இடுகைகள்

ஆனந்தவிகடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

படம்
  கோபத்தின் பிரயோஜனம் ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது. ‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார். ‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன். ‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார். சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை ச

தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

படம்
  பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்   பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன் சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது? எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது. உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது? சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு. இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்? ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.   ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்? நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களும