இந்தியாவில் நடக்கும் குற்றங்களுக்கு அமெரிக்காவில் சென்று புகார் கொடுக்க முடியாது! - ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்
ரவிசங்கர் பிரசாத், ஐடி அமைச்சர்
சமூக வலைத்தளங்களை முறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்திய
உள்ளது. இதைப்பற்றி அமைச்சர் பேசினார்.
மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை எதிர்த்து சமூக வலைத்தள நிறுவனங்கள் நிற்க காரணம் என்ன?
இந்தியா ஜனநாயக நாடு. சமூக வலைத்தள நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து வருமானம் ஈட்டத்தான் வருகின்றன. அவர்கள் குடிமக்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை கடைப்பிடித்துதான் ஆகவேண்டும்.
நீங்கள் கூறுகிறபடி விதிகளை அமைத்தால் அரசை விமர்சிக்கும் குரலகளை கூட எளிதாக தணிக்கை செய்யமுடியுமே?
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள விதிகள், சமூக வலைத்தளங்களை கையாள்வதற்கானவை அல்ல. அரசு, பிரதமரை விமர்சிக்கும் விமர்சனங்களை அனுமதிக்கிறோம். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அவதூறு செய்வது, அதனை தவறாக பயன்படுத்துவது ஆகியவற்றை கட்டுப்படுத்த நினைக்கிறோம். இளம்பெண்களை மார்பிங் செய்து புகைப்படங்களை வெளியிடுவது, ஆண் நண்பர் தனது தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அவரின் எதிர்காலத்தை கெடுப்பது ஆகிய செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு புகார் கொடுக்க நாம் அமெரிக்கா செல்ல முடியுமா? இன்று நீதிபதிகளைக் கூட மக்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். போலிச்செய்திகளின் எண்ணிக்கையும் கூடி வருகிறது.
புதிய விதிகளின்படி புகார்களை விசாரிக்க இந்தியாவில் தனி அதிகாரி ஒருவர் நியமிகப்படவேண்டும். இவர் தனக்கு வந்து புகார்களுக்கு பதினைந்து நாளில் நடவடிக்கை எடுக்கவேண்டு. இதுபற்றிய அறிக்கையை மாதம்தோறும் அரசுக்கு வழங்கவேண்டும். இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளன. 2018, 2019 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், பேஸ்புக்கில் பரிமாறப்பட்ட செய்திகள் எப்படி வன்முறையைத் தூண்டின என்பதை கூறியிருந்தனர். இது இந்தியாவின் இறையா்ணமையைப் பாதிக்கும் செயலாக மாறும் வாய்ப்பும் உள்ளது. எனவே அந்நிறுவனங்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்று அதற்கென தனி அமைப்பை உருவாக்க வேண்டும். தங்களின் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் இப்படி கூறும் கருத்துகளை கண்டுபிடிப்பது பிரைவசிக்கு ஆபத்தாகுமே?
வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முதலிலேயே ஒன்றை சொல்லிவிடுகிறேன். அதனை பயன்படுத்தும் சாதாரண வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை. அவர்கள் தங்களது செயல்பாடுகளை அப்படியதே தொடரலாம். ஒருவர் பொதுவெளியில் வெளியிடும் வெறுப்பைத் தூண்டும், குழு படுகொலைகளை ஏற்படுத்தும், கலவரத்தை ஏற்படுத்தும் பதிவுகளைப் பற்றிய தகவல்களை சேகரிப்போம். பெண்கள், குழந்தைகளைப் பற்றிய அவதூறு செய்திகள் படங்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வலம் வந்துகொண்டே இருக்கிறது. இவை பிற நாட்டு எல்லையிலிருந்து கூட உருவாக்க்ப்பட்டிருக்கலாம். கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது, ஏராளமான வெறுப்பைத் தூண்டும் செய்திகள் பரிமாறப்பட்டது நினைவிருக்கிறதா? இவற்றை எந்த வழியில் தடுப்பீர்கள். அதற்காகத்தான் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நாட்டின் பாதுகாப்பும் மக்களின் நலனும் பாதுகாக்கப்படும். பெண்கள். குழந்தைகளின் கண்ணியமும் காக்கப்படும்.
அப்படியானால் அரசு மக்கள் அனுப்பும் அனைத்து செய்திகளையும் கண்காணிக்குமா?
தொழில்நுட்பம் ஏற்படுத்தும் பிரச்னையை அதை வைத்தே தீர்க்கவேண்டியுள்ளது. பேஸ்புக் நிறுவனம், ஐந்து லட்சம் இந்தியர்களின் தகவல்களை கேம்பிரிட்ஸ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்திற்கு வழங்கியது நினைவிருக்கிறதா? அந்த நேரத்தில் நிறுவனம் பேசும் பிரைவசி என்பது எங்கே போயிற்று? இப்போது அந்த நிறுவனம் தங்ளளது வாடிக்கையாளர் தகவல்களை வாட்ஸ்அப் மற்றும் பிற வணிக நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்வதாக கூறியுள்ளது. நாம் உச்சநீதிமன்றம் கூறியுள்ள பிரைவசியை மதிக்கிறோம்தான். ஆனால் அதே தீர்ப்பில் தீவிரவாதிகள், ஊழல் செய்பவர்கள் ஆகியோருக்கு பிரைவசி உரிமை கிடையாது என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளது. கடையில் பொருட்களை வாங்குகிறீர்கள் அங்கு டிஜிட்டல் வழியில் உங்கள் பொருட்களின் பெயர் எண்ணிக்கை பதிவாகிறது. விமானத்தில் பயணிக்கும்போது, நீங்கள் செல்லும் இடத்தை விமான நிறுவனம் பதிவு செய்துகொள்கிறது. திருமணமானவரா, சம்பளவிவரம் ஆகியவற்றையும் கூட ஒருவர் அரசு அமைப்புகளுக்கு அளிக்க வேண்டியிருக்கிறது. தனியார் நிறுவன ஊழியர் மட்டுமே அரசுக்கு சம்பளம் பற்றிய விவரங்களை வழங்க வேண்டியதில்லை. இதில் மைனர் தொடர்பான விவரங்களை பாதுகா்க்கவேண்டியிருக்கிறது. மற்றபடி பிரைவசி என்பதை நீங்கள் முடிவு செய்யும்படி சூழல் இல்லை.
நீங்கள் கூறுவது உங்கள் பார்வைக்கோணமாக இருக்கலாம். ஆனால் அரசு தலையிடும்போது அது முழுமையான தணிக்கையாக இருக்குமே, குறிப்பிட்ட பதிவுகளை அகற்றுங்கள் என்று சொன்னால் விமர்சனங்கள் எப்படி சமூகவலைத்தளங்களில் இடம்பெற முடியும்?
நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இந்த விதிகளின் படி அரசு வெளியேதான் இருக்கும். தவறான பதிவுகள் இருந்தால் அதனை நீக்க புகார்தாரர் சமூக வலைத்தள பிரதிநிதியிடம் புகார் கொடுப்பார். குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கு அவர் பதில் தரவேண்டும். இப்படி விதிகளை விதிக்காதபோது, அமெரிக்காவின் கேபிடல் ஹில் தாக்குதல் போல செங்கோட்டையில் நடக்கலாம். விவசாயிகள் போராட்டத்தில் நடக்கலாம். சீனாவுக்கு லடாக் சொந்தம் என்று கூட பதிவுகள் இடப்பட்டன, கொரோனா இரண்டாவது அலையில் சிங்கப்பூரிலிருந்து பரவியது என்று கூறினார்கள். பிறகு இந்தியாவில் உருவானது, மோடி வேரியன்ட் என்று கூட சொன்னார்கள். இப்படி கூறப்பட்டது அனைத்தையும் நாங்கள் நீக்கினோம். நீங்கள் வணிகம் செய்யுங்கள், பணம் சம்பாதியுங்கள். ஆனால் இந்தியாவிலுள்ள சட்டங்களை மதியுங்கள். நாங்கள் எ்ப்போதும டிஜிட்டல் வடிவிலும் கூட இறையாண்மையை விட்டுக்கொடுக்க் மாட்டோம்.
ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் போலவே துணைக் குடியரசுத்தலைவரின் ட்விட்டர் கணக்கு கூட சரிபார்த்தல் நடவடிக்கைக்குப் பிறகு முடக்கப்பட்டது அல்லவா?
அந்த கணக்கு இப்போது திரும்ப செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ட்விட்டரை இங்கு வணிகம் செய்வதற்கு வரவேற்கிறோம். ஆனால் அரசியலமைப்புச்சட்டத்தை அந்த நிறுவனம் மதிப்பது முக்கியம்.
இந்துஸ்தான் டைம்ஸ்
ஸ்மிருதி காக் ராமச்சந்திரன்
கருத்துகள்
கருத்துரையிடுக