நடிப்பு, ஓவியம், பாடல், இசைப்பாடல்கள், நடனம் ஆகியவற்றில் சாதித்த கிளாசிக் பெண்கள்
திரைப்பட நடிகை
மர்லின் டயட்ரிச்
ஜெர்மனி அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர், நடிகராக புகழ்பெற்றவர் மர்லின் டயட்ரிச். இவர் 1930ஆம் ஆண்டு தி ப்ளூ ஏஞ்சல் என்ற படத்தில் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கினார். இதன்பிறகு ஆங்கிலத் திரைபடங்களில் நடித்தவர், பாடல், நடிப்புக்கென உலகமெங்கும் உள்ள தியேட்டர்களுக்கு பயணித்து வெற்றி கண்டார்.
உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்கு வந்து குடியேற பல்வேறு உதவிகளைச் செய்தார்.
மர்லின் மன்றோ
திரைப்பட நடிகை
1926ஆம் ஆண்டு பிறந்தவரின் இயற்பெயர் நார்மா ஜீன் மார்டென்சன். இவர் காப்பகத்தில் வளர்ந்தவர். 1950களுக்குப் பிறகு படங்களில் நடித்து புகழ்பெற்றார். தனது நடிப்பிற்காக கோல்டன் குளோப் விருது வென்றார். தனது 36 வயதில் திடீரென இறந்துபோனாலும் சினிமா வரலாற்றில் இவரளவுக்கு கவர்ச்சியான பெண் என்று யாரையும் குறிப்பிட முடியாது. 1944ஆம் ஆண்டு சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மன்றோ ஆயுத தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
ஜோசபின் பேக்கர்
பாடகர், நடிகர்
1906ஆம் ஆண்டு செயின்ட் லூயிசில் பிறந்தவருக்கு, கருப்பு முத்து என்ற பெயருண்டு. தனது இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். வாடெவில்லே என்ற குழுவில் சேர்ந்த பாடவும், நடனமாடவும், நகைச்சுவையாக நடிக்கவும் கற்றார். 1921இல் சஃபில் அலாங் என்ற இசைநாடகம் ஜோசபினுக்கு புகழ்பெற்று தந்தது.'
சம்பாதித்த பணத்தில் தனது நாயின் காலரை வைரக்கற்களில் அலங்கரித்த தைரியம் கொண்டவர். இதனால் சாலையில் நாயை கூட்டிச்செல்லும்போது பலரும் நாயின் டாலடிக்கும் கழுத்துப்பட்டையையே பார்ப்பது வழக்கம். 1891ஆம் ஆண்டு நியூயார்க்கில் கேக்வாக் என்ற பெயரில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கான நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. டேப் டான்ஸி்ற்கு புகழ்பெற்றவர் பில் போஜாங்கில் ராபின்சன். இவர் ஏராளமான வாடெவில்லே குழுவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்றார். அன்றிருந்த பல்வேறு படங்களில் இவரே முக்கியமான நடிகர்.
எடித் பியாஃப்
புகழ்பெற்ற பாடகர்
சர்க்கஸில் சாகசம் செய்பவருக்கு மகளாக பிறந்தவர் எடித் பியாப். தனது இளம் பருவத்திலேயே பாடும் திறனை அடையாளம் கண்டு பாடத் தொடங்கினார். பாரிசிலுள்ள கஃபேக்களில் சான்சன் எனும் பழைய நினைவுகளை பாடல்களாக எழுதி பாடுவது இவரின் ஸ்பெஷல்.
பிரான்சில் இப்படி ஏராளமான பாடல்களை பாடி புகழ்பெற்றவர் பிறகு உலகம் முழுவதும் முக்கியமான பாடகராக அறியப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரில் காயமுற்ற ராணுவ வீர ர்களை சந்தித்து பேசிய பிரபலங்களில் எடித் பியாஃபும் முக்கியமானவர்.
பிரான்சை ஜெர்மன் ஆக்கிரமித்தபோது, அங்கு அடைக்கப்பட்ட கைதிகளுக்காக இசை விழா ஒன்றை நடத்தினார். இப்படி நடத்தும்போது பல்வேறு போலியான அடையாளங்களை உருவாக்கி 300 கைதிகள் அங்கிருந்து தப்பிக்கச் செய்தார்.
தான் வாழும் காலத்தில் அதிக சம்பளம் வாங்கிய, செல்வாக்கு பெற்ற மக்களால் மதிக்கப்பட்ட பாடகி எடித் பியாஃப்
ஃப்ரீதா காலோ
ஓவியர்
சர்லியச வகை ஓவியங்களில் இவரது பாணி வினோதமானதும் கற்பனைத் தன்மையும் கொண்டது.
ப்ரீதா காலோ தனது ஆறு வயதில் போலியோ தாக்குதலுக்கு ஆளானார். பிறகு இளம் வயதில் பேருந்து ஒன்றில் விபத்துக்குள்ளானார். பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் எப்போதும் உடலில் வலி இருந்துகொண்டு இருந்தது. இதனால் தான் கற்ற ஓவியத்தை பயன்படுத்தி தனது உணர்வுகளை தனது படங்களை வரைந்து உலகிற்கு காட்ட முயன்றார்.
மெக்சிகோவின் நேஷ்னல் பிரிபேரட்டரி பள்ளியில் படித்த ஒரே பள்ளி மாணவி ப்ரீதாதான். இவர் அங்குதான் தனது படங்களை வரையத்தொடங்கினார். மெக்சிகோவில் புரட்சி பரவத் தொடங்கியபோது, அங்குள்ள மெக்சிகோ கம்யூனிச கட்சியில் இணைந்தார். 1929இல் சுவரில் முரல் வகை ஓவியங்களை வரையும் கலைஞர் டியாகோ ரிவேராவை திருமணம் செய்தார். ப்ரீதா தனது அரசியல் கொள்கையை இவரிடம் பகிர்ந்துகொண்டதில் இருமனங்களும் ஒன்றாக இணைந்தன.
போர்ட்ரைட் ஓவியங்கள் தொன்மை எகிப்தில் தொடங்கின. அப்போதே பல்வேறு அரசர்களின் படங்கள் போர்ட்ரைட்டாக உருவாக்கப்படத் தொடங்கின. கண்ணாடிகள் பரவலாகத் தொடங்கிய காலத்தில் லியனார்டோ டாவின்சி போன்றோர் தங்களது போர்ட்ரைட்டுகளை வரையத் தொடங்கினர்.
ஜோனி மிட்செல்
musician
கனடாவில் தொலைதூர நகரமொன்றில் 1943ஆம் ஆண்டு பிறந்தார். இசை, ஓவியங்களை தனது வாழ்நாள் முழுவதும் விரும்பியவர். கிடாரை இசைக்க கற்றவர், பாடல்களை எழுத தொடங்கினார்.
1968ஆம் ஆண்டு தனது முதல் ஆல்பத்தை எழுதி வெளியிட்டார். போத் சைட்ஸ் நவ், பிக் யெல்லோ டாக்சி ஆகிய ஆல்பங்கள் இவரை புகழ்பெற்ற பாடகராக மாற்றின.
தனது நாட்டுப்புற இசை வடிவத்திற்காக 1969இல் கிராமி விருதை வென்றார். 1970ஆம் ஆண்டு பாப், ஜாஸ் என பல்வேறு வடிவங்களில் பரிசோதனை முயற்சிகளை செய்தார். ஓவியம் வரைவதில் பேரார்வம் கொண்டவர் என்பதால் தனது பாடல்களுக்கான ஆல்பக் கவர்களை இவரே வடிவமைப்பார்.
தனது பாடல்களுக்காக எட்டு கிராமி விருதுகளை வென்றுள்ளார். மொத்தம் 19 ஆல்பங்களை வெளியிட்டார்.
100 வுமன் ஹூ மேட் ஹிஸ்டரி நூலிலிருந்து…..
victor kamesi
கருத்துகள்
கருத்துரையிடுக