பிரிட்டிஷாரை பிற நாட்டு மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்! - எழுத்தாளர் வில்லியம் டால்ரைம்பிள்
வில்லியம் டால்ரைம்பிள்
இவர் company quartet என்ற பெயரில் நான்கு நூல்களை பாக்ஸ் பதிப்பாக வெளியிட்டிருக்கிறார். அடுத்தும் பெட்டி பெட்டியாக நூல்களை எழுதும் ஆராய்ச்சி செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.
ஜேஎல்எப் பார்முலா வேலைகளை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள். மக்கள் இப்போது படிப்பதை விட பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதாலா?
எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளைப் பற்றி பேசவேண்டுமென இந்தியர்கள் விரும்புகிறார்கள். மேலும் நாங்கள் எழுதும் நூல்கள் பத்து லட்சம் பேரில் ஒரு பகுதிப்பேர் மட்டுமே படிக்கவேண்டுமென உருவாக்குவதில்லை. நீங்கள் கூறுவதும் சரிதான். நிறையப் பேர் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு குளிர் கண்ணாடிகளை அணிந்துகொண்டுதான் வாசிப்பு விழாக்களுக்கு வருகிறார். ஆனால் இதிலும் கூட இளைஞர்கள் ஜெய்ப்பூர் இலக்கிய விழாக்களில் பங்கெடுத்து கேள்விகளை கேட்கத் தொடங்கியுள்ளனர்.
காலனித்துவ காலத்தை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம் இங்கிலாந்தில் அமைக்கப்பட வேண்டுமென கூறுகிறார்கள். ஆனால் தங்களது மூதாதையர்கள் செய்த பாவங்களை மக்கள் மறக்க விரும்பி அதிலிருந்து விலகிச்செல்ல விரும்பினால் தவறா?
இங்கிலாந்து அரசு தனது கடந்த கால கொடூரங்களை கவனமான வரலாற்றிலிருந்து அகற்ற நினைக்கிறது. ஆனால் இவர்கள் 1857இல் நடத்திய சண்டைகள், வங்கப்பிரிவினைகளை யாரும் மறக்க முடியாது. இங்கிலாந்து நாட்டு மக்கள் தங்கள் அரசரிடமிருந்து எந்தளவு குறைவாக கற்றிருக்கிறார்கள் என்பதை இந்தியர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை. இங்கிலாந்து நாட்டினரை பிற நாட்டினர் கடுமையாக வெறுத்து வருகின்றனர். இதனை மக்கள் உணர்வதேயில்லை. இந்த தன்மை மாறவேண்டும்.
இந்திய பிரிவினையைப் பற்றி உங்கள் மகன் சாம் கூட தனி நூல் எழுதுகிறார். உங்களைப் பின்பற்றுகிறாரா? நீங்கள் அவர் எழுதுவதற்கு ஏதாவது அறிவுரை கூறுவீர்களா?
நான் அவனுக்கு நூல்களை பரிந்துரைப்பதோடு, சிலரின் தொடர்புகளை கொடுத்ததோடு சரி. மற்ற விஷயங்களை தானே அவனே தேடிக்கொண்டான். இந்தியாவில் தந்தையைப் பின்பற்றும் மகன் போலவே அவன் இருக்கிறான். இந்த வகையில் எனது குடும்பத்தை இந்தியா ஈர்த்துவிட்டது.
வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறீர்கள். முகலாயர்களைப் பற்றி முழுமையாக எழுதிவிட்டீர்களா?
நான் எழுதிய நூலில் முகலாயர்கள் பற்றிய பகுதி விரிவாக இல்லை. பகதூர் ஷா ஜாபர் பற்றிக்கூட குறைவாகவே எழுதியுள்ளேன். எனக்கு கிழக்கிந்திய கம்பெனி இங்கு 1858ஆம் ஆண்டு வருவதற்கு முன்பிருந்த இந்தியா, புத்த மதம் இங்கிருந்து சீனாவுக்கு சென்ற வரலாறு, இந்தியர்களின் கணிதம், வானியல் எப்படி மேற்குலகிற்கு வந்தது என்பதைப் பற்றிய நூல்களை ஆராய்ச்சி செய்து எழுத நினைக்கிறேன். இது தனி பாக்ஸ் பதிப்பாக வரும்.
ஶ்ரீவஸ்தவா நெவாடியா
https://www.bloomsbury.com/uk/company-quartet-9781526633354
கருத்துகள்
கருத்துரையிடுக