மோசடியாளரான கேட்டன் பரேக்குடன் கைகோத்த அதானி குழுமம்! பகுதி 7 - ஹிண்டன்பர்க் அறிக்கை தமிழாக்கம்

 










ஒழுங்குமுறை அமைப்பான செபி,  செய்த அறுபது விசாரணைகளை ஆராய்ந்ததில், அதானி குழுமம் கடந்த இருபது ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி ஊழல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுபற்றி ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவன ஆய்வாளர்கள் பேசியுள்ளனர். 

1999 தொடங்கி 2005 வரையிலான காலகட்டத்தில், பங்குகள் விலை உயர்ந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுபற்றி செபி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆவணங்களில் கூறியுள்ளது. இதுவரை செபி, அதானி குழுமத்தின் 90 நிறுவனங்கள் அல்லது பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட தனிநபர்கள் என பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபட தடை விதித்துள்ளது. இந்த தடையில் அதானி குழும முதலீட்டாளர்களும் உள்ளடங்குவார்கள்.

செபி, அதானி முதலீட்டாளர்களுக்கு, முதலில் தடை விதித்தது. பின்னர் அந்த தண்டனை அபராதமாக மாற்றப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் பிற முறைகேடுகள், மோசடிகள் பெரும்பாலும் விசாரணைக்கு வரவில்லை. அப்படி விசாரணைக்கு வந்தாலும்  வேண்டுமென்றே அவை தாமதப்படுத்தப்பட்டன.

1999-2001ஆம் ஆண்டு கேட்டன் பரேக், பத்து நிறுவனப் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தினார். இதற்காக அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 14 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது, பங்கு விலை உயர்த்தப்பட்ட நிறுவனத்தில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் (அதானி என்டர்பிரைசஸ் ) நிறுவனமும் உண்டு. (ப.148.-149)

2002ஆம் ஆண்டு, கேட்டன் பரேக் செய்த ஊழல் பற்றி நாடாளுமன்ற விசாரணை செய்யப்பட்டது. இந்தியப் பங்குச்சந்தையில் நடைபெற்ற பெரிய, மோசமான ஊழல் என்று இதைக் கூறலாம்.

1999ஆம் ஆண்டில் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் பங்குகளின் விலை ரூ.495 லிருந்து 1,300 ஆக அதிகரித்தது. வளர்ச்சி சதவீத அளவு 162%. பின்னர் விலை குறைந்தது. 2000ஆம் ஆண்டில் மே, ஜூலை மாதங்களில் பங்கு விலை ரூ.570 ரூபாயிலிருந்து ரூ.1,111 என அதிகரித்தது. வளர்ச்சி சதவீதம் 95% என செபி செய்த விசாரணையில் தெரிய வந்தது. (ப.2). இப்படி பங்கு விலையை உயர்த்திய திட்டத்தில் மோசடியாளர் கேட்டன் பரேக் முக்கியமான பங்கு வகித்தவர் என கண்டறியப்பட்டு, அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்படவேண்டும் என்ன செபி தனது ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது. (ப. 142)

2007ஆம் ஆண்டு, இந்த வகையில் ஏழு அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க, விற்க கூடாது என தடை செய்யப்பட்டன.  அதானி குழுமத்தில் முதலீட்டாளர்கள் மற்றும் கேட்டன் பரேக் ஆகியோர் பங்கு விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விதிகள் 4 ஏ, பி. சி, டி(மோசடி, பங்கு முறைகேட்டு தடுப்பு விதிகள்படி) அதானி குழுமம் பங்கு விற்பனையில் விதிகளை மீறியுள்ளது என குற்றம் தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ப.4, ப.46)

அதானி குழுமம் பங்கு விதிகளை மீறியுள்ளதோடு, கேட்டன் பரேக்குடன் இணைந்து செயல்பட்டுள்ளதையும் செபி அமைப்பு திட்டவட்டமாக உறுதிபடுத்தி கூறியுள்ளது.

‘’அதானி குழுமத்தின் செயல்பாடு, கேட்டன் பரேக்கின் நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு இடையிலான வணிகப் பரிவர்த்தனைகளை ஆராய்ந்ததில் சட்டவிரோத செயல்பாடுகள் தெரியவந்துள்ளன. பங்குகள் விலை உயர்வு, போலி நிறுவனங்களின் செயல்பாடு ஆகிய தவறுகளுக்கு நீதித்துறை மூலம் சரியான தண்டனை அளிக்கப்பட்டால் எதிர்காலத்தில் இதுபோல முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கலாம்.

 அதானி குழுமத்திற்கு வழங்கப்படும் தண்டனை, பிற நிறுவனங்களுக்கும் சரியான எச்சரிக்கையாக அமையும்.’’ (ப.45,46)

அதானி குழுமத்தைச் சேர்ந்த பதினான்கு தனியார் நிறுவனங்கள், தங்கள் பங்குகளை மோசடியாளர் கேட்டன் பரேக் நிர்வாகம் செய்த பதினொரு நிறுவனங்களுக்கு மாற்றியிருந்தன. இந்த பரிவர்த்தனையில் 2000ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை 75 மில்லியன் டாலர்கள் பரிவர்த்தனையாகியிருந்தன. இவை செபி விசாரணையில் வெளியே வந்த தகவல்களாகும். (ப.3, ப.32, ப.39)

அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் ஒன்று. இதில் நிறுவனப் பங்குகளை போலியான தேவை இருப்பது போல காட்டி அதிகளவு பங்குகள் இருப்பதாக் மாற்றி முறைகேடு செய்தார். இந்த தகவலை பங்குச்சந்தை தீர்ப்பாயகத்தின் நீதிபதி உறுதிப்படுத்தி கூறினார்.

‘’பங்குச்சந்தையின் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, அதனை உடைத்து வெளிப்படைத் தன்மையை இல்லாமல் செய்யும் மோசடியை செய்துள்ளனர். பங்குகளின் விலையை மாற்றி அமைத்து செய்யும் சட்டவிரோத வணிகம் பங்குச்சந்தையை தவறாக மாற்றி அமைத்துவிடும்’’ என்றார். (ப.51)

குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கான வேலைக்காகவே கேட்டன் பரேக்கிற்கு நிதியை வழங்கியதாக அதானி குழுமம், செபியிடம் விளக்கம் கொடுத்தது.(ப.5-6)

இதை செபி ஏற்றுக்கொள்ளவில்லை. ‘’பங்குச்சந்தை என்பது அதன் இயல்பில், நிதி பரிவர்த்தனைக்கானது அல்ல. ஒருவருக்கு பணம் தேவை என்றால் அவர் தனது நிறுவனத்தில் பங்குகளை சந்தையில் விற்று பணத்தைப் பெறலாம். ஆனால் குறைந்த கால பண ஈட்டுதலுக்கான உத்திகளைப் பயன்படுத்திய மோசடியாளாரான கேட்டன் பரேக்குடன் வணிகத் தொடர்பு கொள்வது தவறானது ’’ என்றது.

2008ஆம் ஆண்டு செபி தனது நிராகரித்தலை மாற்றி அதானி குழுமத்தை தடை செய்யாமல் தண்டனையையும் குறைத்துக்கொண்டது. 1.05 மில்லியன், 19 ஆயிரம் மில்லியன் என பல்வேறு வழக்குகளில் அபராதம் செலுத்தியது செபியின் ஆவணங்களில் தெரிய வருகிறது.

செபி அமைப்பு 2003ஆம் ஆண்டு பிந்தைய மாதங்கள் தொடங்கி பங்கு முறைகேடுகள் பற்றி விசாரித்து தகவல்களை சேகரித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், பங்கு தரகர்கள் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

 தனித்தனியாக நடத்தப்பட்ட 21 விசாரணைகள், 34 தரகு நிறுவனங்கள், தனியாக இயங்கிய பங்கு தரகர்கள் ஆகியோர் குற்றச்சாட்டில் மாட்டினர். ‘’போலியான பங்கு விற்பனை மூலம் அதன் மதிப்பை உயர்த்திக் காட்டியது. போலியான பங்குகள் செயற்கையாக விலையை உயர்த்திக் காட்டுவது ஆகியவற்றை அதானி குழுமம் செய்துள்ளது’’. (ப.2) பின்னாளில் மோசடி குற்றங்களை செய்தவர்களை செபி விடுவித்துவிட்டது.

2003ஆம் ஆண்டு பத்தொன்பது நாட்களில் திடீரென அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனப் பங்குகளின் வளர்ச்சி 128 சதவீதமாக உயர்ந்தது.  இது பலரையும் சந்தேகப்பட வைத்தது.

செபி அமைப்பு, ஆறு ஆண்டுகளாக பங்கு முறைகேடு வழக்குகளை விசாரித்தது.  ‘’துணை தரகராக பங்கு விற்பனையில் கலந்துகொண்டு செயற்கையாக பங்கு விற்பனையை அதானி குழுமம் செய்திருக்கிறது. இந்த வகையில் வணிகம் முறைகேடாக நடைபெற்றிருக்கிறது‘’ என்று அறிக்கையில் கூறியது. (ப.15)

 குறைந்த அபராதம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் தடை வரை தண்டனை நீண்டது (ப.18, ப.22). இந்த தண்டனை பற்றிய அறிக்கையில்  2003ஆம் ஆண்டு அதானி குழும முதலீட்டாளர்கள் செய்த பங்கு முறைகேடுகள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

2004ஆம் ஆண்டு ஜூலை – 2005ஆம் ஆண்டு செப்டம்பர் ஆகிய காலகட்டங்களில் அதானி எக்ஸ்போர்ட்ஸ் (அதானி என்டர்பிரைசஸ்) பங்கு விற்பனை முறைகேடு தொடர்பாக 30 தரகு நிறுவனங்கள், பங்கு தரகர்கள், தனிநபர்கள் பற்றி செபி விசாரணை செய்தது.

 ‘’இதுபற்றிய விசாரணையில் பல்வேறு நிறுவனங்கள், அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிட். பங்குகளை முறைகேடான வகையில்  செயற்கையான அளவில் உயர்த்திக்காட்டி வணிகம் செய்துள்ளது தெரிய வந்தது. இந்த வணிகம், சந்தையின் சமநிலையைக் குலைத்ததோடு, பங்குகளின் விலை நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்பவும் நிர்ணயிக்கப்படாமல் வேறுபட்டு இருந்தது’’. (ப.2)

2004ஆம் ஆண்டு ஜூலை மாதம், 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த காலகட்டங்களில் முறைகேடு முதல் கட்டமாக நடைபெற்றது. அப்போது அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 57 சதவீதம் (ரூ.481 –ரூ.756) உயர்ந்தது. 2005ஆம் ஆண்டு ஆகஸ்டிலும், 2005ஆம் ஆண்டு செப்டம்பரிலும் அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 15 சதவீதமாக உயர்ந்தது (ப.1). இதற்கு தண்டனையாக நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. முறைகேட்டில் தொடர்புடைய பிறர் தண்டனையை ஏற்று அபராதம் கட்டினர்.

2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் செபி அமைப்பு, பங்கு விலை முறைகேட்டில் அதானி குழும நிறுவனங்கள், அதன் முதலீட்டாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறவில்லை என்பதைக் கவனிக்கவேண்டியது அவசியம். 

 

 


கருத்துகள்