இடுகைகள்

வல்லுறவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கள்ளக்காதல் கதையில் கொடூர கொள்ளை குழுவும் போதைப்பொருள் குழுவும் ஒன்றாக சேர்ந்தால்....

படம்
  தகத்தே லே தெலுங்கு நவீன் சந்திரா, திவ்யா பிள்ளை, அனன்யா ராஜ், ரவிசங்கர் க்ரைம் திரில்லர் பவானி மூவிஸ் - யூட்யூப் சேனல் ஏ பிளஸ் சான்றிதழ் வாங்கக்கூடிய பாலுறவு, தீவிர வன்முறை காட்சிகள் கொண்ட திரைப்படம். படத்தில் மூன்று கதைகள் உள்ளது. ஒன்று இன்ஸ்பெக்டர் போதைப்பொருட்கள் குழுவை தேடி அலையும் கதை. இதில் அவர், சில டபுள் ஏஜெண்டுகளை போதைப்பொருள் கேங்கில் இருந்து விலைக்கு வாங்கி தகவல்களை வாங்கி அவர்களை பிடிக்க முயல்கிறார். அந்த நேரத்தில் அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் மூலம் இன்னொரு வழக்கும் வருகிறது. அது ஒரு கொலை வழக்கு.  இரண்டாவது கதை, கொலைவழக்கு.இதில் நாயகன் வீட்டில் கொலை ஒன்று நடக்கிறது. அவரது வீட்டில் தங்கியிருந்த பெண் கொலை செய்யப்பட்டு ஹாலில் கிடக்கிறார். வயிற்றில் அலங்காரப் பொருள் ஒன்று துளைத்து சென்றிருக்கிறது. நாயகன், கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு அங்குள்ள கைரேகைகளை துடைக்கிறார். தடயங்களை அழிக்கிறார். பிறகு போலீசுக்கு போன் செய்து தகவல் கொடுக்கிறார். போலீசாரும் வந்து பெண்ணின் உடலை மீட்டு செல்கிறார்கள். தகவல் கொடுத்த நாயகன் மீது சந்தேகம் தோன்ற அவனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்...

இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!

படம்
  இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.  எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.  மற்றப...

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

தொடர்ச்சியாக கொல்லப்படும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் !

படம்
  பூட் சவுண்ட் சுரேஷ் கோபி, பாலா, ஹனி ரோஸ் மலையாளம் பிரிவு உபசார விழா நடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி, வீட்டுக்கு போகும் வழியில் கழுத்து அறுத்து கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க நாயகன் வருகிறார். கூடுதலாக, ஓய்வு பெற்ற இன்னொரு போலீஸ்காரரின் மகள் காணாமல் போகிறாள். இந்த வழக்கையும் நாயகனே விசாரிக்கிறார். அதில் அவருக்கு நிறைய உண்மைகள் தெரிய வருகிறது. கேரளத்தில் அவசரநிலை காலகட்டத்தில் காவல்துறை செய்த வல்லுறவு, கொலைகளை பின்னணியாக கொண்ட கதை. அவசர நிலையை சாதகமாக பயன்படுத்தி, காவல்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் குடும்பத்தை அழிக்கிறார்கள். பத்திரிக்கை நடத்துபவரின் மனைவியை வல்லுறவு செய்கிறார்கள். அவரது மகள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்தில் கொல்லப்படுகிறாள். பத்திரிகையாளர் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு பல்வேறு போலி வழக்குகள் வழியாக இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. கல்லூரி படிக்கும் மகள் காணாமல் போன செய்தியை ஒய்வுபெற்ற அதிகாரி, நாயகனுக்கு கூறுகிறார். நாயகனும் அதை ஏற்று மகளை தேடித்தருவதாக குறிப்பாக உயிரோடு... என்று கூறுகிறார். மகளைப் பற்றிய தகவல்களை விசாரித்தால், எந்த துப...

நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்!

படம்
              நிபந்தனைகளுக்கு உட்பட்டு வல்லுறவைக் கண்டிக்கிறோம்! கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அறிந்திருப்பீர்கள். உடனே களமிறங்கிய கூலிப்படை ஊடகங்கள் அதை வைத்து கல்லா கட்டா தொடங்கிவிட்டன. மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக வல்லுறவு படுகொலையை தற்கொலையாக மாற்ற முயன்ற மாநில அரசும் கூட நீதி வேண்டி பேரணி நடத்தியது.  அதிகாரத்தில் உள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, யாரிடம் நீதியை வேண்டுகிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சியை கலைத்து மாநில ஆட்சியை பிடிக்க மதவாத கட்சியின் சார்பு கொண்ட ஆளுநர், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். குடியரசுத் தலைவரை சந்திக்கவும் விரைந்தார். இதெல்லாம் படிக்கும்போது ஏதோ நம்மைச் சுற்றி அவல நகைச்சுவை நாடகம் நடப்பது போல தோன்றுகிறதா?  இந்து பார்ப்பன பாசிச தத்துவத்தில் புழங்கிய புதிய இந்தியா இப்படித்தான் இயங்குகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த அவரவர் தங்களால் முடிந்த பிரயத்தனத்தை செய்கிறா...

பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

படம்
               குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்! உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள். வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை. சீக்கிய ...

காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை!

படம்
              காற்றிலெங்கும் மரணத்தின் வாசனை! சத்தீஸ் மாநிலத்திலுள்ள ராய்பூர் விமானநிலையம். இங்கு ஆதிவாசிகளின் கலையை பிறருக்கு உணர்த்தும் வண்ணம் சிலைகள், ஓவியங்கள் உள்ளன. ஆனால், நிஜத்தில் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் மீது மாநில, ஒன்றிய அரசுக்கு அக்கறை உள்ளதா என்றால் கிஞ்சித்தும் இல்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஆதிவாசி மக்கள் காவல்துறை, மத்திய ரிசர்வ் படையினரால் தாக்கப்பட்டு, வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கும், அரசுக்குமான போர் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும்போல, பாதிக்கப்படுவது இருவருக்கும் இடையில் சிக்கியுள்ள மக்கள்தான். கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் முதல் பழங்குடி முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரில் பதவி ஏற்றார். அந்த நொடி முதலே நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல், ஆதிவாசி மக்களை கைது செய்யப்படுவது ஆகிய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. ஆபரேஷன் பிரகார் என்ற பெயரில் நக்சலைட்டுகளின் மீதான தாக்குதல் தீவிரமாகியுள்ளது. இதற்கிடையில் துணை முதல்வர் அமைதி பேச்சுவார்த்தை என்று வினோதமான சொல்லாடலை ஊடகங்கள...

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

படம்
  நாடியா முராத் nadia murad நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.  2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார்.  2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார்....

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோ...

செக்ஸ் குற்றவாளிகளை வேட்டையாடி பழியை மர்மநாவல் விற்கும் புத்தகடைக்காரர் மீது போடும் கொலைகாரன் யார்?

படம்
  லீக்கிங் புக்ஸ்டோர்  தாய்லாந்து டிராமா - டி டிராமா 10 எபிசோடுகள் மழைக்கு ஒழுகும் புத்தக கடை, இதை கேட்கவே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? அதேதான் தொடரின் பலமும் கூட. மொத்தம் நான்கு கல்லூரி நண்பர்கள் டிடக்‌ஷன் எனும் மர்மக்கதைகள் மட்டுமே விற்கும் புத்தக கடையில் சந்திக்கிறார்கள். இதில் முதன்மையானவர், அதாவது நாயகன் காவோ வென். இவர்தான் நால்வரில் சற்று வசதியான வீட்டுப்பிள்ளை, முன்னாள் நீதிபதியின் மகன். ஆனால் சட்டம் படிக்காமல் புத்தக கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். அடுத்து, உளவியல் மருத்துவராக உள்ள நண்பர், அவரோடு ஒரே அறையில் வசிக்கும் பெண் தோழி, அவள், தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் வேலை செய்கிறாள். இவர்களுக்கு அடுத்து கல்லூரியில் ஜூனியராக படித்த லான் என்ற இளம்பெண். இவர் மருந்துக்கடையி்ல் வேலை செய்கிறார்.  காவோ வென்,புத்தக கடை வருமானத்தை வைத்துதான் தனது செலவுகளை சமாளிக்கிறார். மர்மநாவல் போட்டி ஒன்றில் பங்கேற்று கதை ஒன்றை எழுதி வருகிறார். தி யெல்லா டாக்சி கேப் என்பது அதன் பெயர். இதில் பரிசாக கிடைக்கும் பணத்தை வைத்து கடையில் மழைநீர் ஒழுகும் பிரச்னையை சரி செய்ய நினைக்க...

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவ...

இனவெறி கொடுமைக்கு இழப்பீடு வேண்டும்! - இது பார்படோஸ் புரட்சிக்குரல்

படம்
  பார்படோஸிலுள்ள தேவாலயம் இனவெறிக்கும் கொத்தடிமைத்தனத்திற்கும் இழப்பீடு வேண்டும்! பார்படோஸ், இன்று குடியரசு நாடு, ஆனால், அங்கு நானூறு ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பின கொத்தடிமைகளை கொண்டிருந்தது. அங்கு விளைந்த கரும்பை விளைவித்தவர்கள் கறுப்பினத்தவர்கள்தான். கரும்பு விளைச்சலுக்கு டிராக்ஸ் ஹால் என்ற பகுதி புகழ்பெற்றது. லட்சக்கணக்கான கறுப்பினத்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக வேலை பார்க்கவைக்கப்பட்டனர். இப்படி வந்தவர்களில் வெள்ளையர்களின் கொடுமை, காலநிலை, நோய் என பல்வேறு சிக்கல்களால் முப்பதாயிரம் பேருக்கும் மேல் இறந்தனர். இந்த தொழிலாளர்களைப் பற்றிய ஆவணங்களைக் கூட வெள்ளை முதலாளிகள் மறைத்து, பின்னர் அதை நெருப்புக்கு இரையாக்கினர். அதனால் பெரிதாக நிலைமை ஏதும் மாறிவிடவில்லை. வெள்ளையர்கள் இன்றும் வசதியானவர்களாகவே வாழ்கின்றனர். கறுப்பினத்தவர்கள் இழப்புகளை சந்தித்து அதிலிருந்த மீண்டு வர பல தலைமுறைகள் ஆகிவிட்டது. இன்று அங்கு வேலை செய்தவர்களின் பேரன், பேத்திகள் என அனைவரும் இணைந்து தங்கள் முன்னோர் அங்கு கொத்தடிமைகளாக இருந்து உழைத்த உழைப்பிற்கு இழப்பீடு கேட்டு வருகின்றனர...

வயதான பெண்மணிகளைத் தேர்ந்தெடுத்து வல்லுறவு செய்த மர்ம ஆசாமி

படம்
  ஒரே ஆண்டில் மக்களை மீளாத பயத்தில் ஆழ்த்த முடியுமா? அதை வல்லுறவு ஆசாமி ஒருவர் செய்தார். இவரை வெஸ்ட் சைட் ரேபிஸ்ட் என்று அழைக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1974-1975ஆம் ஆண்டில் மட்டுமே 33 பெண்களை மர்ம ஆசாமி வல்லுறவு செய்தார். அதில் பத்து நபர்களைக் கொன்றார். இறந்த பெண்கள் அனைவருமே 63 – 92 வயது கொண்டவர்கள். முதிய பெண்களை தேடிக் கொல்வதால் பலரும் பீதியடைந்தனர். எனவே, சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து துப்பாக்கி, கத்தி, கோடாரி என வாங்கத் தொடங்கினர். எல்லாம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான்… வேறு எதற்கு? யார் கொலையாளி என பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களையே சந்தேகமாக பார்த்துக்கொண்டார்கள். தூங்கும்போதும் கூட கைவிரல்கள் துப்பாக்கி ட்ரிக்கரை தொட்டபடி இருந்தன. 1974ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று, மேரி   என்ற 72 வயது பெண்மணி கொல்லப்பட்டார். அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வயதான பெண்கள் தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டனர். முன்னர் சொன்னது போல அதில், பத்து பேர் கொல்லப்பட்டனர்.   காவல்துறை முடிவு இல்லாத தேடுதலை நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால் கொலையாளி கிடைத்த பாடில்லை. ஆனால் அதற்கு ப...

பெற்றோருக்கு நீதிவேண்டி பெண்களை கொலை செய்யத் தொடங்கிய சீரியல்கில்லர்- ஸ்டானியாக்

படம்
  போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டானியாக், அவரது சிறுவயது வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பெற்றோர், தங்கை ஆகியோர் காரில் சென்றபோது இன்னொரு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள். குடும்பத்தின் மீது பாசம் வைத்திருந்த ஸ்டானியாக், மனம் உடைந்து போனார். போலந்து நாட்டின் நீதித்துறையும் ஊழலுக்கு அடிபணிந்ததுதான். அங்கேயும் நீதிதேவதையை   பாண்டேஜ் வகையில் ஆதி தொழிலுக்கு அனுப்பிவிட்டார்கள். ஸ்டானியாக்கின் பெற்றோரைக் கொன்ற வாகனத்தை ஓட்டி வந்தவர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர் அல்லது தொடர்புகளை வைத்திருந்தவர். விமானப்படை கேப்டன் மனைவி. நீதித்துறை காசுக்கும் செல்வாக்குக்கும் எப்போதும் அடிபணியும் என்ற வாக்கு மீறப்படவில்லை. அவரை குற்றவாளி இல்லை என விடுவித்துவிட்டனர். குற்றம் சாட்டப்பட்டவரின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. அதை மனதில் குறித்து வைத்துக் கொண்டவர், படித்து முடித்து வேலை தேடினார். அரசு அமைப்பில் பதிப்பகத்தில் மொழிபெயர்ப்பாளராக வேலை கிடைத்தது. அங்கு சில ஆண்டுகள் வேலை செய்து எப்படி பெற்றோரின் சாவுக்கு நீதியைப் பெறுவது என யோசித்தார். அதற்கு செய்யவேண்டிய முதல் வேலை, அரசு நாள...