சிங்கப்பூரை முதலீட்டாளர்கள் தேடி ஓடுவது ஏன்?

 

 

 

 

Singapore, City, Urban, Skyscrapers, Buildings, Sunset

 

சிங்கப்பூரை தேடி ஓடும் பணக்காரர்கள்!


கிரேஸி ரிச் ஆசியன்ஸ் படம் வந்ததில் இருந்து பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய ஆசை வேர்விடத்தொடங்கிவிட்டது. ஏற்கெனவே சிங்கப்பூர் வேலைகளுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் புகழ்பெற்றது. இப்போது உலகிலுள்ள பல்வேறு பணக்காரர்களும் கூட தங்களது கடைகளையும், வீடுகளையும் சிங்கப்பூரில் உருவாக்கிக்கொள்ள பரபரக்கிறார்ளள். அதற்கேற்ப நிலத்தையும் வாங்கிப்போட்டு வருகிறார்கள்.


பிற நாடுகளை விட சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் எளிதாக சென்று செட்டிலாக முடியும். அங்கு அதற்கான உலகளவிலான முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர். அந்த நாட்டில் 13.8 கோடி ரூபாய் வரையில் யார் முதலீடு செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு பாஸ்ட் டிராக் முறையில் குடியிருப்பதற்கான உரிமைகளை வழங்கி வருகிறது. குறிப்பிட்டளவு சொத்துகள் அதாவது ஆயிரம் கோடிக்கும் மேல் இருந்தாலும் அரசின் சலுகைகள் உங்களுக்கு மழையாக பொழியும்.


ஹாங்காங், இப்போது சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றிய நாடா, தனி நாடா என்று தவித்துக்கொண்டிருக்கிறது. எனவே இந்த நேரத்தில் அங்கு சென்று முதலீடுகளை செய்யவும், வாழவும் பலரும் தயங்கி வருகிறார்கள் நான் இங்கு கூறுவது, முதலீட்டாளர்களை. எனவே அவர்கள் நிம்மதியாக வாழவும், தொழில் முதலீடுகளை பாதுகாக்கவும் சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தும் வருகின்றனர். ஆசியாவில் உள்ள முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்பான முதலீடுகளுக்கு சிங்கப்பூரையே தேர்ந்தெடுத்து வருகின்றனர்.


சீனர்கள், மலேசியர்கள், இந்தோனேஷியர்கள் அடிக்கடி சிங்கப்பூர் செல்வதும் அங்கு சென்று பொழுதுபோக்கு சமாச்சாரங்களில் ஈடுபடுவதும் வழக்கம். ஆனால் பெருந்தொற்று காரணமாக பலரும் வீட்டுக்குள் முடங்கும்படி ஆகி்விட்டது. இந்த நிலையிலும் கூட சிங்கப்பூரில் நோய்த்தொற்றை தடுக்கும் நடவடிக்கை சிறப்பாக உள்ளது. அதாவது அண்டை நாடுகளாக மலேசியா, இந்தோனேஷியாவை விட நோய்த்தொற்றை சிறப்பாக தடுத்து மக்களை காத்து வருகின்றனர். இப்படி பாதுகாப்பு, பணத்திற்கு பாதுகாப்பு என்ற காரணத்திற்காகவும் முதலீட்டாளர்கள் சி்ங்கப்பூருக்கு சென்று விடலாம் என முடிவெடுத்து முதலீடுகளை குவித்து வருகின்றனர்.

toi



கருத்துகள்