பிராங்கென்ஸ்டைன் பரம்பரை வாரிசாக மாறும் வெல்மா! - ஸ்கூபி டூ எதிர்கொள்ளும் புதிய சவால்

 

 

 

 

Scooby-Doo! Frankencreepy (2014) | Vidimovie

 

 

 

ஸ்கூபி டூ


பிராங்கன் க்ரீப்பி


அனிமேஷன் படம்


ஹன்னா பார்பரா, வார்னர் பிரதர்ஸ்


Scooby-Doo! Frankencreepy (2014) - Review | Mana Pop

வெல்மாவின் சொந்தங்களை தேடி மிஸ்டரி மெஷின் குழு செல்கிறது. அங்கு வெல்மாவுக்கு சொந்தமான மூதாதையரின் நிலம், சொத்துக்கள் உள்ளன. அதனை அவளுக்கு சொத்துரிமைப்படி வழங்குவதாக வழக்குரைஞர் ஒருவர் கூறுகிறார். அப்புறம் என்ன? ஆகா சொத்து என அங்கு கிளம்பி செல்லும் குழு, அங்கு நடக்கும் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து மீள்கிறார்கள். உண்மையில் வெல்மாவுக்கு சொத்து கிடைத்ததா, பிராங்கன்ஸ்டைன் வம்சாவளி வாரிசு வெல்மாதானா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதா என்பதுதான் இறுதிக்காட்சி.



இந்த தொடரில் மிஸ்டரி மெஷின் குழுவினரால் பித்தலாட்டங்கள் வெளிப்பட்ட அனைத்து எதிரிகளும் அவர்களுக்கு எதிராக கைகோக்கிறார்கள். குழுவிலுள்ளவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களின் உளவியலை அடித்து நொறுக்கி டி 20 ஆட முழு குழுவுமே பீதிக்குள்ளாகிறது. இதில் முதலில் கண்விழிப்பது ஃபிரெட் மற்றும் வெல்மாதான். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களைச் சுற்றி நடக்கும் சதிவலைகளை அறுக்கிறார்கள்.


பிராங்கன்ஸ்டெயின் என்ற ஆராய்ச்சியாளர் பிணங்களை சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்து ஆராய்ச்சி செய்து அதில் உயிரை செலுத்துவார். ஆனால் அந்த விலங்கு கட்டுப்பாட்டை இழந்து மக்களை வேட்டையாடத் தொடங்கும் கதைதான் அடிப்படை. அந்த வம்சாவளி வாரிசு வெல்மா, தனது மூதாதையரின் கோட்டைக்கு செல்லும்போதே ஏகப்பட்ட குழப்பம் நடக்கிறது. அவர்களை கொல்ல மிஸ்டரி மெஷினை வெடிக்க வைக்கிறார்கள். இதனால் ஃபிரெட்டின் மனநிலை குலைந்துபோகிறது. அடுத்து ரயிலில் ஏறி செல்லும்போது அதனை விபத்துக்குள்ளாக வைக்கிறார்கள். சென்று இறங்கும் இடத்திலும் வெல்மாவுக்கு எதிரான மக்கள் திரண்டு அவர்களை நகருக்குள் வர வேண்டாம் என்று சொல்லி தடுக்கிறார்கள். அதையும் மீறி கோட்டைக்குள் சென்றால், அங்கு பணியாற்றும் வினோதமான பெண்மணி, வெல்மாவை ஹிப்னாட்டிசம் செய்கிறார். அடுத்து, டெப்னி அழகான சிக் உடல் கொண்டவள் அல்லவா? அவளுக்கு உடை விற்கும் பெண், அதில் காற்று அடித்து அவள் உடல் பெரிதானதாக நம்பச் செய்கிறாள். அடுத்து, ஸ்கூபி டூ, சேகி இணையரை பசி இல்லாமல் இருக்கச்செய்து தைரியமானவர்களாக ஊர் மக்கள் தந்திரமாக மாற்றுகிறார்கள்.

Scooby-Doo! Frankencreepy Trailer - YouTube

இப்படி குழுவில் உள்ள அனைவரின் பலவீனங்களையும் நுணுக்கமாக கண்டுபிடித்து தாக்குவதால் அவர்கள் எல்லோரும் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இந்த வகையில் அனிமேஷன் தொடர் சற்று சீரியசாகி விட்டது. இறுதியில் சுபமான முடிவுக்கு வந்து சேருகிறது.


இதில் ஃபிரெட், டெப்னி என இருவரும் ரயில்பாதையில் இரும்பு முகமூடி மனிதருடன் போடும் சண்டை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள். இயற்கை எரிவாயு கிடைத்தும் கூட அதனை எப்படி என தெரியாமல் தடுமாறும் லூசு வில்லன்கள்களை என்ன செய்வது? பழிவாங்குகிற வேகத்தில் யோசிக்க மறந்துவிட்டார்கள் என குழுவே சிரிக்க அனிமேஷன் தொடர் முடிவுக்கு வருகிறது. வெல்மா இதில் வில்லியாக மாறுவதால் மொத்தக்குழுவுமே தடுமாறிவிடுகிறது. இதனால் சதியைக் கண்டுபிடிக்க சற்றே தாமதமாகிவிடுகிறது. மற்றபடி தொடரைப் பார்க்க நன்றாகவே இருக்கிறது. தொடரில் வரும் லாஜிக் சிக்கல்களை டெப்னியின் வலைத்தளத்தில் பார்வையாளர்கள் கேள்வி கேட்பது போல அமைத்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.  

thanks 

michael



கருத்துகள்