்டுள்ளது. இவற்றை மீன்பிடி பகுதியலிருந்து இந்த டைவர்கள் அகற்றியுள்ளது முக்கியமானது. இது மிகச்சிறப்பான நேரம் .. அனைவரும் ஒன்றாக கூடி குப்பைகளை அகற்றி கடலுக்கு நன்மை செய்தோம் என்கிறார் டைவரும் ஒருங்கிணைப்பாளருமான டைலர் பர்கைன். நன்றி: இகோ வாட்ச்