நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் -19 சிகிச்சை செய்வது கடினம்!

 

 

 

 

 

 

 

COVID-19 can cause diabetes, need more data: Prof. Nikhil ...

 

 

 

நிகில் தாண்டன்


பேராசிரியர், எய்ம்ஸ்


கோவிட் -19 பாதிப்பு ்நீரிழிவை பாதிப்பை உருவாக்குகிறதா?


ஒருவருக்கு கோவிட் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும்போது அவருக்கு ஹெச்பிஏ1சி என்ற சோதனையை செய்யவேண்டும். இதன் மூலம் ஒருவரின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடலாம். பாதிப்பு ஏற்பட்ட மூன்று மாதத்தில் அவரின் குளுக்கோஸ் அளவு உயர்ந்திருந்தால் அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம்.


முதலில் ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்து அவருக்கு குளுக்கோஸ் அளவு உயர்ந்தால் உடனே அவருக்கு வழங்கப்படும் ஸ்டீராய்டு சிகிச்சைகளை நிறுத்தவேண்டும். குளுக்கோஸ் அளவுகள் இயல்பான நிலையில் இருந்தால் அவருக்கு ஸ்டீராய்டு சிகிச்சையை தொடரலாம். ஆனால் சர்க்கரை அளவு கூடியிருந்தால் அதே நேரம் ஸ்டீரா்ய்டு சிகிச்சை காரணமாக நீரிழிவு பாதிப்பு கூடவும் வாய்ப்புண்டு.


உறுதியாக இதனை கூறலாமா?


நீரிழிவு என்பது அறிகுறிகள் இல்லாமல் பலருக்கும் ஏற்படும் நோய். எனவே அவர்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமலேயே இருப்பார்கள். இந்தியாவில் 50 சதவீத மக்களுக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாமல் வாழ்கிறார்கள். இவர்களுக்கு சோதனை செய்வதற்கான சூழலும் அமைவதில்லை.


சர்க்கரை வியாதி உள்ளவர்களை கோவிட் தாக்கும்போது அவர்களுக்கு ஹைப்பர் கிளைசெமியா பாதிப்பு ஏற்படும். இதைக்கட்டுப்படுத்த ஸ்டீராய்டுகள் மருத்துவரின் வழிகாட்டுதலில் வழங்கப்படுகின்றன. கோவிட் 19 பாதிப்பு, நீரிழிவை ஏற்படுத்துகிறதா என்பதை முழுமையாக இன்னும் அறியவில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால், அவர்களின் உடலிலுள்ள ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது கடினம். இன்சுலின் வேறுபாட்டைக் கணக்கில் கொண்டுதான் இப்பிரிவினருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.


நீரிழிவு உள்ளவர்களுக்கு கோவிட் சிகிச்சையளிப்பது கடினமாகவே இருக்கும் அல்லவா?


நீரிழிவு வந்தவர்களுக்கும், வராதவர்களுக்கு சரி கோவிட் சிகிச்சை என்பது ஒன்றுபோலவேதான் இருக்கும். இவையன்றி இதயநோய், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிக்கலானது.


வைரஸ் தொற்று எப்படி ரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகரிக்கிறது?


உடலில் ஏற்படும் பல்வேறு வகையான தொற்றும் ரத்தத்தில் சர்க்கரையை ஏற்படுத்தும். நோய்த்தொற்றை எதிர்த்து ்உடல் போராடும் போராட்டத்தின் ஒருபகுதிதான் இது. சிலசமயம் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளின் காரணமாக ர த்த சர்க்கரை அளவு கூடும். சைடோகின் ஸ்டோர்ம் பாதிப்பு ஏற்படும்போது கணையத்திலுள்ள இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும். இதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மாறுபடும்


தி இந்து ஆங்கிலம்


பிந்து சாஜன் பெரப்பாடன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்