இடுகைகள்

அதானி குழுமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!

படம்
            செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி  வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...

பங்கு முறைகேட்டை விசாரிக்க வேண்டிய செபியின் தலைவரே குற்றவாளியானால்... ஹிண்டென்பர்க் அறிக்கை 2024

படம்
        ஐபிஇ பிளஸ் பண்ட் நிதி நிறுவனத்தின் முதலீட்டு அதிகாரியின் பெயர் அனில் அகுஜா. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஒன்பது ஆண்டுகள் தலைவராக பணியாற்றியுள்ளார். பணி விலகிய ஆண்டு, 2017. அதானி பவர் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். செபியின் தற்போதைய தலைவரான மாதபி புச், அவரின் கணவர் ஆகியோர், அதானியின் வெளிநாட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதானி, முறைகேடான பங்கு வர்த்தகத்தை செபியின் விசாரணை, தண்டனை பற்றிய பயமின்றி எப்படி செய்கிறார் என ஹிண்டென்பர்க் நிறுவனம் யோசித்தது. அதானி குழுமத்தில், செபி தலைவரான மாதபி புச்சின் பங்கு முதலீடு பற்றி தெரிய வந்ததும் விவகாரத்தை எளிதாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. பெர்முடா, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் உள்ள வினோத் அதானியின் போலி நிறுவனங்களில் செபியின் தலைவரான மாதபி புச், அவரின் கணவர் தாவல் புச் பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதை முதலில் ஹிண்டென்பர்க் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.   2015ஆம் ஆண்டு, ஜூன் 5 ஆம் தேதி, சிங்கப்பூரில் ஐபிஇ பிளஸ் பண்டில் புச் தம்பதியினர் செய்த முதலீடு பற்றிய தகவல் தெரியவந்தது. பங்கு முதலீட்டிற்கான நிதி ...

பங்குச்சந்தை மோசடியின் வலைப்பின்னல் - அதானி குழும மோசடியில் செபிக்கு உள்ள கூட்டுப்பங்கு

படம்
            பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள போலி நிறுவனங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் பங்குச்சந்தை அமைப்பான செபி ஆச்சரியமூட்டும் விதமாக, அதானி குழும மோசடி பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விசாரணையையும் முறையாக நடத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் மிகப்பெரும் மோசடியான அதில், மொரிஷியஸ் நாட்டில் பரிமாறிய பங்குகள், அரசிடம் தெரிவிக்கப்படாத முதலீடுகள், பங்கு முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அதற்குப்பிறகு, அந்த விசாரணையை எங்களோடு சேர்ந்து நாற்பது தனியார் ஊடக நிறுவனங்கள் புலனாய்வு செய்து விரிவாக்கின. இந்திய அமைப்பான செபி, அதானி குழுமம் செய்த முறைகேட்டை பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக செபி நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹிண்டென்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், 106 பக்க புலனாய்வு அறிக்கையில் எந்த தகவல் பிழையும் உள்ளதாக கூறவில்லை. பதிலாக, கொடுத்துள்ள விவரங்கள் இன்னு...

மோசடியாளரான கேட்டன் பரேக்குடன் கைகோத்த அதானி குழுமம்! பகுதி 7 - ஹிண்டன்பர்க் அறிக்கை தமிழாக்கம்

படம்
  ஒழுங்குமுறை அமைப்பான செபி,   செய்த அறுபது விசாரணைகளை ஆராய்ந்ததில், அதானி குழுமம் கடந்த இருபது ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவன ஆய்வாளர்கள் பேசியுள்ளனர்.   1999 தொடங்கி 2005 வரையிலான காலகட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபற்றி செபி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறியுள்ளது. இதுவரை செபி, அதானி குழுமத்தின் 90 நிறுவனங்கள் அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் என பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இந்த தடையில் அதானி குழும முதலீட்டாளர்களும் உள்ளடங்குவார்கள். செபி, அதானி முதலீட்டாளர்களுக்கு, முதலில் தடை விதித்தது. பின்னர் அந்த தண்டனை அபராதமாக மாற்றப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பிற முறைகேடுகள், மோசடிகள் பெரும்பாலும் விசாரணைக்கு வரவில்லை. அப்படி விசாரணைக்கு வந்தாலும்   வேண்டுமென்றே அவை தாமதப்படுத்தப்பட்டன. 1999-2001ஆம் ஆண்டு கேட்டன் பரேக், பத்து நிறுவனப் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தினார். இ...