இடுகைகள்

நகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நகைகளை வடிவமைக்க கற்கும் ஆர்வம் இருந்தால் போதுமானது! - நிஃப்ட் வழங்கும் படிப்புகள்

படம்
  படிப்பு வேண்டாம் - ஆர்வம் இருந்தால் போதும் நகைகளை எளிதாக வடிவமைக்கலாம்! சென்னையிலுள்ள கண்ணகி நகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பலரும் நகை வடிவமைப்பு சார்ந்த பாடங்களை கற்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு சென்னையில் இயங்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனமே காரணம். இந்த நிறுவனம், தற்போது நகை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை இணையம் வழியாக படிப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளது. இதனால், பள்ளிப்படிப்பை படிக்காதவர்கள், எட்டாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள், டீக்கடை, பெட்ரோல் பங்க் என பிழைப்புக்கான வேலைகளை செய்து வருபவர்கள் கூட நகை வடிவமைப்பு பற்றிய படிப்பில் இணைகிறார்கள். படித்து முடித்து நகைகளை தாங்களே வடிவமைத்து வேலையையும் பெற்று வருகின்றனர். கற்களை பதிப்பது, வெல்டிங், மெழுகு மாதிரியில் நகைகளை தயாரிப்பது ஆகிய விஷயங்களில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அரசு, திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை ஊக்குவித்து பத்து லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.எனவே, குறைந்த கல்வித்தகுதி இருந்தாலும் கூட கற்றலின் தீப்பொறி உள்ளவர்களுக்கு நகை வடிவமைப்பு த

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து   அவளையும் த

ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ், இளம்பெண்ணிடம் சிக்கிக்கொள்ள, அதை எடுக்க முயலும் திருடன் - வேட்டம்

படம்
  வேட்டம் -மலையாளம் இயக்கம் பிரியதர்ஷன் வேட்டம் - திலீப், பாவ்னா பானி வேட்டம் மலையாளம் திலீப், பாவ்னா பானி, ஜெகதி, இன்னொசன்ட், ஹனீபா, கலாபவன் மணி கோபாலகிருஷ்ணன் விமானத்தில் பயணிக்கிறார். கூடவே ஒரு பொம்மை ஒன்றை கையில் வைத்திருக்கிறார். அதில் ஸ்பெயின் நாட்டு ராணியின் நெக்லஸ் உள்ளது. அழகான கற்கள் பதித்த மாலை. அது அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டு இந்தியாவிற்குள் வந்துவிட்டது. அதை இந்தியாவில் உள்ள காவல்துறையினரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். கோபு, நெக்லஸை வீணா என்ற பெண்ணின் பேக்கில் வைத்துவிடுகிறார். தேவையான நேரத்தில் அதை எடுக்க முடியாமல் அந்த பெண்ணுடன் சேர்ந்து ரயிலில் பயணிக்கிறார். அந்த அனுபவங்களில் அவர்களுக்குள் காதல் வர, என்னவானது அந்த காதல், வீணா சென்றுகொண்டிருக்கும் வேலை சரியாக முடிந்ததா என்பதே மீதிக்கதை படத்தில் பாவ்னா ரவி அழகாக இருக்கிறார். இந்திப் பெண்ணை மலையாளப் பெண்ணாக காட்ட முயன்றிருகிறார்கள். எனவே, பாவாடை தாவணி அணிந்தே நிறைய காட்சிகளில் வருகிறார். ஒரு பாடலில் மட்டும் தனக்கு சிறப்பாக நடனமாடத் தெரியும் என நிரூபித்துக் காட்டுகிறார். வீணா, மலையாள பிராமணக் குடும்பத்து

தங்க கண்களைக் கொண்டு காணாமல் போன தாத்தாவின் வரலாற்றைத் தேடும் பேரன் - கோல்டன் ஐஸ் - சீன டிவி தொடர்

படம்
  கோல்டன் ஐஸ் சீன டிவி தொடர் புனைவு, வரலாறு ராக்குட்டன் விக்கி 56 எபிசோடுகள் பெய்ஜிங் நகரில் உள்ள தொன்மை பொருட்கள் அடகுக் கடையில் ஜூவாங் ருய் வேலை செய்து வருகிறான்.  பெற்றோர்கள் இல்லை. சைக்கிளில் செல்வது, சமூக வலைத்தளத்தில் நண்பர்களுடன் சென்ற பார்ட்டிகளை பதிவிடுவது என அவனது வாழ்க்கையே அவ்வளவுதான். ஒருநாள் அவனது நண்பன் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டு வீட்டுக்குப் போகாமல்  அடகுக்கடைக்கு ஏதோ பொருளை எடுப்பதற்காக வருகிறான். அந்த நேரத்தில் அவசரமாக வந்ததாலும் மது போதையிலும் கதை மூடாமல் உள்ளே வந்துவிடுகிறான். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு திருடர்கள் கூட்டம் ஒன்று உள்ளே புகுகிறது. அவர்கள் அங்கு ஒரு தொன்மையான பொருளை திருட வந்திருக்கிறார்கள். ஆனால் ஹூவாய் ருய் செய்த முட்டாள்தனமான காரியத்தால் பல்வேறு பொருட்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு நொறுங்குகின்றன. அதில் தொன்மைப் பொருளின் சிறுபகுதி அவனின் கண்ணில் காயத்தை ஏற்படுத்துகிறது. பிறகு, காவல்துறை அந்த வழக்கை விசாரிக்கிறது. வழக்கை விசாரிக்கும் பெண் அதிகாரி ஃபெய்பெய் ஹூவாங் ருய்தான் திருட்டு கும்பலுக்கு உதவி செய்தானோ என்ற ரீதியில் விசாரிக்கிறார். இந்த

தோற்றுப்போவதற்கு பயப்படாதீர்கள்! - ஹேம்லதா முகேஷ் சாங்வி, வர்த்தமான் ஜூவல்லர்ஸ்

படம்
  ஹேம்லதா முகேஷ் சாங்வி துணை நிர்வாகத்தலைவர் - வர்த்தமான் குழும நிறுவனங்கள் படித்தது மென்பொருள் பொறியியல் படிப்பு. ஆனால் செயல்படுவது, தொழிலதிபராக தொழில்துறையில் என்பதுதான் லதாவின் வாழ்க்கை. மும்பையில் செயல்படும் வர்த்தமான் குழுமத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு என லதாவைக் கூறலாம். வர்த்தமான்  நிறுவனத்தின் முக்கிய வணிகம், நகைகள்தான்.  2016ஆம் ஆண்டு வர்த்தமான் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அதனை தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிறுவனமாக வளர்ச்சி பெறச் செய்தார். வர்த்தமான் நிறுவனம், நிலம், வண்டி, வாகனங்கள், ஓவியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றிலும் முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவின் நம்பிக்கையான நூறு நிறுவனங்களைக் கணக்கெடுத்தால் வர்த்தமான் நிறுவனமும் அதில் ஒன்று என்று கூறலாம்.  ஹேம்லதாவிடம் பேசினோம்.  நீங்கள் வணிகத்திற்குள் எப்படி நுழைந்தீர்கள்? 2006ஆம் ஆண்டு எனது மாமனார் மறைவிற்குப் பிறகு எனது கணவர் வர்த்தமான் குழுமத்தின் தலைவராக ஆனார். நான் வணிகத்திற்குள் வர நினைக்கவில்லை. ஆனால் எனது கணவர் நகை தொடர்பான வணிகத்தை கவனித்துக்கொள்ள வலியுறுத்தினார். சந்தையை நன்கு ஆய்வு செய்து

நகைகளை குறிவைத்து திருடும் ஓநாய்க்கூட்டத்தைப் பிடிக்கும் ஸகூபிடூ குழு! - பிக் டாப் ஸ்கூபிடூ அனிமேஷன்

படம்
              பிக் டாப் ஸ்கூபி டூ அனிமேஷன் ஹன்னா பார்பரா , வார்னர் பிரதர்ஸ் நகரில் ஓநாய் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச்செல்கிறது . இதனை யார் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை . அப்போது அங்கு வெல்மாவின் துப்பறியும் குழு வருகிறது . எப்படி மர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை . சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து சேரும் குழுவினர் , அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது அங்குதான் ஓநாய் பல்வேறு நகைக்கடைகளை உடைத்து நகைகளை அள்ளிச்சென்று வருவதைக் கண்டுபிடிக்கின்றனர் . இப்படி நகைகளை திருடுவதும் குறிப்பிட்ட பேட்டர்னில் நடைபெறுகிறது . இப்படி நடைபெறும் திருட்டுகளை காவல்துறை பிடிக்கமுடியாமல் திணறுகிறது . இந்த வகையில் இன்னும் ஒரு நகை மட்டுமே திருட வேண்டியிருக்கிறது . வெல்மா , பிரெட் , டெப்னி , சேகி , ஸ்கூபி ஆகியோர் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர் . இதனால் அவர்களே அங்கு சர்க்கஸை நடத்தவேண்டியதாகிறது . ஆளுக்கொரு வேலையை ஏற்றுக்கொள்கின்றனர் . இதில் வெல்மா தவிர பிறர் அனைவருமே சோபித்து ப

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத

வட்டி கட்டி தன் சொந்த நிலத்தை மீட்க திருட்டை தொழிலாக கொள்ளும் நல்லவன் மாதவன்! - தொங்கோடு - ரவிதேஜா

படம்
              தொங்கோடு சிறுவயதில் தனது தோழிக்காக காத்தாடியை திருடும் சிறுவன் , வளர்ந்தபிறகு எப்படியாகிறான் என்பதுதான் கதை .    கிராமத்தில் நடைபெறும் கதையில் மாதவன் தனது தோழிக்காக முதலில் திருட்டில் ஈடுபட்டு வீட்டுக்கு வரும்போது வீடு வட்டிக்கடைக்கார ரால் சூறையாடப்பட்டுள்ளது . அந்த வட்டிக்கார ர் வேறு யாருமல்ல . அவனது பெண்தோழியின் அப்பாதான் . இந்த சோகத்தில் மாதவனின் தந்தை இறந்துவிடுகிறார் . தங்கையுடன் வீடில்லாமல் இருக்கும் மாதவன் மெல்ல கிராமத்தில் சோற்றுக்காக திருடத் தொடங்குகிறான் . அதுவே அவனது தொழிலாக மாற முன்னாள் திருடர் சிறப்பாக பயிற்சி கொடுக்கிறார் . ஆனாலும் மாதவனிடம் இருக்கு்ம் நேர்மை , தான் கட்டவேண்டிய வட்டியை சரியாகத்தான் வட்டிக்காரருக்கு கட்டுகிறார் . அவரது தந்தை வட்டிக்காரரால் இறந்துபோனாலும் கூட அவர் மேல் துவேஷம் கொள்வதில்லை .    ஆதரவற்ற சிறுவர்களை முடிந்தவரை படிக்க வைக்க பணம் கொடுத்து உதவுகிறான் . இதனால் ஊரிலுள்ளவர்கள் மாதவனை பெரிதாக நினைத்து பயப்படுவதில்லை . பணக்காரர்கள் மட்டுமே பயப்படுகிறார்கள் . இந்த நேரத்தில் நகரத்தில் படித்து வந்த பெண்தோழி வளர்ந்