முப்பது ஆண்டுகளாக தேடிய வெற்றி ஒரு படத்தில் கிடைத்தது அதிர்ச்சியாக இருந்தது! - நீனா குப்தா - இந்தி நடிகை
நீனா குப்தா
இந்தி நடிகை
நீனா குப்தாவை சினிமா உலகில் தன்னம்பிக்கை நிறைந்தவராக, புரட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இவையெல்லாம் தாண்டி அவரைப் பற்றிய வேறு விஷயங்களை அறிய சச் கஹூன் தோ எனும் பெயரில் தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். அவரிடம் பேசினோம்.
உங்கள் சுயசரிதையை நீங்கள் எழுதுவதற்கு காரணம் என்ன? பெருந்தொற்று காலம் இதற்கான நேரத்தையு்ம ஊக்கத்தையும் கொடுத்ததா?
நான் இந்த நூலை எழுத இருபது ஆண்டுகள் காத்திருந்தேன். நிறைய முறை எழுத நினைத்து நிறுத்திவிட்டேன். கடந்த ஆண்டு முக்தேஸ்வரிலுள்ள எனது வீட்டுக்கு சென்றேன். நான் எதையும் அப்போதைய சூழ்நிலையில் எதையும் பெற நினைக்கவில்லை. படப்பிடிப்பிற்காக வேறு எங்கும் செல்லமுடியாத நிலை. ஆறு அல்லது ஏழு மாதங்கள் நான் இங்கு சிக்கிக்கொள்ளவில்லை என்றால் இந்த நூல் வெளியே வந்திருக்காது.
இந்த நூலில் இயக்குநர் உங்கள் உடலைப் பற்றிக் கூறியது. பத்திரிக்கையாளர் மசாபாவின் பிறந்தநாள் சான்றிதழை திருடியது., படத்தயாரிப்பாளர் உங்களோடு இரவை ஹோட்டலில் கழிக்க திட்டமிட்டது ஆகியவற்றை பற்றி நூலில் எழுதியுள்ளீர்கள். ஏன்?
நான் நூலில் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மை என்றாலும் உண்மையான பெயர்களை அதில் குறிப்பிடவில்லை. அவை கசப்பான சம்பவங்களாக அமைந்தது உண்மைதான் என்றாலும் அதற்கு அவர்களை நான் தவறு கூற விரும்பவில்லை. இரண்டாவது சட்டரீதியான காரணங்கள். நான் இதனை வழக்குரைஞர்களை கலந்துபேசித்தான் எழுதினேன். நான் இவற்றை நினைத்து வெட்கப்படுகிறேன். அதேசமயம் நான் எழுதியவை அனைத்துமே உண்மை. இப்படி எழுதியது குறைவு என்றாலும் எழுதாமல் விட்டவை அதிகம். இதனை மக்கள் எனது பக்கமிருக்கும் உண்மை என்று கூட நினைத்துக்கொள்ளலாம்.
தொண்ணூறுகளில் தனியொரு அம்மாவாக குழந்தையை வளர்ப்பது கடினமாகவே இருந்திருக்கும் அல்லவா? மசபாவின் தொடக்க காலத்தில் அவருடன் இல்லை என்று வருத்தப்பட்டிருக்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது. அதேசமயம் அவளை பார்த்துக்கொள்ள நீங்கள் வேலை செய்து ஆக வேண்டும் என்றால் அக்குழந்தையை பார்த்துக்கொள்ள அதிக நேரம் உங்களுக்கு கிடைக்காது. இன்று வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளை க்ரீச்சஸ்களில் விட்டுவிடுகி்ன்றனர். பிறகு வேலைக்கு சென்று வந்துவிட்டு சமைத்துவிட்டு குழ்ந்தைகளுக்கான வீட்டுப்பாடங்களில் உதவுகின்றனர். இது உண்மையில் கடினமான வாழ்க்கைதான்.
தனியொருவராக குழந்தையை வளர்ப்பது கடினமாக இருந்ததா? இப்போது நிலைமை மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?
எதுவும் இங்கே மாறவில்லை. இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆண்கள் தங்கள் குழந்தைகளை தாங்களே பார்த்துக்கொள்வதில்லை. அவர்கள் எளிதாக திருமணம் செய்துகொள்கிறார்கள். தேவ் ஆனந்த பத்திரிகையில் எழுதிய கட்டுரையை படித்திருக்கிறேன். அதில் அவர் பிரபலமான நடிகராக இருந்தால் மக்களை ஏற்றுக்கொண்டு நம்மைப் பற்றி அறிய நினைக்கும் அவர்கள் கொடுக்கும் தொந்தரவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? டயானாவுக்கு நடந்த விஷயங்களை மறக்க முடியுமா? எனது நடிப்பிற்கு மக்கள் கொடுக்கும் விமர்சனங்களை பாராட்டுக்களை ஏற்கிறேன். அதேபோல பிற கடினமான விஷயங்களையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சான்ஸ், பால் சின் ஆகிய தொடர்களை இயக்கியவர். ஆனால் பின்னாளில் வெளியான தொடர்களில் சிறு பாத்திரங்களில் நடிக்கும்படி சூழல் அமைந்தது உங்களை வருத்தியதா?
இல்லை. நான் நடித்தவை அனைத்துமே எனக்கு மனநிறைவை கொடுத்தவைதான். சோன் பரி, சான்ஸ், பால் சின், சிஸ்கி ஆகியவை வெற்றி பெற்ற தொடர்கள். நான் என்னுடைய நேரம் மீண்டும் வரும் என்று நினைத்தேன். அப்போது கிடைத்த சிறு பாத்திரங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பது உ்ணமை. அப்போது ஒரு நண்பர், உனக்கு வழங்கப்படும் பாத்திரம் சரியில்லை என்று தோன்றினால் நீயே ஏன் உனக்கான பாத்திரத்தை உருவாக்கிக்கொள்ள கூடாது? என்று கேட்டார். நான் சான்ஸ் 2 தொடருக்கான பைலட் தொடரை உருவாக்கினேன். ஆனால் அதனை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. ஆனால் ஒருநாள் அதனை ஏற்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன். சாஸ் பாகு தொடரில் உண்மையான மனிதர்களை காண்பிக்க நினைத்தேன். ஆனால் மக்கள் உ்ண்மையான விஷயங்களை நெருக்கமாக பார்க்க விரும்பவில்லை.
பதாய் ஹோ படம் உங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதுவும் உங்களின் அறுபது வயதில். இது வயதான நடிகர்களுக்கான முக்கியமான திருப்புமுனை என நினைக்கிறீர்களா?
அந்த திரைப்படத்தின் வெற்றி எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்று கூட கூறலாம். நான் இப்படியொரு வெற்றியை கடந்த முப்பது ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தேன். பதாய் ஹோ திரைப்படம் எனக்கு மட்டுமல்லாமல் வயதான நடிகர்களுக்கும் உதவும் என்று நினைக்கிறேன். வயதான நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இப்போது எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஓடிடி தளங்கள் வந்துள்ள நிலையில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா
சோனம் ஜோஸி
கருத்துகள்
கருத்துரையிடுக