நகைகளை குறிவைத்து திருடும் ஓநாய்க்கூட்டத்தைப் பிடிக்கும் ஸகூபிடூ குழு! - பிக் டாப் ஸ்கூபிடூ அனிமேஷன்

 

 

 

 

Big Top Scooby-Doo! | Movie fanart | fanart.tv

 

 

 

பிக் டாப்


ஸ்கூபி டூ


அனிமேஷன்


ஹன்னா பார்பரா, வார்னர் பிரதர்ஸ்



நகரில் ஓநாய் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச்செல்கிறது. இதனை யார் செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அப்போது அங்கு வெல்மாவின் துப்பறியும் குழு வருகிறது. எப்படி மர்மங்களை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் அனிமேஷன் படத்தின் கதை.


சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து சேரும் குழுவினர், அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கும்போது அங்குதான் ஓநாய் பல்வேறு நகைக்கடைகளை உடைத்து நகைகளை அள்ளிச்சென்று வருவதைக் கண்டுபிடிக்கின்றனர். இப்படி நகைகளை திருடுவதும் குறிப்பிட்ட பேட்டர்னில் நடைபெறுகிறது. இப்படி நடைபெறும் திருட்டுகளை காவல்துறை பிடிக்கமுடியாமல் திணறுகிறது. இந்த வகையில் இன்னும் ஒரு நகை மட்டுமே திருட வேண்டியிருக்கிறது.


வெல்மா, பிரெட், டெப்னி, சேகி, ஸ்கூபி ஆகியோர் சர்க்கஸ் கம்பெனிக்கு வந்து உண்மையைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். இதனால் அவர்களே அங்கு சர்க்கஸை நடத்தவேண்டியதாகிறது. ஆளுக்கொரு வேலையை ஏற்றுக்கொள்கின்றனர். இதில் வெல்மா தவிர பிறர் அனைவருமே சோபித்து பாராட்டுகளை பெறுகின்றனர். குறிப்பாக ஸ்கூபி செய்யும் அனைத்து திறமைகளுக்கும் சேகி கைத்தட்டல்களைப் பெற்று சர்க்கஸ் சூப்பர் ஸ்டார் ஆகிறார். இதற்கு ஒருவகையில் அங்கு வந்து இவர்களை கொல்ல முயலும் ஒநாய்களும் காரணமாகிறது. பார்வையாளர்கள் அது ஓநாய் என்பதைப் புரிந்துகொள்ளாமல் அதையும் சர்க்கஸின் ஒரு பகுதியாக பார்ப்பது அவல நகைச்சுவையாக மாறுகிறது.


மனிதர்களின் உட்டாலக்கடி விஷயங்கள்தான் இதிலும் முக்கியமானது. எப்படி மனிதர்களின் பேராசை பிறரது சொத்துக்களை அபகரிக்கும்படி மாறுகிறது என்பதே முக்கியமான மையம். இதில் ஓநாய்களை யாரென்று கண்டுபிடித்தபிறகும் கதை முடியாமல் மற்றொரு ட்விஸ்டிற்கு செல்வது சுவாரசியமாக உள்ளது. ஓநாய்களை யார் பயன்படுத்துவது என்பதை எளிதாக கண்டுபிடிக்கும்படி கதை இருப்பது பலவீனம். ஏனெனில் சர்க்கஸில் உள்ள அனைத்து ஆட்களும் விழாவில் பங்கேற்கும்போது ஒரே ஒருவர் மட்டும் வராமல் இருந்தால் எளிதாக அவரை கணித்துவிடலாமே?


ஓநாயுடன் சர்க்கஸ்


கோமாளிமேடை டீம் 

 

Director:Ben Jones
Produced by:Spike Brandt, Tony Cervone, Alan Burnett (co-producer)
Writer(s):Doug Langdale


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்